நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 06, 2022

அண்ணாமலை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 20
  செவ்வாய்க்கிழமை.

இன்றைய தினம் 
திருக்கார்த்திகை

எங்கும் நன்மைகள் சூழட்டும்.
இருள் பகை பிணி அகலட்டும்..


உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரள் மழலை முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே..1/10/1
-: திருஞானசம்பந்தர் :-


பூவார்மலர்கொண்டு அடியார்
தொழுவார் புகழ்வார் வானோர்கள்
மூவார்புரங்கள் எரித்த அன்று 
மூவர்க்கு அருள் செய்தார்
தூமாமழைநின்று அதிரவெருவித் 
தொறுவின் நிரையோடும்
ஆமாம்பிணைவந்து அணையுஞ்
சாரல் அண்ணா மலையாரே.. 1/69/1
-: திருஞானசம்பந்தர் :-


உருவமும் உயிரும் ஆகி ஓதிய உலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய் நின்றஎம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியும் அண்ணா மலையுளாய் அண்டர் கோவே
மருவிநின் பாத மல்லால் மற்றொரு மாடி லேனே..4/63/3
-: திருநாவுக்கரசர் :-


கருவி னைக்கடல் வாய்விட முண்ட எம்
திருவி னைத்திரு அண்ணா மலையனை
உருவி னை உண ரார்புர மூன்றெய்த
அருவி னை அடி யேன்மறந்து உய்வனோ.. 5/4/8
-: திருநாவுக்கரசர் :-


தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்
நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்
ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப் போம்நமது உள்ள வினைகளே.. 5/5/5
-: திருநாவுக்கரசர் :-


விண்ணாளும் தேவர்க்கு மேலாய வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்.. 8/8/10
-: மாணிக்கவாசகர் :-
**
அனைவருக்கும் அன்பின் இனிய
திருக்கார்த்திகை நல்வாழ்த்துகள்..

 ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

16 கருத்துகள்:

 1. திருக்கார்த்திகை நன்னாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்..

   மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. பாடல் மாலை, முக்தி தரும் அண்ணாமலையார் பதிவுக்கு அழகு சேர்க்கின்றன

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   தீபத்திருநாள்
   நல்வாழ்த்துகள்..

   நீக்கு
 3. அண்ணாமலைக்கு அரோஹரா! இன்னிக்குத் தான் எங்களுக்கும் தீபத்திருநாள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   தீபத்திருநாள்
   நல்வாழ்த்துகள்..

   நீக்கு
 4. ஒளிப் பிளம்பாய் ஒளிரும் அண்ணாமலையாரை வணங்குவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணாமலையாரை வணங்குவோம்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   தீபத்திருநாள்
   நல்வாழ்த்துகள்..

   நீக்கு
 5. பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

   தீபத்திருநாள்
   நல்வாழ்த்துகள்..

   நீக்கு
 6. பதில்கள்
  1. மகிழ்ச்சி..
   நன்றி தனபாலன்..

   தீபத்திருநாள்
   நல்வாழ்த்துகள்..

   நீக்கு
 7. அண்ணாமலையார் பதிவு அருமை. அண்ணாமலையார் கோயில் நினைவுகள். பல வருஷம் ஆகிவிட்டது பார்த்து. திருக்கார்த்திகை நல்வாழ்த்துகள் துரை அண்ணா. இங்கும் இன்று தீபத் திரு நாள் ஏற்றியாச்சு.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகிழ்ச்சி..
   நன்றி சகோதரி..

   தீபத்திருநாள்
   நல்வாழ்த்துகள்..

   நீக்கு
 8. உருவமும் உயிருமாகி ஓதிய உலகுக்கெல்லாம் பெருவினை பிறப்பு வீடாய் நின்ற எம்பெருமான் என் மனதிற்கினிய இறைவன் பற்றிய பதிவு அருமை. வாழ்த்துகள்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் பதிவில் உள்ள தேவாரப் பாடல்கள் எல்லாம் பல வருடங்களாக மனதில் இருப்பவை..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி துளசிதரன்..

   தீபத்திருநாள்
   நல்வாழ்த்துகள்..

   நீக்கு