நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, டிசம்பர் 23, 2022

மலர் 8

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 8
  வெள்ளிக்கிழமை.

தமிழமுதம்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.. 50
*
இன்று
ஸ்ரீ ஆஞ்சநேய ஜயந்தி


புத்திர் பலம் யசோ தைர்யம்
நிர் பயத்வம் அரோகதாம்
அஜாட்யம் வாக்படுத்வம் ச
ஹனுமத் ஸ்மரணாத் பவேத்:

ஓம் தத் புருஷாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ: மாருதி ப்ரசோதயாத்
**
திவ்யதேச தரிசனம்
திருக்கூடலூர் 
(கூடலூர் - ஆடுதுறை)

ஸ்ரீ ஜகத்ரட்சகப் பெருமாள்
ஸ்ரீ பத்மாசனவல்லி

கிழக்கு நோக்கி
நின்ற திருக்கோலம்
சுத்தஸத்வ விமானம்

மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார் 
10 பாசுரங்கள்
(நன்றி: காமகோடி. org)
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை பாசுரம் 8


கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய்.. 481
*
திவ்யதேசத் திருப்பாசுரம்


பிள்ளை உருவாய்த் தயிருண்டு அடியேன்
உள்ளம் புகுந்த ஒருவர் ஊர்போல்
கள்ள நாரை வயலுள்  கயல்மீன்
கொள்ளை கொள்ளும்  கூடலூரே..1360
-: திருமங்கையாழ்வார் :-
(நன்றி : நாலாயிர  திவ்யப்ரபந்தம்)
*

சிவதரிசனம்

திருத்தலம்
திருநாகேஸ்வரம்
திரு செண்பகாரண்யம்
நாகராஜன் வழிபட்ட தலம்.


ஸ்ரீ நாகேஸ்வரர்
ஸ்ரீ கிரிகுஜாம்பிகை

செண்பகம்
சூரிய தீர்த்தம்

திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
*

தேவாரம்

கொம்பனாள் பாகர் போலுங் கொடியுடை விடையர் போலும்
செம்பொனார் உருவர் போலுந் திகழ்திரு நீற்றர் போலும்
எம்பிரான் எம்மை யாளும் இறைவனே என்று தம்மை
நம்புவார்க்கு அன்பர் போலும் நாகஈச் சரவ னாரே.. 4/66/4
-: திருநாவுக்கரசர் :-
*

திருவாசகம்
திருப்பள்ளியெழுச்சி
பாடல் 8


முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின்னடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய்
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே.. 375
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஓம் நம சிவாய..
      சிவாய நம ஓம் ..

      மகிழ்ச்சி..
      நன்றி தனபாலன்..

      நீக்கு
  2. ஜெய் ஆஞ்சநேயா... ஜெய் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் ஜெய் ராம்
      ஸ்ரீராம் ஜெய் ராம்..

      மகிழ்ச்சி.
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. அருமையான பதிவு.
    திருப்பாவை பாசுரம், பாசுரம் திருபள்ளியெழிச்சி பாடல், பன்னிருத்திருமுறை பாடல் எல்லாம் பாடி இறைவனை தொழுது கொண்டேன்.

    எங்கள் ப்ளாக்கில் என்னை விசாரித்தமைக்கு நன்றி.

    வலை உலகை வெறுக்க முடியுமா?
    மனதுக்கு மகிழ்ச்சி, ஆறுதல் தரும் நண்பர்களை என்றும் அன்புடன் நன்றியுடன் நினைத்து கொண்டே தான் இருக்கிறேன்.
    வருவேன் இனி நேரம் கிடைக்கும் போது எல்லாம். மகன் வீட்டுக்கு நேற்று வந்தேன். ஸ்ரீராமிடம் எல்லோரையும் கேட்டதாக சொல்ல சொன்னேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி..

      உடலும் மனமும் தளர்வுற்று இருக்கும் நேரத்தில் ஊக்கம் அளிக்கும் நெஞ்சங்களுக்கும் ஒரு தளர்வு என்றால்
      மனம் பொறுக்க முடிய வில்லை..

      ஆத்மார்த்தமான அன்பு.. எழுத்துக்களின் வாயிலாகக கூட சந்தித்துக் கொள்ள இயலாத சூழ்நிலை..

      இவ்வளவு நீண்ட விடுப்பில் தாங்கள் இருந்ததில்லை..

      எனது வார்த்தைகளில் பிழை இருப்பின் மன்னித்து விடவும்..

      எங்கும் நலமே நிறைக.. நலமே நிறைக..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. சித்த மருத்துவம் பார்த்து கொண்டு இருப்பதாக கமலா ஹரிஹரன் அவர்கள் பதிவில் படித்தேன்.
    உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள்.

    சாரின் திதி, மற்றும் பிள்ளைகளின் வரவு, உறவுகள் வீட்டில் விழா , குலதெய்வ வழிபாடு, வீட்டுக்கு உறவுகள் வரவு. மற்றும் பாங்க் வேலைகள் மற்றும் இங்கு ஊருக்கு வர மேற்கொள்ளபட்ட வேலைகள் என்று சரியாக இருந்தது. வலை பக்கம் எட்டி கூட பார்க்க முடியவில்லை.

    மன்னிப்பு எல்லாம் எதற்கு அக்கறையான விசாரிப்புக்கு நன்றி.
    எனக்கும் உடலும், மனமும் சோர்ந்துதான் போகிறது, வலுவில் உற்சாகத்தை வரவழைத்து கொள்கிறேன். இறைவன் அனைவரையும் நலமாக வைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. // இறைவன் அனைவரையும் நலமாக வைக்க வேண்டும்..//

    அது ஒன்று தான் வேண்டுதலாக இருக்கின்றது..

    மகிழ்ச்சி.. நன்றி..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  6. அனைவரும் நலமாக இருக்கட்டும். ஆஞ்சநேயர் தரிசனம் பெற்றோம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவரும் நலமாக இருக்கட்டும்..

      அன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..