நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 27, 2022

மலர் 12

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 12
 செவ்வாய்க்கிழமை.

தமிழமுதம்
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.. 77
*
திவ்யதேச தரிசனம்
திருக்குடந்தை

ஸ்ரீ சார்ங்கபாணி ஸ்வாமி
ஸ்ரீ கோமளவல்லி நாச்சியார்

புன்னை மரம்
பொற்றாமரைக் குளம்.

உத்தான சயனம் - என கிழக்கு நோக்கி 
பாம்பணையின் மீது பள்ளி கொண்ட 
திருக்கோலம். 
வைதீக விமானம்.

மங்களாசாசனம்
பூதத்தாழ்வார், பேயாழ்வார், 
திருமழிசையாழ்வார், 
நம்மாழ்வார், பெரியாழ்வார்,
 ஸ்ரீஆண்டாள், திருமங்கையாழ்வார் -
 என, ஏழு ஆழ்வார்கள்.
 51 பாசுரங்கள்.
(நன்றி: காமகோடி.org)
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை
பாசுரம் 12


கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்
பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச்
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.. 485
*
திவ்யதேசத் திருப்பாசுரம்


வந்தாய் என்மனத்தே  வந்துநீ புகுந்தபின்னை
எந்தாய் போயறியாய்  இதுவே அமையாதோ
கொந்தார் பைம்பொழில்சூழ்  குடந்தைக் கிடந்துகந்த
மைந்தா உன்னைஎன்றும்  மறவாமை பெற்றேனே.. 1732
-: திருமங்கையாழ்வார் :-
(நன்றி : நாலாயிரத் திவ்யப்ரபந்தம்)
**

சிவதரிசனம்

திருத்தலம்
திருப்பூந்துருத்தி

திருநாவுக்கரசர்
திருமடம் 
அமைத்திருந்த தலம்..


ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர்
ஸ்ரீ சௌந்தரநாயகி

வில்வம், ஆல்
காசி தீர்த்தம், காவிரி.

திருப்பதிகம் அருளியோர்
திருநாவுக்கரசர்
மாணிக்கவாசகர்
*

தேவாரம்
அந்தியை நல்ல மதியினை யார்க்கும் அறிவரிய
செந்தியை வாட்டுஞ்செம் பொன்னினைச் சென்றடைந் தேனுடைய
புந்தியைப் புக்க அறிவினைப் பூந்துருத்தி உறையும்
நந்தியை நங்கள்பி ரான் தனை நானடி போற்றுவதே.. 4/88/9
-: திருநாவுக்கரசர் :-
*

திருவாசகம்
திரு கோத்தும்பி
 

கண்ணப்பன் ஒப்பதோர்
அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில்
என்னையும் ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை
வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.. 8/10/4
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

16 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. ஓம் நம சிவாய..
   ஓம் ஹரி ஓம்...

   மகிழ்ச்சி..
   நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓம் நம சிவாய
   சிவாய நம ஓம்..

   வாழ்க வையகம்..

   மகிழ்ச்சி.. நன்றி ஜி

   நீக்கு
 3. பதில்கள்
  1. ஓம் சிவாய நம..
   சிவாய நம ஓம்..

   மகிழ்ச்சி..
   நன்றி தனபாலன்..

   நீக்கு
 4. மிக அருமையான தரிசனம் இன்று. பாடல்களை பாடி தரிசனம் செய்து கொண்டேன்.( காலை இப்போது)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சி..

   நன்றி..

   வாழ்க நலம்..

   நீக்கு
 5. எம் பாவாய், படித்தோம். தாயுமானவர் வணங்கினோம்.

  பேரன் படம் பார்த்துவிட்டு கிருஷ்ணா எழுந்துவிட்டார் அம்மா ஏன் எழுப்பவில்லை என்று கேட்கிறார். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறு பிள்ளைகள் மனதில் பக்தி வளரட்டும்..

   அன்பின் வருகையும்
   கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. எனது கருத்து புதன் பதிவுக்கு வரவேண்டியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்போது வந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே..

   அன்பின் வருகையும்
   தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. திருக்குடந்தை, திருப்பூந்துருத்தி தரிசனங்கள் பெற்றோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும்
   தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. திருப்பூந்துருத்தி என்றாலே முதல்லே உபசாரம் தான் நினைவில் வருது. திருப்பாவை, திருவெம்பாவைப் பகிர்வுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும்
   விரிவான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   வாழ்க நலம்..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..