நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, டிசம்பர் 16, 2022

மலர் 1

 


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 1
  வெள்ளிக்கிழமை.

இன்றிலிருந்து
திருப்பாவை
திருவெம்பாவை
திருப்பாடல்கள்..


தமிழமுதம்
அகரமுதல எழுத்தெல்லாம
 ஆதி பகவன் முதற்றே உலகு. (001)
*
திவ்யதேச தரிசனம்
திரு அரங்கம்


ஸ்ரீ ரங்கநாதன்
ஸ்ரீ ரங்கநாயகி

தலவிருட்சம்புன்னை
தீர்த்தம்
 காவேரி, சந்த்ர புஷ்கரிணி முதலான
நவ தீர்த்தங்கள்

சயனத் திருக்கோலம் 
தெற்கே திருமுக மண்டலம்.
ஸ்ரீ ப்ரணவாக்ருதி விமானம்.

மங்களாசாசனம்
பத்து ஆழ்வார்களும் 
ஆண்டாளும் 
(மதுரகவி ஆழ்வாரைத் தவிர)
மொத்தம் 247 பாசுரங்கள்
(நன்றி: காமகோடி.org)
**

ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை பாசுரம் 1

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ் சிங்கம்
கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.. 474
*

திவ்யதேசத் திருப்பாசுரம்


பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகரு ளானே.. 873
-: தொண்டரடிப் பொடியாழ்வார் :-
( நன்றி: நாலாயிர திவ்யப்ரபந்தம்)
*

சிவதரிசனம்


திருத்தலம்
தில்லை திருச்சிற்றம்பலம்

ஸ்ரீ சிதம்பரேஸ்வரர்
ஸ்ரீ உமையாம்பிகை

தல விருட்சம் தில்லை
தீர்த்தம் சிவகங்கை

திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர்,
திருநாவுக்கரசர்,
சுந்தரர், மாணிக்கவாசகர்
மற்றும்
புண்ணியர் பலர்.
**

தேவாரம்
அரியானை அந்தணர்தம் சிந்தை யானை அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் திகழ் ஒளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.. 6/1
-: திருநாவுக்கரசர் :-
*
திருவாசகம்
திருப்பள்ளியெழுச்சி
பாடல் 1


போற்றிஎன் வாழ்முதல் ஆகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே..
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

21 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. திருப்பாவை, திருவெம்பாவை, தேவார பாடல்களுடன் மார்கழி மாதத்தின் தொடக்கம் நன்றாக உள்ளது. பக்தி பரவசத்தோடு பகிர்ந்த தெய்வ படங்கள் அனைத்தும் சிறப்பு .🙏. ஸ்ரீ மன்நாராயணனையும், அருள்மிகு நடராஜரையையும் பக்தியுடன் பாடல்களைப் பாடிப் போற்றிப் பணிந்து அனைவரும் நலமாக வாழ பிரார்த்தித்துக் கொண்டேன். தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பக்தியுடன் பதிகங்களைப் பாடிப் போற்றிப் பணிந்து அனைவரும் நலமாக வாழ பிரார்த்தித்துக் கொள்வோம்.

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. நல்ல பகிர்வு.

  கார்மேனிச் செங்கண்

  இப்போது இரண்டு மாதங்கள் அந்த்யயன காலம் எனப்படுவதால் திருப்பாவை திருப்பள்ளியெழுச்சி தவிர மற்றைய பிரபந்தங்கள் சேவிக்கப்படுவதில்லை. வைகுண்ட ஏகாதசிக்கு முன்னும் பின்னும், பகல்பத்து இராப்பத்து எனக் கொண்டாடப்பட்டு கோவில்களில் மாத்திரம் நாலாயிரம் சேவிக்கப்பெறும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெல்லை..

   தங்கள் வருகையும்
   மேலதிக விவரங்களும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. மார்கழி இன்று மதியம் பிறக்கிறது.

  பதிலளிநீக்கு
 4. மார்கழி...    மனங்கள் நனையட்டும் பனியாலும், தமிழாலும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 5. பக்தி பரவசமான பதிவு நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

   நீக்கு
 6. மார்கழி முதல் மலர் அருமை...

  கீதா

  பதிலளிநீக்கு
 7. பெயரில்லா16 டிசம்பர், 2022 16:51

  எபியில் உங்கள் கதையை வாசித்தேன், துரை அண்ணா. நன்றாக இருந்தது.

  ஐயம்பேட்டை அத்தையையும் பிடித்திருந்தது!!!

  கீதா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எபியில் கதையை வாசித்தமைக்கு மகிழ்ச்சி..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

   நீக்கு
 8. யசோதையின் இளஞ்சிங்கத்தை போற்றி பாடுவோம் ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போற்றிப் பாடுவோம் .

   அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. 'மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளில் ' போற்றி வணங்குவோம் அவன் பாதம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. மார்கழி பதிவு அருமை.
  மலர்கள் நனைந்தன பனியால்.
  மார்கழி பதிவால் மனங்களும் நனையட்டும்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..