நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, டிசம்பர் 09, 2022

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 23 
  வெள்ளிக்கிழமை.

இன்றொரு திருப்புகழ்
கம்பை நகர்
கச்சி - காஞ்சிபுரம்


தனதான தந்த தனதான தந்த
தனதான தந்த ... தனதான

மயலோது மந்த நிலையாலும் வஞ்ச 
வசைபேசு கின்ற ... மொழியாலும்

மறிபோலு கின்ற விழிசேரு மந்தி 
மதிநேரு கின்ற ... நுதலாலும்

அயிலேநி கர்ந்த விழியாலும் அஞ்ச
நடையாலும் அங்கை ... வளையாலும்

அறிவேய ழிந்து அயர்வாகி நைந்து
அடியேன்ம யங்கி ... விடலாமோ..

மயிலேறி யன்று நொடிபோதி லண்டம்
வலமாக வந்த ... குமரேசா

மறிதாவு செங்கை அரனா ரிடங்கொள்
மலைமாது தந்த ... முருகேசா

நயவானு யர்ந்த மணிமாட மும்பர்
நடுவேநி றைந்த ... மதிசூழ

நறைவீசு கும்ப குடமேவு கம்பை
நகர்மீத மர்ந்த ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
(நன்றி: கௌமாரம்)


ஆசையை அறிவிக்கின்ற அந்தத் 
தோற்றத்தாலும் வஞ்சகமாகப் பேசுகின்ற
பேச்சுக்களாலும்

மானைப் போன்ற பார்வையாலும் பிறைச் சந்திரனைப்  போன்ற  நெற்றியாலும்,

வேலை ஒத்த கண்களாலும், அன்னத்தை ஒத்த நடையாலும், அழகிய கரங்களின்  வளையல்களாலும்,

என் அறிவு அழிபட்டு சோர்வடைந்து உள்ளம்
ஒடுங்கி அடியேனாகிய நான் மயக்கம் கொள்ளலாமோ?..

முன்பொரு சமயம் மயில் மீதேறி ஒரு நொடிப் பொழுதில் உலகைச் சுற்றி வந்த குமரேசனே..

சிவந்த கரத்தில் தாவுகின்ற மானை உடைய
சிவபெருமானின் திருமேனியில் ஒரு பாகமாக 
விளங்குகின்ற உமையாள் பெற்ற முருகேசனே..

வானளவு உயர்ந்து விளங்கும் அழகிய மாடங்களின் உச்சியும் நடுவும் நிலவின் ஒளியால் சூழ்ந்து விளங்கவும்

(வேள்வியின் பொருட்டு) நறுமணப் பொருட்களால் நிறைந்துள்ள கலசங்களும், குடங்களும்  விளங்குகின்ற 

கம்பை ஆற்றங்கரையில் திகழ்கின்ற காஞ்சி மாநகரில் வீற்றிருக்கும் பெருமாளே..

முருகா சரணம்
சரணம் சரணம்..
***

13 கருத்துகள்:

 1. இவர்தானே  ஒன்பதுவாய் ஓட்டைக்கு ஒருநாளைப்போல் ஏங்குவாயோ மடநெஞ்சே என்று எழுதியவர்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சித்தர்கள் இப்படித் தான் பாடுகின்றனர்..

   தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. நல்லதொரு திருப்புகழும் அதன் விளக்கமும்.காஞ்சி குமரகோட்டத்திற்கு நாலைந்து முறை சென்றிருக்கோம். வேலும் மயிலும் துணை இருக்கப் பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //வேலும் மயிலும் துணை இருக்கப் பிரார்த்திப்போம்.//

   தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 3. காஞ்சியில் அமர்ந்த முருகா பணிகின்றோம் உன் திருவடி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகையும் அன்பின் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. திருப்புகழ் மற்றும் விளக்கம் அருமை. காஞ்சி குமரகோட்ட்ம கோயிலுக்குச் சென்றதுண்டு பல வருடங்களுக்கு முன்.

  கீதா

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. படங்கள் அழகு. இன்றைய திருப்புகழ் பாடலும், அதன் விளக்கமும் நன்றாக உள்ளது. காஞ்சியில் அழகாக அமர்ந்து அனைவருக்கும் அருள்பாலிக்கும் அந்த முருகனின் திருவடியை போற்றுவோம். கந்தா சரணம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 6. // காஞ்சியில் அழகாக அமர்ந்து அனைவருக்கும் அருள்பாலிக்கும் முருகனின் திருவடியை போற்றுவோம்..//

  மிகுந்த சிரமத்துக்கு இடையில் தங்களது வருகை..

  தங்கள் வருகையும் அன்பின் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..