நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 22, 2022

திரு மணிக்குன்றம் 3

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
திவ்ய தேசமாகிய
தஞ்சை மாமணிக்
கோயில்


ஸ்ரீதேவி பூதேவி
சமேத
ஸ்ரீ மணிக்குன்றப் பெருமாள்
திருக்கோயிலின்
மஹா ஸம்ப்ரோக்ஷணம்
***











நேற்று முன் தினம் ஞாயிறன்று காலையில் புண்யாக வாசனம், சாந்தி கலசாபிஷேகம், பூர்ணாஹூதியுடன் இரண்டாம் கால பூஜையும் தொடர்ந்து -





மாலையில் கோபூஜை நடத்தப்பெற்றது.






தொடர்ந்து சயனாதி வாசம், அஷ்ட பந்தனம் சாத்துதல், பூர்ணாஹூதியுடன் மூன்றாம் கால பூஜையும் நிறைவு பெற்றன.. அன்பர்களுக்கு ப்ரசாத விநியோகமும் நடைபெற்றது...

நேற்று திங்கட்கிழமை.. பங்குனி ஏழாம் நாள்.. க்ருஷ்ண பட்சம்.. திரிதியை.. சுவாதி நக்ஷத்திரம்..

யாக சாலையில் நான்காம் கால பூர்ணாஹூதி நிறைவேறிய பின் காலை  9:05 மணியளவில் கடங்கள் புறப்பாடாகின... 9:25 மணிக்கு பெருமாளின் ஸ்ரீ மணிக்கூட விமானத்திற்கு  மஹாஸம்ப்ரோக்ஷணம் இனிதே நிறைவேறியது...

அடுத்த சில நிமிடங்களில் தன் அடியார்களுக்கு
ஸ்ரீ மணிக் குன்றப் பெருமான்
ஸ்ரீதேவி பூதேவியருடன் சேவை சாதித்தருளினார்..

தொடர்ந்து -
உபயதாரர்களுக்கும்
இசைக் கலைஞர்களுக்கும் திருக்கோயில் கைங்கர்யத்தில் ஈடுபட்ட அன்பர்களுக்கும் பெருமாளின்  வஸ்த்ர பிரசாதம் வழங்கப் பெற்றது.. 

நேற்று மாலை திருக்கல்யாண வைபவம்  நடைபெற்றது..

இந்த நிகழ்வுகளின் படங்களை அடுத்த பதிவினில் தருகின்றேன்..

இப்போது நேரம் நள்ளிரவு 12:05.. சற்று
முன்பாக (11:30) சடசட என்று மழை பெய்து ஓய்ந்திருக்கின்றது.. 
குடமுழுக்கு நடைபெற்ற அன்று மழை பெய்தால் நல்லது என்று சொல்வார்கள்...


எம்பிரான் எந்தை
என்னுடைச் சுற்றம் எனக்கரசு என்னுடை வாழ்நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவருயிர் செகுத்த எம்அண்ணல்
வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்யநான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்.. 953.
-: திருமங்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
***

13 கருத்துகள்:

  1. திவ்ய தரிசனம். அழகிய படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. சென்னையில் வெய்யில் கொளுத்துகிறது..  அங்கு மழை பெய்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மழை கொஞ்ச நேரம் மட்டுமே..
      அது அந்த யாகத்தின் பலன்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. படங்களும் தகவல்களும் சிறப்பு. நாங்களும் கோவில் நிகழ்வுகளில் கலந்துகொண்ட உணர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட் ..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. நேற்றெல்லாம் இங்கே வெயில் சுட்டெரித்தது. இன்று கொஞ்சம் தணிந்திருக்கிறது. கும்பாபிஷேஹத்தில் பெய்த மழையின் தாக்கம் இங்கேயும் இருக்குப் போல. அருமையான படங்கள், விரிவான தகவல்கள். நல்ல தரிசனமும் கிடைத்தது. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      யாகம் நிறைவேறி மழை பெய்தால் நல்லது என்பார்கள்..

      அன்பின் கருத்துரைக்கு நன்றியக்கா..

      நீக்கு
  5. இன்றைய தரிசனம் நன்று ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. சயனக்கோலத்தில் இறைவன் அழகு. படங்கள் வழி தரிசனம் சிறப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. குடமுழுக்கு நடைபெற்ற அன்று மழை பெய்தது மகிழ்ச்சி.
    நல்லதே நடக்கட்டும்.
    அருமையான தரிசனம் செய்து வைத்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நல்லதே நடக்கட்டும்..
      நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..