நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், அக்டோபர் 29, 2020

தெய்வ தரிசனம்

    

நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

திருத்தலம் - திரு இரும்பூளை
தற்போது ஆலங்குடி

இறைவன்
ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர்

அம்பிகை
ஸ்ரீ ஏலவார்குழலி

தீர்த்தம்
அமிர்த புஷ்கரணி
ஞான கூபம்..

தல விருட்சம்
பூளைச் செடி..

ஒருசமயம் தேவர்களைக்
காத்தருளியதால்
ஸ்ரீ விநாயகருக்கு
கலங்காமல் காத்த விநாயகர்
எனத் திருப்பெயர்..

தலவிருட்சத்தின்
பெயரால் விளங்கும்
தலங்களுள்
இதுவும் ஒன்று..

எல்லா சிவாலயங்களிலும்
தெற்குக் கோட்டத்தில் 
ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி என
விளங்கும்
ஆலமர் செல்வனின் சந்நிதி
இங்கு பிரசித்தம்..

கும்பகோணத்திலிருந்து
மன்னார்குடி செல்லும் வழியில்
நீடாமங்கலத்துக்கு
சற்று முன்பாக
அமைந்துள்ளது இத்தலம்...

எல்லாம்வல்ல இறைவன்
குரு ஸ்தானத்தில் இருந்து
குறைகளைத் தீர்த்தருள்வதாக
நம்பிக்கை..

Fb ல்
கிடைத்த காணொளி


சீரார் கழலே தொழுவீர் இது செப்பீர்
வாரார் முலைமங் கையொடும் உடனாகி
ஏரார் இரும்பூளை இடங்கொண்ட ஈசன்
காரார் கடல்நஞ்சம் அமுதுண்ட கருத்தே.. (2/36)
-: திருஞானசம்பந்தர் :-
***
இவ்வேளையில்
புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
எல்லாம் வல்ல இறைவனின்
திருவடித் தாமரைகளைப்
போற்றுவோம்..
***
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ

13 கருத்துகள்:

 1. ஆலங்குடி ஆண்டவர் ஆபத்ஸஹாயர் அனைவரையும் காக்கட்டும்.  காணொளி வேலை செய்யவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு...
   காணொளி எனது கைபேசியில் இயங்குகின்றதே... சற்று நேரம் கழித்து சோதித்துப் பாருங்கள்..
   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
  2. காணொளியில் ஆரத்தி கண்டு கன்னத்தில் போட்டுக்கொண்டேன்.

   நீக்கு
 2. அனைவர் நலம் இறைவன் காக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 3. பல முறை சென்றுள்ளேன். இன்று உங்கள் பதிவு மூலமாகச் செல்லும் வாய்ப்பு. நன்றி.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  இன்றைய குரு பகவானின் தெய்வ தரிசனம் சிறப்பாக தரிசித்துக் கொண்டேன். காணொளியில் தீபாராதனை கண்டு மனம் மகிழ்வுற்றேன். சகல உலகங்களையும், ஈஸ்வரர் காத்தருள மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. வியாழன் அன்று ஆலங்குடி தரிசனம் பெற்றேன், நன்றி.
  காணொளி அருமை.

  பதிலளிநீக்கு
 6. ஆலங்குடி ஆலமர் கடவுளின் தரிசனம் பெற்றேன்.

  பதிலளிநீக்கு
 7. துரை அண்ணா வணக்கம். நலமுடன் இருக்கிங்கதானே.

  ஆரத்தி தரிசனம் கிடைத்தது. ஆலங்குடியார்கிட்ட சீக்கிரம் இந்தத் தொற்று அகன்று எல்லோரும் நலமுடன் மகிழ்வுடன் இருக்க அருள் புரிந்திட வேண்டும்

  கீதா

  பதிலளிநீக்கு
 8. ஆலங்குடி தரிசனம் மிக்க நன்று. ஆரத்தியும் பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
 9. அன்பு தனபாலன்,

  என்ன ஒரு அழகான படம். இப்படி ஒரு திரைக்கதை
  அமைத்து அழகாகப் படம் வடித்தவர்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

  அலுக்காத வசனம். நானும் முடிந்த போது பார்த்து விடுவேன்.
  நன்றி மா.

  பதிலளிநீக்கு
 10. ஆலங்குடியில் குரு வடிவாக காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தியின் தீபாராதனை காணக்கிடைத்தது. மிக்க நன்றி. 

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..