நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 20, 2022

திரு மணிக்குன்றம் 1

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
திருத்தலம் - தஞ்சபுரி
தஞ்சை
மாமணிக்கோயில்

ஸ்ரீ தேவி பூதேவி
ஸமேத
ஸ்ரீ மணிக்குன்றப் பெருமாள்


உற்சவர்
ஸ்ரீமந்நாராயணயன்
ஸ்ரீ அம்புஜவல்லி

ஸ்ரீமணிக்கூட விமானம்
கிழக்குத் திருமுக மண்டலம்
இருந்த திருக்கோலம்..

தீர்த்தம்
விண்ணாறு
ஸ்ரீராம தீர்த்தம்
தலவிருட்சம்
மகிழம்

ஸ்ரீ பராசர முனிவர்
ஸ்ரீ மார்க்கண்டேய
மகரிஷி
இருவருக்கும்
ப்ரத்யட்க்ஷம்

-: மங்களாசாசனம் :-
திருமங்கையாழ்வார்
பூதத்தாழ்வார்
நம்மாழ்வார்..
**
திவ்யதேசங்கள்
நூற்றெட்டினுள்
மூன்றாவது
க்ஷேத்திரம்..
*









நேற்று பங்குனி 5 (19/3) சனிக்கிழமை
காலை எட்டு மணியளவில் யாகசாலை பிரவேசம்..





முதற்கால யாகசால பூஜைகள் பூர்ணாஹூதி நடைபெற்றுள்ளது..

நாளை பங்குனி 7 (21/3) திங்கட்கிழமை
காலை ஒன்பது மணிக்கு மேல் பத்து மணிக்குள்ளாக மஹா ஸம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது..

ஸ்ரீ அம்புஜவல்லித் தாயார் உடனுறையும் 
ஸ்ரீ மணிக்குன்றப் பெருமாளை
மனதார சிந்தித்து மங்கலங்களை பெற்றிருப்போமாக!..

ஓம் ஹரி ஓம்
***

16 கருத்துகள்:

  1. ஆஹா...   காலையே திவ்ய தரிசனம்.  நாளை கும்பாபிஷேகம் காட்சிகள் இடம்பெறும் அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நிகழ்வுகள் அடுத்தடுத்த ப்திவுகளில் வெளியாகும்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    நலந்தானே? அதிகாலையில் ஸ்ரீ மணிக்குன்றப் பெருமாள் தரிசனம் கண்டுகந்தேன்.கோபுர படங்களை சேவித்து கொண்டேன். மனதுக்கு நிம்மதியாக நன்றாக உள்ளது. படங்கள் அனைத்தும் நன்றாக வந்துள்ளன. ஸ்ரீ மணிக்குன்றப் பெருமாள் அனைவரையும் நலத்துடன் காக்க பிரார்த்தித்துக் கொள்கிறேன். தாங்கள் தொகுத்து வழங்கிய பல ஊர்களின் அழகான கோவில் பதிவுகளை பார்த்து அங்கு அமர்ந்திருந்து மக்களுக்கு அருள் பாலிக்கும் இறைவன் இறைவிகளை தரிசித்து கொண்டேன். தங்களின் இத்தொண்டு மகத்தானது. அருமையான தெய்வீக பதிவுகளை தினமும் தரும் தங்களுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. வெகு நாட்களுக்குப் பின் தங்களது வருகை..

      நலம் வாழ்க என்றென்றும்.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. மூன்றாவது திவ்ய தேசம். அதுவும் இவ்வளவு அருகே! ஆனாலும் தஞ்சையில் எந்தப்பெருமாள் கோயிலுக்கும் போகலை. கருட சேவைக்கு இங்கே இருந்து சிலர் போவாங்க. அவங்க மூலமாக் கேட்டுக் கொண்டவை தான். எப்போவானும் தஞ்சை போனால் நினைவில் கொண்டு போய்ப் பார்க்க வேண்டிய கோயில்களில் இதுவும் ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நினைவில் வைத்துக் கொண்டு நேரம் கிடைக்கும் போது அவசியம் வாருங்கள்.. நன்றி..

      நீக்கு
  4. படங்களும் விவரிப்பும் வழக்கம் போல் அருமை. நாளை கும்பாபிஷேஹம் எனில் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் காட்டுவாங்கனு நினைக்கிறேன். அல்லது வீடியோக்களாவது வரும். பார்க்கலாம். நீங்களும் படங்களைப் பகிர்வீர்கள் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. அடுத்தடுத்து படங்கள் வெளி வரும்.. நன்றியக்கா..

      நீக்கு
  5. பதில்கள்
    1. அன்பின் ஜி ..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. திருமணிக்குன்றம்! சென்றதில்லை. படங்களும் விவரித்ததும் வழக்கம் போல அருமை துரிய அண்ணா. ஓ கும்பாபிஷேகமா அதான் திருப்பணிகள் நடைபெற்றிருக்கிறது போலும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  7. நாங்கள் இரண்டு தடவை போய் இருக்கிறோம்.
    கும்பாபிஷேகம் நடைபெறபோவது அறிந்து மகிழ்ச்சி.
    நீங்கள் கலந்து கொள்வீர்கள் எங்களுக்கும் தரிசனம் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. சிறப்பான தரிசனம். உங்கள் வழி நாங்களும் தரிசனம் கண்டோம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட் ..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..