நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 01, 2023

மலர் 17

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 17
  ஞாயிற்றுக்கிழமை.

தமிழமுதம்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் 
வானகமும் ஆற்றல் அரிது.. 101
*
திவ்யதேச தரிசனம்
திருக்கண்ணபுரம்

ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள்

ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் 
ஸ்ரீ தேவி, பூதேவி,
ஆண்டாள், பத்மினி.

நித்யபுஷ்கரிணி

ப்ரயோகச் சக்ரத்துடன்
நின்ற திருக்கோலம். 
கிழக்கே திருமுக மண்டலம்.
உத்பலாவதக விமானம்.

மங்களாசாசனம்
பெரியாழ்வார் ஆண்டாள்
குலசேகராழ்வார் 
திருமங்கையாழ்வார்
நம்மாழ்வார்
128 பாசுரங்கள்
(நன்றி: காமகோடி.org)
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை பாசுரம் 17


அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம் பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.. 490
*
திவ்யதேசத் திருப்பாசுரம்


 தாராய தண்துளப  வண்டுழுத 
வரைமார்பன் என்கின்றாளால்
போரானைக் கொம்பொசித்த புட்பாகன்
என்னம்மான் என்கின்றாளால்
ஆரானும் காண்மின்கள்  அம்பவளம் 
வாயவனுக்கு என்கின்றாளால்
கார்வானம் நின்றதிரும்  கண்ணபுரத்து 
அம்மானைக் கண்டாள் கொலோ.. 1651
-: திருமங்கையாழ்வார் :-
(நன்றி : நாலாயிர திவ்யப்ரபந்தம்)
**

சிவதரிசனம்

திருத்தலம்
திரு ஆலவாய்
மதுரையம்பதி

மலையத்துவச பாண்டியனுக்கு 
பராசக்தி மகளாகத் தோன்றி வளர்ந்த தலம்


ஸ்ரீ சுந்தரேஸ்வரர்
ஸ்ரீ அங்கயற்கண்ணி


கடம்பு
பொற்றாமரைக்குளம்

திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
*

தேவாரம்


மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை 
வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி 
பணிசெய்து நாள்தொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநா யகன்
நால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த 
ஆலவாய் ஆவதும் இதுவே.. 3/120/1
 -: திருஞானசம்பந்தர் :-
*

திருவாசகம்
திருவெம்பாவை


முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்.. 9

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.. 10
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

16 கருத்துகள்:

 1. இவைகளை இயற்றும்போது பல்லாயிரம் வருடங்களுக்குப் பின்னும் இவை பாடப்படும், நினைவில் கொல்லபப்டும் என்று அவர்கள் அறிந்திருப்பார்களா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவைகளை இயற்றும்போது பல்லாயிரம் வருடங்களுக்குப் பின்னும் இவை பாடப்படும், நினைவில் கொள்ளப்படும் என்பதை ஞானியர் ஆகிய நமது ஆண்டாளும் மாணிக்கவாசகரும் தேவார மூவரும் ஏனையோரும் அறிந்தே இருப்பார்கள்..

   அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   2023 அனைவருக்கும் இனியதாக அமைவதற்கு இறைவன் அருள்வானாக..

   நீக்கு
 2. திருக்கண்ணபுரம், திரு ஆலவாய் தரிசனம் அருமை.
  பாடல்களை பாடி தரிசனம் செய்து கொண்டேன்.
  புதுவருட வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும்
   தரிசனமும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

   நலம் வாழ்க..

   நீக்கு
 3. இன்றைய தரிசனம் நன்று வாழ்க வையகம்.

  இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் தரிசனமும் வாழ்த்தும் மகிழ்ச்சி..

   இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்..

   நன்றி ஜி..

   நீக்கு
 4. அருமை...

  அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி..

   இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் தனபாலன்...

   நீக்கு
 5. திருக்கண்ணபுரம்,திருவாலவாய் இறைவன் பணிந்தோம்..

  அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் தரிசனமும் வாழ்த்தும் மகிழ்ச்சி..

   தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் ...

   நீக்கு
 6. திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள், அங்குள்ள ஸ்ரீராமர் சந்நிதி, ஆகியவற்றையும் தரிசனம் செய்திருக்கேன். இந்தக் கோயிலுக்கு அவர் வரலை. நானும் எங்க பெண்ணுமாகத் தை அமாவாசை அன்று சென்றோம். திருக்கோயில்த் தெப்பக்குளத்தில் ஒன்பது படித்துறைகளிலும் வெற்றிலை, பாக்கு வைச்சுக்கொடுக்கச் சொன்னார்கள். அதைச் செய்துவிட்டு வந்தோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் ஒரே ஒரு முறை சென்றிருக்கின்றேன்.

   அன்பின் வருகையும்
   தரிசனமும் மேலதிக செய்திகளும் மகிழ்ச்சி..
   நன்றியக்கா..

   நலம் வாழ்க..

   நீக்கு
 7. தாமதமான ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நமக்கென்று புத்தாண்டு நாள் ஒன்று உண்டே!..

   எனினும் தங்களுக்கும் வாழ்த்துகள்..

   தங்கள் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி..

   அன்பின் வருகையும்
   தரிசனமும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நலம் வாழ்க..

   நீக்கு
 8. திருக்கண்ணபுரம் சென்றதுண்டு. பல வருடங்களுக்கு முன்....மலர் 17 அருமை

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

   நலம் வாழ்க..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..