நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, டிசம்பர் 30, 2022

மலர் 15

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 15
   வெள்ளிக்கிழமை.

தமிழமுதம்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை 
நாடி இனிய சொலின்.. 96
*
திவ்யதேச தரிசனம்
திருச்சேறை

ஸ்ரீ சாரநாதப்பெருமாள்
ஸ்ரீ சாரநாயகி

தீர்த்தம் ஸாரபுஷ்கரணி

நின்ற திருக்கோலம்
கிழக்கே திருமுக மண்டலம்.
ஸார விமானம்.

மங்களாசாசனம்
திருமங்கை ஆழ்வார்
13 பாசுரங்கள்
(நன்றி: காமகோடி. org)
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை பாசுரம் 15


எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.. 488
*
திவ்யதேசத் திருப்பாசுரம்

ஸ்ரீ சாரநாதப் பெருமாள்
  பண்டு ஏனமாய் உலகை அன்றிடந்த பண்பாளா என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணை அல்லால் துணையிலேன் சொல்லுகின்றேன்
வண்டேந்தும் மலர்ப் புறவின் வண்சேறை எம்பெருமான் அடியார் தம்மைக்
கண்டேனுக்கு இது காணீர் என் நெஞ்சும் கண்ணிணையும் களிக்குமாறே..1583
-: திருமங்கையாழ்வார் :-
(நன்றி : நாலாயிரத் திவ்யப்ரபந்தம்)

சிவதரிசனம்

திருத்தலம்
திரு ஆனைக்கா

பஞ்சபூதங்களில் நீருக்கான தலம். 
கருவறையில் எப்போதும் நீர்
சூழ்ந்திருக்கும்..


ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி

நாவல்
காவிரி, இந்திர தீர்த்தம்


ஆனையும் சிலந்தியும் அம்பிகையும் வழிபட்ட திருத்தலம்.


அம்பிகை தண்ணீரால் லிங்கம் அமைத்து
ஈசனை வழிபட்டு வேத உபதேசம் பெற்ற தலம்.

திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
*

தேவாரம்


வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்
தேனைக்காவில் இன்மொழித் தேவிபாகம் ஆயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க் கேதும் ஏதம் இல்லையே.. 3/53/1
-: திருஞானசம்பந்தர் :-
*
திருவாசகம்
திருவெம்பாவை


மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க பேசிப்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்.. 5

மானேநீ நென்னலை நாளைவந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்.. 6
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

16 கருத்துகள்:

  1. சிவாய நம ஓம்..

    மகிழ்ச்சி..
    நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  2. வாழ்க வையகம் ஓம் நமச்சிவாய...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் சிவாய நம..
      வாழ்க வளமுடன்..

      மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  3. திருசேறை, திரு ஆனைக்கா வணங்கினோம்.

    திரு ஆனைக்கா தலம் இருதடவை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // திருச்சேறை, திரு ஆனைக்கா வணங்கினோம்..//

      அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. அகிலாவைப் பார்த்தே பல வருஷங்கள் ஆகின்றன. திருச்சேறையும் போயிருக்கோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அகிலாவைத் தாங்கள் பார்க்கா விட்டாலும் அவள் உங்களைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றாள்..

      அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      வாழ்க நலம்..

      நீக்கு
  5. மலர் 15 அழகு! சாரநாதர் பார்த்ததில்லை.

    ஜம்புலிங்கேஸ்வரர் குடும்பத்தைப் பார்த்து ரொம்ப வருடங்களாகிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஜம்புலிங்கேஸ்வரர் குடும்பத்தைப் பார்த்து ரொம்ப வருடங்களாகின்றன.. //

      கீதாக்காவும் இப்படித் தான் சொல்லி யிருக்கின்றார்கள்..

      அவள் நம்மையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்றாள் என்பதே உண்மை..

      அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  6. திருச்சேறை, திரு ஆனைக்கா தரிசனம் சிறப்பு. திரு ஆனைக்கா போக நினைத்து போக முடியவில்லை. உங்கள் தலத்தில் தரிசனம் செய்து விட்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும்
      தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  7. நிறைவான பதிவு. இவ்விரு தலங்களுக்கும் பல முறை சென்றுள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஐயா..

      நலம் வாழ்க..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..