நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 20, 2022

மலர் 5

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 5 
   செவ்வாய்க்கிழமை.

தமிழமுதம்
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.. 34
*

திவ்யதேச தரிசனம் திருஅன்பில் 

ஸ்ரீ வடிவழகிய நம்பி
ஸ்ரீ அழகியவல்லி

தீர்த்தம் 
மண்டூக புஷ்கரிணி, 
கொள்ளிடம்.

புஜங்கசயனம் 
கிழக்கே திருமுக மண்டலம்.
தாரக விமானம்.

மங்களாசாசனம் 
திருமழிசையாழ்வார் ஒரு பாசுரம்.
(நன்றி: காமகோடி.org)
**

ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை பாசுரம் 5


மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.. 478
**

திவ்யதேசத் திருப்பாசுரம்


நாகத்தணைக் குடந்தை வெஃகா திருஎவ்வுள்
நாகத்தணை அரங்கம் பேர்அன்பில் நாகத்து
அணைப் பாற்கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தன் ஆவான். . 2417
-: திருமழிசையாழ்வார்:-
(நன்றி: நாலாயிர திவ்யப்ரபந்தம்)
**

சிவதரிசனம்

திருத்தலம்
திரு புள்ளிருக்கு வேளூர்
(வைத்தீஸ்வரன் கோயில்)

ஸ்ரீ வைத்யநாத ஸ்வாமி
ஸ்ரீ தையல்நாயகி

வேம்பு
சித்தாமிர்த தீர்த்தம்.

மஹா வைத்யநாத பீடம்
*
திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
**

தேவாரம்


பேரா யிரம்பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமுந் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.. 6/54/8
-: திருநாவுக்கரசர் :-
*
திருவாசகம்
திருப்பள்ளியெழுச்சி
பாடல் 5


பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்
தேதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே
தேதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே..
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

18 கருத்துகள்:

 1. கோயில் நடை அடைச்சுடுவாங்கனு சொன்னதாலே அவசரம் அவசரமாப் போய்ப் பார்த்த கோயில். அருமையான பாசுரங்கள், பதிகங்களோடு கூடிய நல்ல பதிவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தரிசனத்திற்கு மகிழ்ச்சி..

   நன்றியக்கா..

   நீக்கு
 2. மலர் 5 வட மதுரை இப்போது மதுரா யமுனை எல்லாம் குறிப்புகளாக உள்ள பாசுரம். பதிவு சிறப்பு

  கீதா

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை.அழகிய படங்கள் மனதிற்குள் பக்தியை தந்து திருபதியளிக்கின்றன. திருப்பாவை பாசுரமும், பதிகங்களும், நன்றாக உள்ளது. தேவர்களுக்கு உகந்த இந்த புனிதமான மார்கழியில், நாமும் இறைவனை தினமும் பாடிப் பணிவோம்.
  ஓம் நமோ நாராயணா... பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // தேவர்களுக்கு உகந்த இந்த புனிதமான மார்கழியில், நாமும் இறைவனை தினமும் பாடிப் பணிவோம்.
   ஓம் நமோ நாராயணா..
   //

   ஓம் நமோ நாராயணாய..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. தாமோதரனை போற்றி பாடுவோம் ....

  பதிலளிநீக்கு
 5. திருப்பாவை படித்து மகிழ்ந்தோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக.. வருக..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. இன்றியய தரிசனம் மிக அருமை.
  வைத்திய நாதன் நம் பிணி போக்குவான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை.. உண்மை..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   வாழ்க நலம்..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..