நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 29, 2022

மலர் 14

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 14
  வியாழக்கிழமை.

தமிழமுதம்
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி 
மிச்சில் மிசைவான் புலம்.. 85
*
திவ்யதேச தரிசனம்
திருநறையூர்
 (நாச்சியார்கோயில்)

ஸ்ரீ நறையூர் நம்பி 
ஸ்ரீ வஞ்சுளவல்லி நாச்சியார்

மணிமுக்தா,
ஸாம்ப தீர்த்தம்.

கல் கருடன் எனும்
சிறப்புடைய தலம்.

கல்யாண திருக்கோலம் 
கிழக்கே திருமுக மண்டலம்.
ஹேம விமானம்

மங்களாசாசனம்
திருமங்கை ஆழ்வார் 
110 பாசுரங்கள்.
(நன்றி: காமகோடி. org)
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை பாசுரம் 14 


உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்..487
*

திவ்யதேச திருப்பாசுரம்

கல் கருட வாகனத்தில் நம்பி
உறியார் வெண்ணெய் உண்டு உரலோடும் கட்டுண்டு
வெறியார் கூந்தல் பின்னை பொருட்டு ஆன் வென்றானூர்
பொறியார் மஞ்ஞை பூம் பொழில்தோறும் நடமாட
நறு நாள்மலர்மேல்  வண்டிசை பாடும் நறையூரே. . 1491
-: திருமஙகையாழ்வார் :-
(நன்றி : நாலாயிரத் திவ்யப்ரபந்தம்)
**

சிவதரிசனம்

திருத்தலம்
திருகற்குடி
( உய்யக்கொண்டான்)

மார்க்கண்டேயர் வழிபட்ட திருத்தலம்


ஸ்ரீ உச்சிநாதர்
ஸ்ரீ அஞ்சனாட்சி

வில்வம்
ஞானவாவி

திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
*

தேவாரம்
நீரக லந்தரு சென்னி நீடிய மத்தமும் வைத்துத்
தாரகை யின்னொளி சூழ்ந்த தண்மதி சூடிய சைவர்
போரக லந்தரு வேடர் புனத்திடை இட்ட விறகில்
காரகி லின்புகை விம்முங் கற்குடி மாமலை யாரே.. 1/43/3
-: திருஞானசம்பந்தர் :-
*

திருவாசகம்
திருவெம்பாவை


முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன்என் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.. 3

ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.. 4
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

  1. ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் சிவாய நம..
      வாழ்க வளமுடன்..

      மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  2. கருத்துரையின் வண்ணம் மாறி இருக்கிறதே... நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தளத்தின் பக்கத்தில் பழைய பதிவுகள் பற்றிய குறிப்புகள் தெரிவதில்லை என்று கைதொலைபேசியில் முயற்சி செய்தேன்..

      தளத்தின் அடையாளம் மாறி விட்டது..

      சரி.. என்று விட்டு விட்டேன்..

      இதுவும் இருக்கட்டும்..

      நன்றி ஜி..

      நீக்கு
  3. திருநறையூர், திருக்கற்குடி இறை தரிசனங்கள் பெற்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கும்
      தரிசனத்திற்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி..

      நன்றி..

      நீக்கு
  4. பாடல்களிய பாடி திரு நறையூர்,திருக்கற்குடி இறைவனை தரிசனம் செய்து கொண்டேன்.
    பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும்
      தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலமே வாழ்க...

      நீக்கு
  5. கல்கருடன் வீதி உலா ஒரு வருஷம் காணக் கிடைத்தது. கோயிலுக்கு இரு முறைகள் போயிருக்கோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும்
      தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நலமே வாழ்க..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..