நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மார்ச் 19, 2022

உத்திர தரிசனம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அருகில் இருக்கும் 
ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஸ்வாமி திருக் கோயிலில் தரிசனம்..

அப்போது எடுக்கப்பட்ட படங்கள் இன்றைய பதிவில்!..




ஸ்ரீ விநாயக மூர்த்தி

ஸ்ரீ இடும்பன் ஸ்வாமி

ஸ்ரீ கடம்பன் ஸ்வாமி

ஸ்ரீ பாலதண்டாயுதபாணி

மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதா ரையும் அங்கு வாழவைப்போன் வெய்ய வாரணம்போற்
கைதான் இருபதுடையான் தலை பத்துங் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.. 22
 -: கந்தர் அலங்காரம் :-


 தஞ்சை - திருவையாறு சாலையில் கண்டியூருக்கு சற்று முன்னால் அமைந்துள்ள கிராமம் அரசூர்..

ஊர் சற்று உள்பக்கமாக இருக்க கோயில் நெடுஞ் சாலை ஓரத்தில் அமைந்திருக்கின்றது..


பத்தாண்டுகளுக்கு முன்பு இரவு நேரத்தில் பழைமையான கோயிலின் மீது லாரி மோதி விபத்துக்கு உள்ளானது.. அதன் பின் சில ஆண்டுகளில் கோயில் எடுத்துக் கட்டப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது..


இந்த வழியாக வழக்கமாக சென்று வரும் லாரி, பேருந்து ஓட்டுநர்களுக்கும் நடத்துனர்களுக்கும் செல்லப் பிள்ளையாக  விளங்குபவன் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி..

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வீர வேல் முருகனுக்கு அரோகரா..


ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. படங்கள் அருமை.  முருகன் அனைவரையும் காக்கட்டும்.  நேற்று அலுவலகம் செல்லும் வழியில் உள்ள பாலதண்டாயுதம் கோவிலுக்கு பக்தர்கள் காவடி இழுத்தும், பல்லக்கு தூக்கியும் சாரை சாரையாக வெயிலில் செருப்பின்றி நடக்க, வழியில் நின்றிருந்த பொதுஜனம் சிலர் அவர்கள் காலுக்கும் , சாலைக்கும் தண்ணீர் பீச்சியடிக்க போக்குவரத்து கடும் தாமதமாய் நெரிசலாக...!!

    பதிலளிநீக்கு
  2. தரிசனம் நன்று ஜி

    இதம்பாடல் குலதெய்வ கோயிலிலிருந்து... கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  3. இன்னமும் இவை எல்லாம் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதே மனதுக்கு நிறைவைத் தருகிறது. படங்களும் விவரணைகளும் அருமை. நேற்று இங்கே நம்பெருமாள்/ரங்கநாயகித் தாயாரின் சேர்த்தி வைபவம். வருஷத்துக்கு ஒரு நாள் பங்குனி உத்திரத்தன்றே தாயாரையும் பெருமாளையும் சேர்த்துப் பார்க்க முடியும். இன்று கோ ரதம்.

    பதிலளிநீக்கு
  4. உத்திர தரிசனம் மிக அருமை.
    முருகன் தரிசனம் கிடைத்து விட்டது.
    கந்தனுக்கு அரோகரா!
    வேலுண்டு வினையில்லை.

    பதிலளிநீக்கு
  5. கோயில் படங்களும் உத்திர தரிசனமும் அருமை துரை அண்ணா.

    நேற்று பங்குனி உத்திரம்/வெள்ளி - ரங்கநாயகி தாயாரின் ஹாப்பி பர்த்டேயும் கூட!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. பங்குனி உத்திரம் படங்கள் அனைத்தும் அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..