நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, செப்டம்பர் 15, 2024

காளி தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 30
ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீ விஜயாலய சோழர் - பல்லவர்களிடம் இருந்து சோழ மண்டலத்தை மீட்டு தஞ்சை மாநகரை 
மீண்டும் நிர்மாணித்த போது எட்டுத் திக்கிலும் ஸ்ரீ காளி  திருக்காட்சி நல்கியதாக நம்பிக்கை..

இன்று
தஞ்சை மாநகரில்  எட்டுக்கு மேற்பட்ட காளியம்மன் கோயில்கள் உள்ளன...

கால வெள்ளத்தில் பழைமையான
சிலகோயில்கள நகருக்குள் திகழ்கின்றன..

இவை ஸ்ரீ விஜயாலய சோழ மன்னருடன் தொடர்பு உடையவை..

கிழக்குத்திசை



ஸ்ரீ நிசும்பசூதனி, வடபத்ர காளியம்மன் - பூமாலை வைத்யநாதர் கோயில் - கீழவாசல்.

ஸ்ரீ உக்ர காளியம்மன்
குயவர் தெரு - கீழவாசல்.


ஸ்ரீ முத்து மாரியம்மன் - புன்னை நல்லூர்.. 

மராட்டியர் காலத்தில் புற்றின் உள்ளிருந்து வெளிப்பட்டவள்..
கோயிலின் உள்ளே ராஜகோபுரத்தின் தென்பால் ஸ்ரீ காளி அமர்ந்திருக்கின்றாள்..
அருகில் ஸ்ரீ பூர்ணகலா பொற்கலா தேவியருன் ஸ்ரீ ஐயனார்

தெற்குத்திசை


ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி
- தெற்கு ராஜவீதி..

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, 
ஸ்ரீ முனீஸ்வரர் கோயில்..
மாநகரின் தெற்கு எல்லையில் திசை தெய்வமாக..

ஆய்வுகளின்படி
பிற்காலத்திய கோயில்
என்கின்றனர்..

நடுநாயகமாக அரண்மனைக்குப் பின்புறத்தில் ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோயில்...

இக்கோயில் மராட்டியர் காலத்தில் கட்டப்பட்டது என்றாலும் கோயிலில் தஞ்சகன் தாரகன்  இருவருடன் அம்பிகை விளங்குகின்றாள்..

இவள் பெயரால் 
எல்லையம்மன் கோயில் வீதி  - என அமைந்திருக்கின்றது.. இது தஞ்சையின் பழைமையான கடைத்தெரு..

மேற்குத்திசை



ஸ்ரீ ஏகவீரி அம்மன் 
(ஏகௌரி அம்மன்)
- வல்லம்..

ஸ்ரீ பத்ரகாளியம்மன்,
ஸ்ரீ முனீஸ்வரன் கோயில்,
வஸ்தாத் சாவடி,
புதுக்கோட்டை சாலை.

ஸ்ரீ பத்ரகாளியம்மன் - மேல வாசல் / மேல அலங்கம்..



ஸ்ரீ கோடியம்மன்
ஸ்ரீ முனீஸ்வரன் கோயில்..
ஸ்ரீ ராகவேந்திர பிருந்தாவனம் அருகில்,
மேலவெளி..

வடக்குத்திசை



ஸ்ரீ கோடியம்மன் - வெண்ணாற்றங்கரை..

இவளே தஞ்சையின் மூல ஸ்தானம்.. ஆதிநாயகி..


ஸ்ரீ பகளாமுகி காளியம்மன்
- ராஜகோபாலசுவாமி
கோயில், வடக்கு ராஜவீதி (கோட்டைக்கு உள்ளே)

ஸ்ரீ வீரபத்ர காளியம்மன் (என்கிற)
மகிஷாசுரமர்த்தினி  
- வடக்கு வாசல், சத்திரம் அருகில். (கோட்டைக்கு வெளியே)

ஸ்ரீ செல்வ காளியம்மன்
(செல்லியம்மன்)
ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் கோயில், கரந்தை..
 
இங்கு குறிக்கப்படுள்ள கோயில்கள் அனைத்தையும் தரிசித்துள்ளேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி..

வெண்ணாற்றங்கரை கோடியம்மன் கோயில்,
புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் , வல்லம் ஏகௌரியம்மன் மற்றும் புதுக்கோட்டை சாலை ஸ்ரீ பத்ர காளியம்மன் கோயில்களுக்கு மட்டுமே பேருந்தில் செல்ல முடியும்.. 

ஏனையவை நகரின் உட்புறத்தில் உள்ளவை.. இலகு வாகனம் அவசியம் தேவை..

வசதியும் வாய்ப்பும் கிடைக்கும் போது வந்து தரிசனம் செய்து மகிழுங்கள்.
**
ஓம் சக்தி ஓம் 
ஓம் சிவாய நம ஓம்
***

7 கருத்துகள்:

  1. காளி தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.
    கிழக்கு திசை காளியின் சிரித்த முகம் அழகு.

    பாரதியாரின் பாடல் நினைவுக்கு வருகிறது
    யாதுமாகி நின்றாய் -காளி
    எங்கும் நீ நிறைந்தாய் //

    எங்கும் நிறைந்த காளி மனம் பலம், உடல் பலத்தை தரவேண்டும்.
    தஞ்சசையில் உள்ள அனைத்து காளிகளையும் நீங்கள் தரிசனம் செய்து இருப்பது மகிழ்ச்சி. காளியின் அருளால் உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி

      ஓம் சக்தி ஓம்

      நீக்கு
  2. தஞ்சையில் எட்டுத் திக்கும் காவல்காக்கும் அம்மன் தலங்கள் பற்றி அறிந்தோம்.இவை அனைத்தையும் நீங்கள் தரிசித்துள்ளீர்கள் என்பதில் மகிழ்ச்சி. எல்லாம் அம்மன் அருள்.

    அழகிய அம்மன் தரிசனங்கள் உங்கள் தயவால் எங்களுக்கும் காண கிடைத்தன. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி

      ஓம் சக்தி ஓம்

      நீக்கு
  3. தஞ்சையில் அவ்வளவு வருடங்கள் இருந்தும் என் அப்பா என்னை இந்த மாதிரி இடங்கள் என்ன, எந்த மாதிரி இடங்களுக்கும் அழைத்துச் சென்றதில்லை. பெரிய கோவில், அப்பாவின் தாயத்து அர்ச்சனை செய்வதற்காக கொங்கணேஸ்வரர் கோவில், வீட்டுக்கருகில் ஈஸ்வரி நகர் அருகே இருந்த ஆஞ்சநேயர் கோவில் (நாங்களே சென்று வந்து விடுவோம்), சிவகங்கா கார்டன்...  அவ்வளவுதான் பார்த்திருக்கிறேன்! 

    அப்புறம் நானாக சென்ற இடம் மத்திய நூலகம், மற்றும் தியேட்டர்கள்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியும் வேண்டும் தானே..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  4. காளி தரிசனம் - வெகு சிறப்பு. புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம் மட்டுமே தரிசனம் கண்டிருக்கிறேன். தகவல்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..