நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 08, 2023

மலர் 24

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 24 
  ஞாயிற்றுக்கிழமை.

தமிழமுதம்
வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங் குறியெதிர்ப்பை நீர துடைத்து.. 221
*
திவ்யதேச தரிசனம்
தில்லை சித்ரகூடம்


ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் 
ஸ்ரீ புண்டரீகவல்லி

புண்டரீக புஷ்கரிணி

போக சயனம்
கிழக்கே திருமுக மண்டலம்
ஸாத்விக விமானம்.

மங்களாசாசனம்
குலசேகராழ்வார்
திருமங்கையாழ்வார்
 32 பாசுரங்கள்.
(நன்றி: காமகோடி.org)
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை பாசுரம் 24


அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.. 497
*
திவ்யதேசத் திருப்பாசுரம்


அங்கண் நெடுமதில் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்துலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி விண் முழுதும் உயக் கொண்ட வீரன்தன்னைச்
செங்கண் நெடுங் கரு முகிலை இராமன்தன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான்தன்னை  என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே.. 741
-: குலசேகராழ்வார் :-
(நன்றி : நாலாயிர திவ்யப்ரபந்தம்)
**

சிவதரிசனம்

திருத்தலம்
திருவீழிமிழலை
ஸ்ரீ விஷ்ணு பூஜித்த தலம்


ஸ்ரீ வீழிநாதர்
ஸ்ரீ சுந்தர குஜாம்பிகை

வீழிச்செடி
விஷ்ணு தீர்த்தம்
முதலான 25 தீர்த்தங்கள்.


திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரர், சேந்தனார்.
**
தேவாரம்


நம்பி னார்க்கருள் செய்யும் அந்தணர்
நான்ம றைக்கிட மாய வேள்வியுள்
செம்பொன் நேர்மடவார் அணி பெற்ற திருமிழலை
உம்பரார் தொழுதேத்த மாமலை
யாளொ டுமுடனே உறைவிடம்
அம்பொன் வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே..
7/88/1
-: சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் :-
*
திருவாசகம்
திருஅம்மானை


பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார்
ஆராலும் காண்டற் கரியான் எமக்கெளிய
பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி
வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த
ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும்
பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய்.. 8/8/2
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

 1. கோவிந்தராஜ பெருமாள், திருவீழிநாதர் தரிசனம் செய்து கொண்டேன்.
  படங்களும் பாடல் பகிர்வும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 2. ஞாயிறு தரிசனம் நன்று
  வாழ்க வையகம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி..

   நன்றி ஜி..

   வாழ்க வையகம்..

   நீக்கு
 3. கோவிந்தராஜரையும் திருவீழிநாதரையும் தரிசித்துக் கொண்டேன். படங்கள் அருமை

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி..

   நன்றி சகோ..

   வாழ்க நலம்

   நீக்கு
 4. கோவிந்தராஜப் பெருமாள்,திருவீழி மழலை தரிசனங்கள் பெற்றோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி..

   வாழ்க நலம்..

   நீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  மார்கழி பதிவு அருமை. அருள்மிகும் ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள், தாயார் ஸ்ரீ புண்டரீக வல்லி அம்மை தரிசனம் பெற்றேன்.

  ஸ்ரீ பெருமாள் கண்டுணர்ந்த திருவீழிமிழலை ஸ்ரீ ஈஸ்வரனின் தரிசனமும் கண்டு மகிழ்வுற்றேன். பக்திப் பாடல்கள் படித்து தெரிந்து கொண்டேன்.அருமையான பக்தி பதிவுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  இப்போது தங்கள் உடல்நிலை எவ்வாறுள்ளது?குணமாகி வருகிறதா? உடம்பை கவனித்துக் கொள்ளவும். விரைவில் தாக்கள் பூரண நலமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி..

   உடல் நிலை மிகவும் மெதுவாக தேறி வருகின்றது..

   உடலில் அரிப்பும் தடிப்பும் குறைந்து வருகின்றன.. முழுமையாக குணமடைவதற்கு சில வாரங்கள் ஆகலாம்..

   தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   வாழ்க நலம்..

   நீக்கு
 6. திருவீழிமழலை திருவீழிநாதர்..   என்ன அழகான பெயர்கள்..  தரிசனம் ஆச்சு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி ..

   நன்றி ஸ்ரீராம்..
   நலம் வாழ்க..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..