நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மார்ச் 18, 2022

பங்குனி உத்திரம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திடல் வேண்டும்..
***

இன்று பங்குனி நான்காம் நாள்..
வெள்ளிக்கிழமை..

உத்திர நட்சத்திரம்..
நேற்று மதியத்திலிருந்து இன்று மதியம் 1:48 வரை பௌர்ணமி திதி..


பங்குனி உத்திரம்
ஸ்ரீ ஹரிஹர புத்திரன் தோன்றியருளிய நட்சத்திரம்..


முருகப்பெருமானின் வழிபாட்டுக்கு உரிய நாட்களுள் இதுவும் ஒன்று..


ஸ்ரீ பார்வதி பரமேஸ்வரரின் திருக்கல்யாண நாள் என்ற சிறப்பும் உத்திர நட்சத்திரத்திற்கு உண்டு..

இந்நாளில் எல்லாவித இடையூறுகளையும் கடந்து நாம் - நமது வாழ்வில் வெற்றி பெறுவதற்கு வேண்டிக் கொள்வோம்..

இன்றைய பதிவில் -
ஸ்ரீ ஹரிஹர புத்திரனின்
திருவடிகளுக்கு எளியேனின் பாமாலை..


செண்டார் சிவனருட் செல்வா போற்றி
வண்டார் குழலிக் குமரா போற்றி
கொண்டார் குலந்தனைக் காப்பாய் போற்றி
தண்டாமரைத் திரு மலரடி போற்றி..

களக்கோடி ஸ்ரீ ஐயனார்
பொற்கலை சூடும் புனிதன் போற்றி
பொற்கலை கேள்வன் பொன்னடி போற்றி
விற்கணை ஏந்தும் வேந்தன் போற்றி
நற்கதி நல்கும் நாயகன் போற்றி..


பூரணி அணைந்த புண்ணியன் போற்றி
காரணன் கருணைக் கடலே போற்றி
நாரணி நாயகன் சுதனே போற்றி
வாரணந் தனில்வரும் வாழ்வே போற்றி..


கரிமுகன் அன்பில் கனிந்தாய் போற்றி
விரிதரு அறிவில் விளைவாய் போற்றி
புரிசடைப் புண்ணிய புனிதா போற்றி
பரியிடை அழகா பதமலர் போற்றி..


வடிவுடைக் குமரற் கிளையோய் போற்றி
விடிவுடை வாழ்வின் விளக்கே போற்றி
கொடியுடைக் கோலக் கொழுந்தே  போற்றி
அடிமலர் அணைவார்க் கமுதே போற்றி..


அருஞ்சுனை காத்திடும் ஐயா போற்றி..
வருந்துணை யாகிடும் வாழ்வே போற்றி
அடைக்கலம் அருளும் அரசே போற்றி..
தடைதனைத் தீர்க்கும் தலைவா போற்றி..

ஸ்ரீ சிறை காத்த ஐயன் - தஞ்சை
சிறை காத்தருளும் செல்வா போற்றி
முறை முறை அருளும் முதல்வா போற்றி
கரை காத்தருளும் கழலே போற்றி
உரைசெய் தமிழ்த்திரு அமுதே போற்றி..


ஊர் நலம் காக்கும் ஒளியே போற்றி
சீர் வளர் செல்வத் திருவே போற்றி
கார்முகில் ஆகிய கொடையே போற்றி
ஆருளர் எமக்கு அருள்வாய் போற்றி..

ஸ்ரீ பூர்ணகலா பொற்கலா சமேத ஹரிஹர புத்திர ஸ்வாமியே போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

  1. எனது இஷ்ட தெய்வமும், குலதெய்வமும்...   சிறப்பான நாள்.  பங்குனி உத்திரம் என்றதும் சூலமங்கலம் சகோதரிகள் குரல் நினைவுக்கு வருகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..

      மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  2. இன்று பங்குனி உத்திரம் இதம்பாடல் குலதெய்வ கோயிலில் இரண்டு தினங்கள் தரிசனம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி.

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அருமையான நாள். இன்று குலதெய்வ வழிபாடும் சிறப்பானது. ஐயப்பன் அருளாலும் அன்னையவள் அருளாலும் அனைவரும் எல்லா நலங்களும் நிரம்பி மன அமைதியுடன் வாழப் பிரார்த்திக்கிறோம். ஐயப்பன் மேல் புனைந்த பாமாலை சிறப்பாக ஐயப்பனின் அனைத்துத் திருவிளையாடல்களையும் உள்ளடக்கியதாய் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும்..

      வாழ்த்தும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  4. பங்குனி உத்திர நாலில் குலதெய்வ வாழிபாடு சிறப்பு. அருள்மிகு" ஸ்ரீ களக்கோட்டீஸ்வரர் தர்ம சாஸ்தா " குலதெய்வமும் இன்று இடம் பெற்றது மகிழ்ச்சி.

    எல்லா ஐயப்பன் படங்களும் அருமை.

    அனைவருக்கும் குலதெய்வம் அருள் வழங்க வேண்டும்.
    உங்கள் பாமலை அருமை.

    பூர்ண புஷ்கலா சமேத ஹரிஹர புத்திர ஸ்வாமியே போற்றி போற்றி!

    பதிலளிநீக்கு
  5. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

    தங்களது பதிவில் சென்ற மாதம் வெளியிட்டிருந்த ஸ்ரீ களக்கோடி சாஸ்தா அலங்காரத் திருக்கோலப் படம் தான் இந்தப் பாமாலைக்குக் காரணம்..

    வருகையும் கருத்தும் வேண்டுதலும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! மகிழ்ச்சி.
      முன்பு ஒரு பாடலை பாடி தந்தீர்கள்.
      அதை கோவிலுக்கு கொண்டு கொடுக்க வேண்டும் என்று நினைத்து முடியவில்லை.

      கோவிலுக்கு போகவே இல்லை. தினம் வீட்டில் வணங்கி வருகிறேன்.
      இன்று பக்கத்தில் உள்ள ஐயனராய் வணங்கி வந்தேன்.
      உடல் நலத்தை தர வேண்டும் ஐயனார்.

      என் தளத்தில் ஐயனார் இன்றைய அலங்காரத்தில் இருக்கிறார். சாரின் தம்பி படங்களை அனுப்பி இருந்தார்கள்.

      நீக்கு
    2. தங்களது தகவலுக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  6. உங்கள் பாடல் அருமை துரை அண்ணா.

    இன்றைய சிறப்பு நாள் எனக்கு எங்கள் ஊரின் நினைவு வந்தது. எங்கள் கிராமத்தில் சாஸ்தா பூஜை நடைபெறும். ஒருவருக்கு சாஸ்தா வரும். ஊர்ச்சாப்பாடுதான் இன்று. இப்போதும் பூஜை நடக்கிறதுதான். நிறைய நினைவுகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  7. பங்குனி உத்திரத் திருநாள் - நெய்வேலி நகரில் இருந்தவரை ஒவ்வொரு வருடமும் சிறப்பாகக் கொண்டாடிய தினம். காவடிகள் பார்க்கச் செல்வதும், நெடுந்தூரம் நடந்து காவடிகளுடன் கோவிலுக்குச் செல்வதும் என மிகவும் பிடித்த, இனிமையான, மறக்க முடியா நாட்கள்.

    உங்கள் பாமாலையும் சிறப்பாக இருக்கிறது.

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // மிகவும் பிடித்த, இனிமையான, மறக்க முடியா நாட்கள்.. //

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..