நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, டிசம்பர் 31, 2022

மலர் 16

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 16
  சனிக்கிழமை.

தமிழமுதம்
இனிய உளவாக இன்னாத கூறல் 
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.. 100
*
திவ்யதேச தரிசனம்
திரு கண்ணமங்கை

ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள்
ஸ்ரீ அபிஷேகவல்லி நாச்சியார்

தர்சன புஷ்கரிணி
உத்பல விமானம்

நின்ற திருக்கோலம் 
கிழக்கே திருமுக மண்டலம்.

மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
14 பாசுரங்கள்
(நன்றி: காமகோடி.org)
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவைபாசுரம் 16


 நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.. 16
*
திவ்யதேசத்  திருப்பாசுரம்

ஸ்ரீ பக்தவச்சல பெருமாள்
பண்ணினை பண்ணில் நின்றதோர் பான்மையை பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின்ஒளி தன்னை
மண்ணினை மலையை அலை நீரினை மாலை மாமதியை மறையோர் தங்கள்
கண்ணினை  கண்கள் ஆரளவும் நின்று கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே.. 1646
-: திருமங்கையாழ்வார் :-
(நன்றி : நாலாயிர திவ்யப்ரபந்தம்)
**

சிவதரிசனம்

திருத்தலம்
திரு நணா
(பவானி)




காவிரி, பவானி, அமுதநதி கூடுதுறை


ஸ்ரீ சங்கமேஸ்வரர்
ஸ்ரீ வேதநாயகி

இலந்தை மரம்
காவிரி, பவானி.


திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர்
*

தேவாரம்
வில்லார் வரையாக மாநாக நாணாக வேடங்கொண்டு
புல்லார் புரமூன்று எரித்தார்க்கு இடம் போலும் புலியுமானும்
அல்லாத சாதிகளும் அங்கழல் மேற் கைகூப்ப அடியார்கூடிச்
செல்லா வருநெறிக்கே செல்ல அருள்புரியுந் திருநணாவே.. 2/72/6
-: திருஞானசம்பந்தர் :-
*

திருவாசகம்
திருவெம்பாவை


 அன்னே இவையுஞ் சிலவோ பலஅமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.. 7

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்.. 8
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. அழகிய படங்களுடன் சுவையான தமிழ்...

    பதிலளிநீக்கு
  2. தரிசனம் நன்று வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும்
      தரிசனமும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  3. திருக்கண்ணமங்கை, திரு நணா தரிசனம் செய்து கொண்டேன். பாடல்களை படித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும்
      தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
    2. இறை தரிசனம் பெற்றோம் .

      நீக்கு
    3. அன்பின் வருகையும்
      தரிசனமும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. அருமையான கூடுதுறை தரிசனம். பக்கத்திலேயே இருந்தும் போனதில்லை. இங்கே பார்த்துத் தரிசித்துக் கொண்டேன். நன்றி.திருக்கண்ணமங்கையும் போனதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஒரு முறை சென்றிருக்கின்றேன்.. அப்போது கூடுதுறையில் தண்ணீர் மிகவும் குறைவாக இருந்தது..

      அன்பின் வருகையும்
      தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நலம் வாழ்க..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..