நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 03, 2023

மலர் 19

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 19
  செவ்வாய்க்கிழமை.

தமிழமுதம்
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் 
செல்வர்க்கே செல்வம் தகைத்து.. 125
*
திவ்யதேச தரிசனம்
திரு நாகை
நாகப்பட்டினம்


 ஸ்ரீ நீலமேகப் பெருமாள்
ஸ்ரீ சௌந்தர்யராஜன்
ஸ்ரீ சௌந்தர்யவல்லி

சாரபுஷ்கரிணி

கதையுடன் நின்ற திருக்கோலம்
கிழக்கே திருமுக மண்டலம்.
சௌந்தர்ய விமானம்.

மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
10 பாசுரங்கள்.
(நன்றி: காமகோடி.org)
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை பாசுரம் 19 


 குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.. 492
*
திவ்யதேசத் திருப்பாசுரம்


வம்பவிழும் துழாய் மாலை தோள்மேல்  
கையன ஆழியும் சங்கும் ஏந்தி
நம்பர்நம் இல்லம் புகுந்து நின்றார் 
நாகரிகர் பெரிதும் இளையர்
செம்பவளம் இவர் வாயின் வண்ணம் தேவர் 
இவரது உருவம் சொலலில்
அம்பவளத் திரளேயும் ஒப்பர் 
அச்சோ ஒருவர் அழகியவா.. 1761
-: திருமங்கையாழ்வார் :-
(நன்றி : நாலாயிர திவ்யப்ரபந்தம்)
**

சிவதரிசனம் திருத்தலம்
திருவலிவலம்


ஸ்ரீ மனத்துணை நாதர் 
ஸ்ரீ வாளையங்கண்ணி

புன்னை 
சக்கர தீர்த்தம்
காரண கங்கை


ஆனைச்சாத்தன் எனும் 
கருங்குருவி வழிபட்ட திருத்தலம்.

திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
*


தேவாரம்

பிடியதன் உரு உமை கொளமிகு கரியது 
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர் 
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை 
வடிவினர் பயில்வலி வலம் உறை இறையே.. 1/123/5  
-: திருஞானசம்பந்தர் :-
*

திருவாசகம்
திருவெம்பாவை
 

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்..13

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்..14

-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*
நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தஞ்சை மாமணிக் கோயில்களில் அதிகாலைப் பொழுதில் ஸ்வாமி தரிசனம்..

ஸ்ரீ வீர நரசிங்கப் பெருமாள்.ஸ்ரீ மணிக்குன்றப் பெருமாள்


ஸ்ரீ நீலமேகப்பெருமாள்


ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

 1. படங்களின் பகிர்வும் சிறப்பு.  பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்...

   நீக்கு
 2. அனைத்தும் அருமை.
  ஸ்ரீமணிக்குன்றபெருமாள் கோயில் வைகுண்டஏகாதசி தரிசனம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் தரிசனமும் மகிழ்ச்சி..

   நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 3. பெயரில்லா03 ஜனவரி, 2023 12:31

  வைகுண்ட ஏகாதசிப் படங்கள் சிறப்பு.

  உங்களின் உடல் நலம் விரைவில் சரியாகிட இறைவன் அருளிட வேண்டும், துரை அண்ணா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   அன்பின் பிரார்த்தனைக்கு நன்றி சகோ..

   நீக்கு
 4. ஸ்ரீ மனத்துணைநாதர், நீலமேகப் பெருமாள் தரிசித்தோம்.வைகுண்ட ஏகாதசி படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் தரிசனமும் மகிழ்ச்சி..

   நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..