நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், செப்டம்பர் 09, 2024

கற்குவேல்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 24
திங்கட்கிழமை


ஆவணி இரண்டாவது வாரம் புதன் கிழமை முற்பகல்..

ஸ்ரீகற்குவேல் ஐயனார் திருக்கோயில்..

இக்கோயில் திருச்செந்தூரில் இருந்து 
திருநெல்வேலி சாலையில் (காந்தி புரம் வளைவைக் கடந்து) 12 கிமீ   தொலைவில் குதிரை மொழி தேரிக் குடியிருப்பு எனும் கிராமத்தில் அமைந்துள்ளது..

நீதியின் பொருட்டு மக்களின் தெய்வமாக இங்கே கற்கு வேல் ஐயனார் - பூர்ண கலா, பொற்கலா தேவியருடன் 21  பரிவார மூர்த்திகள் அருகிருக்க அருளாட்சி புரிவதாக ஐதீகம்..

கார்த்திகை 30 அன்று கள்ளர் வெட்டுத் திருவிழா..

இவரைக் குல தெய்வமாகக் கொண்ட பல்லாயிரவர் கூடி மகிழ்வர்..

கோயிலில் படம் எடுக்கத் தடை.. வெளிபுறத்தில் எடுக்கப்பட்ட படங்கள் இன்றைய பதிவில்..






கற்கு என்பது இரு புறங்களிலும் சொர சொரப்புடன் கூடிய பனை மட்டை..  எடுத்து வீசும் போது எதிராளிக்கு இரத்தக் காயத்தினை உண்டாக்கக் கூடியது.. 

பனையைச் சார்ந்து தொழில் புரிந்த மக்கள் ஐயனுக்கு கற்கு மட்டையை ஆயுதமாக சமர்ப்பிக்க - 

ஐயனும் அதனை அன்புடன் ஏற்றுக் கொண்டதால் 
கற்கு வேல் ஐயனார் என, திருப்பெயர்..






செம்மண் மேடுகள் மிகுந்து நீர்ப் பிடிப்பு இயலாமல் வறண்டிருக்கும் பூமியே தேரிக்காடு..

திருச்செந்தூருக்கு அருகிலும் திருநெல்வேலியில் நாங்குநேரிக்கு அருகிலும் காணப்படுகின்ற இத்தகைய மணற்பரப்பு தமிழகத்தில் வேறெங்கும் காண இயலாதது..









 நன்றி விக்கி

கற்கு வேலும் இருக்கையிலே
கவலை இல்லையே ஐயன்
கனிந்த முகத்தைப் பார்க்கையிலே
துயரம் இல்லையே..

நன்றி சொல்ல நாவில் ஒரு
வார்த்தை இல்லையே ஐயன்
தாமரைப் பொற்பாதம் தொழப்
பிணியும் இல்லையே..

தேரிக் குடிஇருப்பை நோக்கித்
தேடி வரும் மானிடர்க்கு  
துணை கூட்டும் நீதியனே
கற்கு வேல் ஐயா..

தினப் பொழுதும் திருவடிகள்
தொழ வேண்டும் தொழ வேண்டும்
வேத மந்த்ர ஜோதியனே
கற்கு வேல் ஐயா..

ஏறிவரும் குதிரைச் சத்தம் 
எட்டுத் திசையும் கிடுகிடுக்கும்
சந்தனமும் சவ்வாதும் 
ஊர் முழுதும் கமகமக்கும்

நானுண்டு காவலுக்கு 
என்று வரும் தெய்வமே
நீயிருக்கக் குறையும் ஏது
கற்கு வேலும் சரணமே..
**

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

9 கருத்துகள்:

  1. அப்பனை வணங்கி கொண்டேன்.  நாங்கள் நேற்று சென்று எங்கள் ஐயனை தரிசித்து வந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது நல்லது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. தேரிக்காடு கற்கு வேல் ஐயா உங்கள்பாதம் பணிகின்றோம்.

    பாமாலை நன்று.

    'கற்கு மட்டை" அறிந்தோம். எமது ஊரில் பேச்சு மொழியில் கருக்கு மட்டை என்பார்கள். கற்கு என்பது கருக்காகி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு
  3. தேரிக்காடு கற்கு வேல் ஐயா உங்கள்பாதம் பணிகின்றோம்.

    பாமாலை நன்று.

    'கற்கு மட்டை" அறிந்தோம். எமது ஊரில் பேச்சு மொழியில் கருக்கு மட்டை என்பார்கள். கற்கு என்பது கருக்காகி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. தேரிக்காடு கற்கு வேல் ஐயாவை உங்கள் கவிதையை பாடி வணங்கி கொண்டேன்.
    படங்கள் மிக அழகு.
    கற்கு மட்டை பேரின் விவரம் அருமை.
    செம்மண் மண்ற்பரப்பு சிறு வயதில் பார்த்து இருக்கிறேன், நாங்குநேரியில் என் மாமா பெண் திருமணத்திற்கு போய் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் மேலதிக விவரமும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  5. தகவல்கள் சிறப்பு. ஆலயத்தின் வெளியில் எடுத்த நிழற்படங்கள் நன்று.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..