நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், செப்டம்பர் 17, 2024

புரட்டாசி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி முதல் நாள்
செவ்வாய்க்கிழமை


புரட்டாசி

புரட்டாசி  தமிழ் காலக் கணக்கின்படி  ஆறாவது மாதம் ஆகும்.

புரட்டாசி முதல் நாள் (செப் 18)
பௌர்ணமி..

புரட்டாசி இரண்டாம் நாளில் இருந்து இயன்ற அளவிலான தான தர்மங்களுடன் மஹாளய பட்சம் ஆரம்பமாகின்றது..

புரட்டாசி 16 புதன்  (அக் 2) அன்று மஹாளய அமாவாசை..
ஆத்மார்த்தமாக முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடன்களுக்கான நாள்.

மஹாளய அமாவாசையைத் தொடர்ந்து கலைமகள் திருவிழா ... 


புரட்டாசி 25 வெள்ளி  (அக் 11) அன்று சரஸ்வதி பூஜை.. மறுநாள் விஜயதசமி..

புரட்டாசி - ஜோதிடக் கணக்கில் கன்யா மாதம் எனப்படுவது.. கன்யா ராசிக்கு உரியவன் புதன்.. 

புதனுக்கு அதிபதி ஸ்ரீமந் நாராயணன்..  

பெருமாள் வழிபாட்டிற்கு உரிய சனிக்கிழமைகள் புரட்டாசியில் சிறப்புக்கு உள்ளாகின்றன..


அவரவர் குடும்ப வழக்கப்படி  பெருமாளுக்கு தளிகை சமர்ப்பித்து ஆராதனை செய்வதும் அன்னதானம் செய்வதும் பெரு மகிழ்ச்சிக்குரியவை..

இப்படியாக -  நன்மைகளை நிறைத்துக் கொண்டு வந்திருக்கின்றது புரட்டாசி..

எல்லாருக்கும் மங்கலம் என்று இருகரம் நீட்டி வரவேற்போம்..


நின்ற மாமருது இற்று வீழ  நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கைதொழும் இணைத் தாமரை அடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திட  கடிது ஆநிரைக்கு இடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திரு வேங்கடம் அடை நெஞ்சமே.. 1020

எண் திசைகளும் ஏழ் உலகமும் வாங்கி பொன் வயிற்றில் பெய்து
பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன் பால் மதிக்கு இடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன்  ஒள்ளெயிற்றொடு
திண் திறல் அரியாயவன்  திருவேங்கடம் அடை நெஞ்சமே.. 1023
-: திருமங்கையாழ்வார் :-
 ஓம் ஹரி ஓம்
**

10 கருத்துகள்:

  1. புரட்டாசியைக் கொண்டாடுவோம்.  நாளை முதல் மஹாளயபட்சம்.  பதினைந்து நாட்களுக்கு வெங்காயம் பூண்டு இலலாத பத்தியம்தான்!  முருங்கை போன்ற காய்களும் உபயோகப்படுத்த முடியாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் சொல்கின்ற அளவுக்கு இருப்பதில்லை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. புரட்டாசி மாதத்தின் சிறப்பு பதிவு தொகுப்பு நன்றாக உள்ளது. தெய்வ சிந்தனைகள், விரதங்கள் நிறைந்த மாதமிது. இறைவனை மனமாற பிரார்த்தனைகள் செய்து அனைவருக்கும் நல்லதே நடக்க பிரார்த்திப்போம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நேற்றைய பதிவுக்கு நான் தந்த கருத்துரை காணவில்லையே? நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்றைய கருத்து பதிவாகி விட்டது

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி

      நீக்கு
  3. புரட்டாசி மாதம் குறித்த தகவல்கள் சிறப்பு ஜி

    பதிலளிநீக்கு
  4. புரட்டாசி மாத சிறப்புகள் அருமை.
    படங்கள் அழகு.
    பாடலை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் நமோ வெங்கடேசாய..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி

      நீக்கு
  5. புரட்டாசியின் சிறப்பு - நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  6. புரட்டாதி மாதத்தின் சிறப்புகள் பலவும் கண்டோம்.

    புரட்டாதி சனி நமது நாட்டில் சனிபகவானை நினைத்து விரதம் இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..