நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், செப்டம்பர் 03, 2024

உவரி தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 17
செவ்வாய்க்கிழமை

கடந்த 26 அன்று மாதாந்திர கிருத்திகை.. 

திருச்செந்தூரில் மகிழ்ச்சியுடன் தரிசனம் செய்து விட்டு முருகனின் திருவருளுடன்  இரவு 8:30 மணியளவில் உவரியை வந்தடைந்தோம்..

நடை அடைக்கின்ற நேரத்தில் ஸ்வாமி தரிசனம் .. கோயில் வளாகத்தில் உறக்கம்..

ஆவணி இரண்டாம் கிழமை கொடை விழா  ஆரவாரங்கள் ஏதும் இன்றி அமைதியில் இருந்தது கோயில் வளாகம்...

செவ்வாய்க் கிழமை
பொழுது விடிய - தஞ்சையில் இருந்து எனது தம்பிகள் இருவரும் குடும்பத்துடன் வந்து சேர்ந்தனர்.. 

முற்பகல் 11:00 மணியளவில் உள்ளூர் உபயதாரர்கள் சேர்ந்து கொள்ள  குல தெய்வமாகிய ஸ்ரீ மாட ஸ்வாமிக்கும் ஸ்ரீ பேச்சியம்மனுக்கும் ஸ்ரீ இசக்கி அம்மனுக்கும்  சகல திரவியங்களாலும் அபிஷேகம் செய்விக்கப் பெற்று வஸ்த்ர புஷ்பாஞ்சலியுடன் மகா தீப தரிசனம் நிகழ்ந்தது...






எங்கள் குடும்பத்திற்கான சிவாச்சாரியார் ஸ்ரீ சுந்தரமூர்த்தி குருக்கள்.. அவருடன் எனது மகன்..






















ராஜ கோபுர திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன..


மூலவர் சுயம்புலிங்கம் தேவி சந்நிதி  இல்லை.

பிரம்ம சக்தி என்பவள் ஸ்ரீ பத்ரகாளி..

எங்களது ஸ்வாமி
ஸ்ரீ மாடசாமி


 ஸ்ரீ பேச்சியம்மன்
ஸ்ரீ இசக்கியம்மன்
ஸ்ரீ சிவனணைந்த பெருமாள்
ஸ்ரீ முன்னோடியார் - என, பரிவார மூர்த்திகள்..


அட்ம்பங்கொடி இங்கே தலவிருட்சம்..

வைகாசி விசாகம்
மஹாளய பட்சம் தைப்பூசம் இங்கே சிறப்பானவை..


வேத நாயகன்
  வேதியர் நாயகன் 
மாதின் நாயகன்
  மாதவர் நாயகன் 
ஆதி நாயகன்
  ஆதிரை நாயகன் 
பூத நாயகன்
  புண்ணிய மூர்த்தியே. 5/100/1
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***


12 கருத்துகள்:

  1. உவரி கோயில் பற்றி சிறப்பாகப் பதிவிட்டிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நெல்லை அவர்களுக்கு
      நன்றி ..

      நீக்கு
  2. // கோவில் வளாகத்தில் உறக்கம் //  

    அருமை.  அனுமதிக்கிறார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் கோயிலில் எவ்விதப் பிரச்னையும் இல்லை...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம் ..

      நீக்கு
  3. வணங்கி கொண்டேன். அருமையான படங்கள். ஒவ்வொரு படத்துக்கும் முடியா விட்டாலும் சில முக்கிய படங்களுக்காவது சிறு சிறு விளக்கம் கொடுத்திருக்கலாமோ என்று தோன்றினாலும் உங்கள் சிரமமும் நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முயற்சிக்கின்றேன்...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம் ..

      நீக்கு
  4. சிறப்பான தகவல்கள்... படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி வெங்கட் ..

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. உவரி கோவில் பற்றிய விபரங்கள் சிறப்பாக இருக்கிறது. உவரி கடற்கரை படங்கள் அனைத்தும் கண்களுக்கு விருந்தாக உள்ளது. பதிவை ரசித்தேன்.

    தங்களுக்கு குலதெய்வ வழிபாடு கிட்டியிருப்பதற்கு பெரு மகிழ்ச்சியடைகிறேன். இறைவன் அனைவருக்கும் நன்மையை நடத்தித் தரட்டும் என வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. // இறைவன் அனைவருக்கும் நன்மையை நடத்தித் தரட்டும் என வேண்டிக் கொள்கிறேன்..//

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ..

      நீக்கு
  6. உவரி கோயில் விவரங்கள், படங்கள் எல்லாம் மிக அருமை.
    அப்பர் தேவாரம் பாடி இறைவனை வண்னகி கொண்டேன்.
    மாலைச்சூரியன், கடல் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..