நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 22, 2022

மலர் 7

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 7
 வியாழக்கிழமை.

தமிழமுதம்
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் 
புறத்த புகழும் இல.. 39
*
திவ்யதேச தரிசனம்
திருக்கண்டியூர்

ஸ்ரீ ஹரசாப விமோசனப் பெருமாள் 
ஸ்ரீ கமலவல்லி நாச்சியார்

வகுளம்
தீர்த்தம் பத்ம தீர்த்தம்

நின்ற திருக்கோலம் 
கிழக்கே திருமுக மண்டலம்.
கமலாக்ருதி விமானம்.

மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
 ஒரு பாசுரம்
(நன்றி: காமகோடி.org)
*
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை பாசுரம் 7


கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கோபுரத்துக்கு
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.. 480
**
திவ்யதேசத் திருப்பாசுரம்


 பிண்டியார் மண்டை ஏந்தி பிறர்மனை திரிதந்து உண்ணும்
உண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை என்று
மண்டினார்  உய்யலல்லால் மற்றையார்க்கு உய்யலாமே.. 2050
-: திருமங்கையாழ்வார் :-
(நன்றி: நாலாயிரத்  திவ்யப்ரபந்தம்)

சிவதரிசனம்

திருத்தலம்
திரு இடைமருதூர்
(திருவிடைமருதூர்)
ஸ்ரீ மகாலிங்க ஸ்வாமி

ஸ்ரீ மகாலிங்க ஸ்வாமி
ஸ்ரீ பிரகத் சுந்தரகுஜாம்பிகை

தலவிருட்சம் மருதமரம்
அமிர்ததீர்த்தம் காவிரி

சப்தரிஷிகளுக்கு உபதேசித்தருளிய திருத்தலம்

திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
பட்டினத்தடிகள்

தேவாரம்
வேதங்கள் வேள்வி பயந்தார் போலும்
விண்ணுலகும் மண்ணுலகும் ஆனார் போலும்
பூதங்க ளாய புராணர் போலும்
புகழ வளரொளியாய் நின்றார் போலும்
பாதம் பரவப் படுவார் போலும்
பத்தர் களுக்கு இன்பம் பயந்தார் போலும்
ஏதங்க ளான கடிவார் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.. 6/16/3
-: திருநாவுக்கரசர் :-
*
திருவாசகம்
திருப்பள்ளியெழுச்சி
பாடல் 7


 அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே..
-: மாணிக்கவாசகர் :-
( நன்றி: பன்னிரு திருமுறை)
*
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

  1. ​ஓம் சிவாய ஓம் நாராயணாய நம.

    பதிலளிநீக்கு
  2. //ஓம் சிவாய நம
    ஓம் நாராயணாய நம..//

    மகிழ்ச்சி..
    நன்றி ஸ்ரீராம்..

    பதிலளிநீக்கு
  3. ஓம் நமசிவாய... வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
  4. வாழ்க வளமுடன்...

    ஓம் நம சிவாய...

    மகிழ்ச்சி..
    நன்றி ஜி..

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. ஓம் நம சிவாய
      சிவாய நம ஓம்..

      மகிழ்ச்சி..
      நன்றி தனபாலன்

      நீக்கு
  6. இன்றைய மார்கழி மலர் அழகு! தயிரரவம்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்றைய மார்கழி ஏழாம் நாள் மலர் அருமை. பக்தி பரவசமூட்டும் பாடல்களையும், நல்லதோர் பதிவையும் தந்தமைக்கு மிக்க நன்றி. பக்தி மார்க்கத்தில் திளைக்க இயலாமல் நேற்று விடுபட்டு விட்டது. இனித் தொடர்கிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பக்தி பரவசமூட்டும் பாடல்களையும், நல்லதோர் பதிவையும்.. //

      தங்கள் ஆதரவே மகிழ்ச்சி..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு
  8. மார்கழி தரிசனம் அருமை. பாடல்களும், படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  9. திவ்விய தேச பாசுரங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..