நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மார்ச் 05, 2022

பிருந்தாவனத்தில்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

நேற்று மாசி (20) மாதத்தின் வளர்பிறை துவிதியை (மார்ச்/4)..


தஞ்சை வடவாற்றங்கரை பிருந்தாவனத்தில்
குரு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் நானூற்று
ஒன்றாவது (401) பட்டாபிஷேக வைபவம்..

ஸ்வாமிகள் துறவு மேற்கொண்ட படித்துறை


1621 ல் பங்குனி மாதம் சுக்ல பட்ச துவிதியை அன்று தஞ்சை வடவாற்றின் கரையில் சந்நியாசம் மேற்கொண்டார் ஸ்ரீ ராகவேந்திரர்..
அப்போது தஞ்சையை ஆட்சி செய்தவர் ஸ்ரீ ரகுநாத பூபால நாயக்கர்..



அன்றிலிருந்து பன்னிரண்டு ஆண்டுகள்  தஞ்சை வடவாற்றின் கரையில் தவம் இருந்தார் ஸ்வாமிகள்..

வடவாறு கிழக்கு முகம்

வடவாறு மேற்கு முகம்


தவம் பூர்த்தியாகிய நிலையில் உலகோருக்கு நன்மைகள் செய்யும் பொருட்டு தல யாத்திரை புறப்பட்டார் ஸ்வாமிகள்..

ஸ்வாமிகள் சென்ற பின் தஞ்சையில் ஏற்பட்ட இன்னல்களால் வருத்தமடைந்த தஞ்சை மக்களுக்கும் மன்னருக்கும் மகிழ்ச்சி உண்டாகும்படிக்கு என்றென்றும் இங்கேயே நித்ய வாசம் கொண்டு அருள்வதாக  -  உணர்த்திய  ஸ்வாமிகள்,  தாம்
தவம் செய்த இடத்தில் பிருந்தாவனம் ஒன்றை அமைக்குமாறு பணித்தார்..

நாக ப்ரதிஷ்டை

ஸ்வாமிகள் தவம் செய்த இடம் குறித்து சரியாக விளங்காத நேரத்தில் ஐந்தலை அரவாக அங்கே தோன்றி மண்டலமிட்டுக் காட்டியருளினார் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள்...


அப்படிக் காட்டப்பட்ட இடத்தில் அமைந்தது தான் ஸ்ரீ பிருந்தாவனம்..

இங்கே ஸ்வாமிகள் நித்ய வாசம் செய்வதால் அன்பர்களுக்கு மிருத்திகை வழங்கப் படுவதில்லை..

ந்நியாச ஆஸ்ரம ஸ்தலம் என்று குறிக்ப்படுவது தஞ்சை பிருந்தாவனம்!.. எனவே, தஞ்சை
பிருந்தாவனத்தில் சந்நியாச பூஜாக்ரமத்தின் படியே வழிபாடுகள்..



காலையில் இருந்து பல
வகையான அபிஷேகங்கள் நிறைவு பெற்று பூரண அலங்காரங்களுடன் மதியம்  பன்னிரண்டு மணியளவில் மகா தீப ஆராதனை நிகழ்ந்தது..
தீர்த்தமும் அட்சதையும் கல்கண்டும் மலர்களும் பிரசாதமாக வழங்கப்பட்டன..


தஞ்சை நிருத்யாலயா மாணவியரின் நாட்டியாஞ்சலியும் தொடர்ந்து சாக்ஸபோன் மற்றும் நாகஸ்வர இசை  நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடைபெற்றன..

மதியம் 12:30 மணியளவில் அன்பர்கள் அனைவருக்கும் மகா அன்ன தானம் நடைபெற்றது..

எதிர்வரும்  மாசி 25  அன்று (சுக்ல பட்ச சப்தமி) ஸ்வாமிகளின் ஜெயந்தி தின மகோத்சவமும் நடைபெற இருக்கின்றது (மார்ச்/9)..

இங்கு அபிஷேகம் அர்ச்சனை எதற்கும் கட்டணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..


என் பக்தன் கண்கலங்கி
வேதனையோடு என்னை
அழைப்பானேயாகில்
எத்தருணத்திலும்
எவ்வுலகத்திலும்
எவ்வுருவிலும்
அவனைத் தேடிச்
சென்று காத்து நிற்பேன்..
-: ஸ்ரீ ஸ்வாமிகள் :-
*
ஸ்வாமிகளின் நல்லருளால் அனைவரும் நலமுடன் வாழ்வதற்குப் பிரார்த்தனைகள்..

பூஜ்யாய ராகவேந்த்ராய
சத்ய தர்ம ரதாயச
பஜதாம் கல்ப விருக்ஷாய நமதாம் காமதேனவே..

ஓம் ஹரி ஓம்
***

18 கருத்துகள்:

  1. ராகவேந்திர ஸ்வாமிகள் தஞ்சையில் பன்னிரண்டு ஆண்டுகள் தவம் புரிந்தார் என்பது எனக்கு செய்தி. சிறப்பான தகவல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. இந்த பிருந்தாவனம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் போனதில்லை. மந்த்ராலயம் 2,3 முறை போயிருக்கேன். இங்கேயே ராகவேந்திரா மடம் இருந்தாலும் இந்தப் பத்து வருஷங்களில் ஒரு முறை கூடப் போக வாய்க்கவில்லை. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  3. மிக அரிய தகவல்களுடன் கூடிய பதிவு. படங்களும் நன்றாக இருக்கின்றன. இங்கே அபிஷேஹ, அர்ச்சனாதிகளுக்குக் கட்டணம் இல்லை என்பதும் செய்தி தான். இங்கேயும் ரோபோ வந்து விட்டது. எங்கெங்கு போனாலும் ரோபோ/ரோபோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      ரோபோவின் பிரச்சினைக்கு என்ன செய்வது?..

      ஒன்றும் புரியவில்லை..

      நன்றி..

      நீக்கு
  4. தகவல்கள் புதியது.
    தஞ்சையில் இருப்பதே எனக்கு புதிய செய்தி. வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. ராகவேந்திரா பிருந்தவனம் தரிசனம் செய்தேன், நன்றி.
    இன்று ஜெயா தொலைக்காட்சியில் "தினம் ஒரு திருக்கோயில்" தரிசனத்தில் ராகவேந்திரா அவர்களின் குருவின் தரிசனம் , அவரின் குரு தரிசனம், ம்ற்றும் ராகவேந்திரா தரிசனம் கிடைத்தது .கும்பகோணத்தில் உள்ளது ராகவேந்திரா மடம் என்று அழைக்கபடும் இடம்.

    உங்கள் தளம் வந்தால் இங்கும் ராகவேந்திரா.

    ஊருக்கு வந்த பின் கோவில் உலா மனதுக்கு மகிழ்ச்சி தரும் உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. மிக சிறப்பான தகவல்களுடன் இனிய தரிசனம் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. விக்கிப்பீடியாவில் விஜேந்திரசுவாமி மடம், கும்பகோணம்
    என்ற தலைப்பில் நான் ஆரம்பித்த கட்டுரையில் பின்வரும் செய்தியினை இணைத்துள்ளேன். "பிருந்தாவன மடம் என்று சொல்லப்படுகின்ற இந்த மடத்தில் ராகவேந்திர சுவாமிகள் தங்கி, குருவிடம் வேதாப்யாசம் பெற்று ஞானதீப சுடரொளியாக வீசுகின்றார். அவர் அருள்பாலித்துவரும் ராகவேந்திர சுவாமிகளின் மிருத்திகா பிருந்தாவனத்தின் கும்பாபிஷேம் சூன் 12, 2015 அன்று நடைபெற்றது." தஞ்சாவூர் பிருந்தாவனத்திற்குச் செல்லும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். உங்கள் பதிவு என் ஆர்வத்தினைத் தூண்டியுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. தகவல்கள் அனைத்தும் சிறப்பு. நல்லதே நடக்கட்டும்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..