நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 12, 2022

பஞ்ச புராணம் 4


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 26
  திங்கட்கிழமை
நான்காவது சோமவாரம்

சிவாலயங்களில்  
நான்காம் வாரத்தின் 
சங்காபிஷேகம்..

பஞ்சபுராணம்


தேவாரம்
போரா ருங்கரியின் னுரி
போர்த்துப்பொன் மேனியின்மேல்
வாரா ரும்முலையாள் ஒரு
பாக மகிழ்ந்தவனே
காரா ரும்மிடற்றாய் கட
வூர்தனுள் வீரட்டானத்
தாரா  என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.. 7/28
-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-


திருவாசகம்
பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே..
-: மாணிக்கவாசகர் :-


திரு இசைப்பா
சுருதிவா னவனாம் திருநெடு மாலாம்
சுந்தர விசும்பின் இந்திரனாம்
பருதிவா னவனாம் படர்சடை முக்கட்
பகவனாம் அகஉயிர்க் கமுதாம்
எருதுவா கனனாம் எயில்கள்மூன் றெரித்த
ஏறுசே வகனுமாம் பின்னும்
கருதுவார் கருதும் உருவமாம் கங்கை
கொண்டசோ ழேச்சரத் தானே..9/13
-: கருவூரார் :-


திருப்பல்லாண்டு
தாதையைத் தாள்அற வீசிய சண்டிக்கவ்
வண்டத் தொடுமுடனே
பூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும்
போனக மும் அருளிச்
சோதி மணிமுடித் தாமமும் நாமமும்
தொண்டர்க்கு நாயகமும்
பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே. 
-: சேந்தனார் :-


பெரியபுராணம்
அந்தணர்கள் அதிசயித்தார்
அருமுனிவர் துதிசெய்தார்
வந்தணைந்த திருத்தொண்டர்
தம்மைவினை மாசறுத்துச்
சுந்தரத்தா மரைபுரையும்
துணையடிகள் தொழுதிருக்க
அந்தமிலா ஆனந்தப்
பெருங்கூத்தர் அருள்புரிந்தார்.. 12/18
(திருநாளைப் போவார் புராணம்)
-: சேக்கிழார் :-


திருப்புகழ்
வசனமிக வேற்றி ... மறவாதே
மனதுதுய ராற்றி ... லுழலாதே
இசைபயில்ஷ டாக்ஷ ... ரமதாலே
இகபரசெள பாக்ய ... மருள்வாயே
பசுபதிசி வாக்ய ... முணர்வோனே
பழநிமலை வீற்ற ... ருளும்வேலா
அசுரர்கிளை வாட்டி ... மிகவாழ
அமரர்சிறை மீட்ட ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


கந்தபுராணம்
பன்னிரு கரத்தாய் போற்றி
பசும்பொன் மாமயிலாய் போற்றி
முன்னிய கருணை ஆறு
முகப்பரம் பொருளே போற்றி
கன்னியர் இருவர் நீங்காக்
கருணை வாரிதியே போற்றி
என்னிரு கண்ணே கண்ணுள்
இருக்குமா மணியே போற்றி
-: கச்சியப்ப சிவாசாரியார் :-

திருச்சிற்றம்பலம்
***

10 கருத்துகள்:

  1. ஓம் நமச்சிவாய. முருகா சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. மிக அருமையான பகிர்வு. பல்லாண்டுகளுக்கு முன்னர் சிறுமியாக இருந்தப்போத் தற்செயலாக மீனாக்ஷி கோயிலுக்குப் போனப்போ அங்கே நடந்த சங்காபிஷேஹத்தைப் பார்த்திருக்கேன். இப்போ மனதளவில் நினைப்பதோடு சரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. மேலதிக கருத்திற்கு நன்றியக்கா..

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஐயா..

      நீக்கு
  4. அருமையான பதிவு.
    பாடல்கள் அனைத்தும் நான் அடிக்கடி பாடுவது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..