நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, டிசம்பர் 24, 2022

மலர் 9

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 9 
  சனிக்கிழமை.

தமிழமுதம்
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.. 54
*
திவ்யதேச தரிசனம்
திருக்கவித்தலம்
(கபிஸ்தலம்)


ஸ்ரீ கஜேந்திரவரதன் 
ஸ்ரீ ரமாமணிவல்லி

மகிழம்
கஜேந்திர புஷ்கரணி

கஜேந்திர யானைக்கு
இத்தலத்தில் முக்தி அருளியதாக ஐதீகம்.

கிழக்கு நோக்கிய திருக்கோலம் 
புஜங்க சயனம்
ககனாக்ருத விமானம்

மங்களாசாசனம்
திருமழிசை ஆழ்வார் 
ஒரு பாசுரம்
(நன்றி: காமகோடி. org)
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை பாசுரம் 9 


தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயிலணைமேல் கண் வளரும்
மாமான் மகளே மணிக் கதவம் தாழ் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமன் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.. 482
*
திவ்யதேசத் திருப்பாசுரம்


   கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா தீ 
மாற்றமும் சாரா வகைஅறிந்தேன் ஆற்றங்
கரைக் கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும் மாயன் 
உரைக்கிடக்கும் உள்ளத்து எனக்கு.. 2431
-: திருமழிசையாழ்வார் :-
(நன்றி : நாலாயிர  திவ்யப்ரபந்தம்)

சிவதரிசனம்

திருத்தலம்
திரு இன்னம்பூர்


ஸ்ரீ எழுத்தறிநாதர்
ஸ்ரீ சுகந்த குந்தளாம்பிகை

செண்பகம்
ஐராவத தீர்த்தம்

இறைவன் அகத்திய மாமுனிவருக்கு தமிழ் இலக்கணத்தை உபதேசித்தருளிய திருத்தலம்

திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
*

தேவாரம்
தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று
அழுது காமுற்று அரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதுங் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே.. 5/21/8
-: திருநாவுக்கரசர் :-
*
திருவாசகம்
திருப்பள்ளியெழுச்சி
பாடல் 9


 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டார்
விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே.. 376
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

18 கருத்துகள்:

  1. சிறப்பு. தமிழால் தொழுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம்.. ஓம்...

      தமிழால் தொழுவோம்..
      தமிழையே தொழுவோம்!..

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. திருக்கவித்தலம், திரு இன்னம்பூர் தரிசனம் செய்து கொண்டேன். பாடல்களை பாடி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய ஒன்பதாவது மலர் பதிவு அருமை. இறைவனார்களின் படங்கள் நன்றாக உள்ளது

    யானைக்கு முக்தி கிடைக்கப் பெற்ற திரு கவித்தலம் எம்பெருமாளையும் திரு இன்னம்பூர் இறைவன் ஈஸ்வரரையும் வணங்கிக் கொண்டேன். திருப்பாவை பாடல்கள், பாசுரங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. ஸ்ரீ ஆண்டாள் தாயார் அனைவரையும் காத்தருள வேண்டிக் கொள்கிறேன். இன்றைய பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஸ்ரீ ஆண்டாள் தாயார் அனைவரையும் காத்தருள வேண்டிக் கொள்கிறேன்..//

      அவ்வண்ணமே எனது வேண்டுதலும்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  4. ஓம் நமசிவாய வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் சிவாய நம..

      வாழ்க வையகம்..

      மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நீக்கு
  5. பதில்கள்
    1. ஓம் நம சிவாய..
      சிவாய நம ஓம்..

      மகிழ்ச்சி..
      நன்றி தனபாலன்..

      நீக்கு
  6. கபிஸ்தலம் போனதில்லை. புராணமும் இப்போதே அறிந்தேன். இன்னம்பூர் பற்றி ஏற்கெனவே எழுதி இருக்கேன். போயிட்டு வந்தோம். அங்கே உள்ள பெருமாளையும் பார்த்தோம். வெளியே இன்னோர் ஊரிலிருந்து பட்டாசாரியார் தினமும் வந்துட்டுப் போறார். புராதனத் தஞ்சை மாவட்டத்தின் பெரும்பாலான கோயில்களில் முக்கியமகப் பெருமாள் கோயில்களில் இதான் நிலைமை. எங்க ஊரான பரவாக்கரையில் நாங்க திருப்பணி செய்த பெருமாள் கோயிலுக்கும் இதே நிலைமை தான். :((((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பரவாக்கரையில் நாங்க திருப்பணி செய்த பெருமாள் கோயிலுக்கும் இதே நிலைமை தான்.. //

      இப்படியான நிலைமை எப்போது மாறுமோ..

      பெருமாளுக்குத் தான் வெளிச்சம்..

      ஸ்ரீமதி கமலாஹரிஹரன் அவர்களது பதிவில் எனது சூழ்நிலைக்கான கருத்திற்கு தாங்க்கள் அளித்திருந்த தகவலுக்கு நன்றி..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  8. மாமாயன் மாதவன் வைகுந்தன் நாமங்களை போற்றி பாடுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // மா மாயன் மாதவன் வைகுந்தன் நாமங்களைப் போற்றி பாடுவோம்... //

      அன்பின் கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. பெருமாள், ஈஸ்வரன் தரிசனங்கள் பெற்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..