நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 27, 2022

திருக்கடவூர் தரிசனம்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி பதின்மூன்றாம் நாள்.. அமிர்த யோகமும் உத்திராட நட்சத்திரமும் கூடியுள்ள சுப முகூர்த்த நாள்.. இன்று காலை பத்து மணியளவில் தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட ஸ்ரீ அபிராமவல்லி உடனாகிய ஸ்ரீ அமிர்த கடேஸ்வர ஸ்வாமி ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற உள்ளது...

மஹா வைபவத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்க வில்லை எனினும் இணையத்தின் வழியாகப் பெற்ற யாக சாலை நிகழ்வின் ஒரு சில காட்சிகள் இன்றைய பதிவில்..

படங்கள்:- தருமபுரம் ஆதீனத்தார்.. அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..




























போராருங் கரியின் உரி
போர்த்துப் பொன் மேனியின் மேல்
வாராரும் முலையாள் ஒரு
பாகம் மகிழ்ந்தவனே
காராரும் மிடற்றாய் கட
வூர்தனுள் வீரட்டானத்
தாரா என்னமுதே எனக்
கார் துணை நீயலதே.. 7.028.4
-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

17 கருத்துகள்:

  1. திருக்கடவூர் கும்பாபிஷேகமா? அட... தன்யனானேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. மிக நல்ல அருமையான படங்கள். காணக்கிடைத்ததுக்கு அபிராமி அம்மைக்கு நன்றி. கும்பாபிஷேஹமும் சிறப்பாக நடைபெற்றிருக்கும் அம்பிகை அருளால். பல முறை போனாலும் மீண்டும் போக வாய்ப்புக் கிடைத்தால் நலல்தே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      அபிராமவல்லியின் நல்லருள் அனைவரையும் காத்தருளட்டும்..

      மகிழ்ச்சி.. நன்றியக்கா...

      நீக்கு
  3. கும்பாபிஷேக காட்சிகள் அழகு தரிசனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகைல்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. திருக்கடவூர் கும்பாபிஷேகப் படங்கள் அழகு. தெளிவாகவும் இருக்கின்றன. நல்ல தரிசனம்.

    திருக்கடவூர் அன்னையின் படங்களைப் பார்த்ததுமே கவிநயாம்மா எழுதிய திருக்கடவூர் அபிராமி அன்னையின் மேல் எழுதிய பாட்டை நான் பாடிப் பதிந்தது நினைவுக்கு வந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  5. தரிசனம் மிகவும் சிறப்பு. நேரிலும் சென்றிருக்கிறேன்.

    அன்னையின் பெயரைத்தான் என் மகளுக்கும் வைத்திருக்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்.. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      நாங்கள் நேரலையில் நிகழ்வுகளைத் தரிசித்தோம்.. தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. நேற்று யாகசாலை பூஜைகள் பார்த்தேன், இன்று காலை முதல் கும்பாபிஷேக காட்சிகளை நேரடியாக ஜோதி டி.வியில் கண்டு களித்தேன்.
    தர்மபுர ஆதீனத்தார் படங்கள் எல்லாம் மிக அழகாய் இருக்கிறது.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      நாங்கள் நேரலையில் தரிசித்தோம்.. தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. சிறப்பான தரிசனம். சென்ற வருடம் அங்கே பயணித்தபோது பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. அடுத்த முறை வாய்ப்பு கிடைத்தால் புனருத்தாரணம் செய்யப்பட்ட இந்தக் கோவிலை பார்க்க வேண்டும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      அவசியம் வாருங்கள்.. தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..