நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, செப்டம்பர் 01, 2024

நம் செந்தில் 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 16 
ஞாயிற்றுக்கிழமை



கள்ளி முதுகாட்டில் ஆடி கண்டாய்
காலனையுங் காலாற் கடந்தான் கண்டாய்
புள்ளி உழைமானின் தோலான் கண்டாய்
புலியுரிசேர் ஆடைப் புனிதன் கண்டாய்
வெள்ளி மிளிர்பிறை முடிமேற் சூடி கண்டாய்
வெண்ணீற்றான் கண்டாய் நம் செந்தில் மேய
வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.  6/23/4 

- என்று, திருநாவுக்கரசர் போற்றுகின்ற  திருத்தலம்..

கடந்த ஞாயிறன்று இரவு தஞ்சையில் இருந்து புறப்பட்டு விடியற்காலையில் திருச்செந்தூரை அடைந்தோம்..

திருச்செந்தூர் கோயில் வளாகத்தின் அடையாளமே மாறிக் கிடக்கின்றது..

கோயில் வாசலில் இருந்து நாழிக் கிணறு வரை இருந்த பழைமையான நிழற்கூரை அப்புறப்படுத்தப்பட்டு புதிதாக தகரக் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.. 

வள்ளி குகைக்கு செல்கின்ற பாதை அடைக்கப்பட்டுள்ளது.. மேலைக் கோபுரத்தின் கீழ் ஸ்ரீ சங்கிலி பூதத்தாரையும் தரிசிக்க இயலவில்லை.. 

மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன..

மாதாந்திர கார்த்திகையும் கோகுலாஷ்டமியும் சேர்ந்து வந்ததால் பெருந்திரளான பக்தர்கள்..

கோயிலின் வாசலில் இருந்து மிக நீ.... .... ....ண்ட வரிசை நாழிக் கிணற்றுக்கு.. 

முழங்கால் வலியினால் நான் ஒதுங்கிக் கொள்ள வரிசையில் நின்ற மகன் மூன்று மணி நேரம் கழித்துத் தீர்த்தத்துட்ன் வந்தான்.. 

இதுவே புண்ணியம் என்று நாழிக் கிணற்றின் தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக் கொண்டோம்...

மூத்தோருக்காக  என்று புதிதாக வரிசை
அமைத்திருக்கின்றனர்.. ஆதார் அட்டையைக் காட்டி விட்டு அந்த வழியில் சிரமம் இல்லாமல் சென்று பெருமானை தரிசனம் செய்தோம்.. 

எல்லாம் முருகனின் திருவருள்..








தினமும் மாலை வேளைகளில் வேல் மாறல், கந்தரநுபூதி கேட்பது வழக்கம்.. இதன்படி தரிசனம் செய்தபின் கோயிலுக்குப் பின்புறம் யானைக் கொட்டகையின் அருகில் இருந்து கந்தரநுபூதியின் திருப்பாடல்களைக் கேட்டேன்.. 

சில விநாடிகளில் அருகிருந்த அலுவலகக் கூரையின் மீது மயில் ஒன்று இறங்கி தோகை விரித்து ஆடியது.. 

கூடவே,  வேறொறு மயிலும் வந்து பக்தர்களின் மத்தியில் ஒய்யாரமாக நடந்து அழகு காட்டியது...

மயில் வந்து ஆடுவதெல்லாம் இங்கே சர்வ சாதாரணம் தானே!..

- என்றாலும் தளர்வுற்றுக் கிடந்த நெஞ்சுக்கு மிக மிக ஆறுதலாக இருக்கின்றது...




தடக்கொற்ற வேள் மயிலே இடர் தீரத் தனிவிடில் நீ
   வடக்கிற் கிரிக்கப் புறத்து நின் தோகையின் வட்டமிட்டுக்
      கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனக சக்ரத்
         திடர்க்கப் புறத்துந் திசைக்கப் புறத்துந் திரிகுவையே.. 96
-: கந்தர் அலங்காரம் :-

முருகா முருகா..
முருகா முருகா..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் யாவையும் அழகாக இருக்கிறது. நல்லபடியாக தாங்கள் திருச்செந்தூர் கோவில் சென்று செந்திலாண்டவரை தரிசித்து வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.
    தங்கள் பதிவால் நானும் திருசெந்திலாண்டவர் தரிசனம் பெற்றுக் கொண்டேன். அனைவரையும் முருகன் நல்லபடியாக வைத்திருக்க வேண்டிக் கொள்கிறேன்.

    கோவிலில் மயிலின் வருகையும், அதன் படங்களும் பற்றிய விபரங்கள் கேட்க, பார்க்க நன்றாகவிருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு
  2. திருச்செந்தூர் பார்த்ததில்லை.  இனி நான் நாள் தெரிவு செய்து தரிசனத்துக்குச் செல்கையில் இதுவரை அல்லது முன்னர் நீங்கள் தரிசித்த புழங்கிய இடங்களை நான் காணமுடியாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///நீங்கள் தரிசித்த புழங்கிய இடங்களை நான் காண முடியாதா?///

      எல்லாம் மாறிக் கொண்டு இருக்கின்றன.. எதையும் சொல்வதற்கு இல்லை.. நம் நாட்டுக்கு கல்வி கற்பிக்க வந்தவர்களால் தான்
      ( நாடு பிடிக்க வந்த அன்னியர்களால் தான்) இந்துக் கோயில்கள் ஏற்றம் பெற்றன என்று கூட புதிய கதைகள் வருங்காலத்தில்
      உருவாகக் கூடும்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. திருச்செந்தூர் தரிசனம் கிடைத்தது.

    முதியோருக்கான வரிசை நல்ல செயல்.

    செந்தூர் ஆண்டவா சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி..

      நீக்கு
  4. திருச்செந்தூர் தரிசனம் எளிதாக கிடைத்தது மகிழ்ச்சி.
    முதியவர்களுக்கு தனி வரிசை என்று கேட்கும் போது மகிழ்ச்சி.
    மயில் நடனம் அருமை, படங்கள் அழகு.
    அப்பர் பாடலை பாடி முருகனை வேண்டி கொண்டேன்.
    குலதெய்வ வழிபாடு, முருகன் வழிபாடு மனம், மற்றும் உடல் ஆரோக்கியத்தை தந்து இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ..

      நீக்கு
  5. மயில் படங்கள் அழகு. திருச்செந்தூர் தரிசனம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி வெங்கட் ..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..