நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 07, 2023

மலர் 23

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 23 
 சனிக்கிழமை.

தமிழமுதம்
கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉ மின்றிக் கெடும்.. 166
*
திவ்யதேச தரிசனம்
திருச் சிறுபுலியூர்


ஸ்ரீ தலசயனப் 
பெருமாள்
ஸ்ரீ க்ருபா ஸமுத்ரப் பெருமாள்
ஸ்ரீ திருமாமகள் நாச்சியார்

 அனந்த சரஸ்
புஜங்கசயனம்
தெற்கே திருமுக மண்டலம்
நந்தவர்த்தன விமானம்.

மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
11 பாசுரங்கள்.
(நன்றி: காமகோடி.org)
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை பாசுரம் 23


 மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.. 496
*
திவ்யதேசத் திருப்பாசுரம்

ஸ்ரீ க்ருபா சமுத்ர பெருமாள்
கருமா முகிலுருவா  கனலுருவா புனலுருவா
பெருமால் வரையுருவா  பிறஉருவா நினதுருவா
திருமா மகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
அருமா கடலமுதே  உனது அடியே சரணாமே.. 2760
-: திருமங்கையாழ்வார :-
(நன்றி : நாலாயிர திவ்யப்ரபந்தம்)
**
சிவதரிசனம்

திருத்தலம்
திருக்கடவூர் வீரட்டம்


ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர்
ஸ்ரீ அபிராமவல்லி
ஸ்ரீ காலசம்ஹார மூர்த்தி
ஸ்ரீ பாலாம்பிகை

பிஞ்சிலம்
(ஜாதி முல்லை)
அமிர்த புஷ்கரிணி

திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரர், அபிராமபட்டர்.
*
தேவாரம்


போரா ருங்கரியின்  உரி
போர்த்துப்பொன் மேனியின்மேல்
வாரா ரும்முலையாள் ஒரு
பாக மகிழ்ந்தவனே
காரா ரும்மிடற்றாய் கட
வூர்தனுள் வீரட்டானத்
தாரா என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.. 7/28/4
-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-
*

திருவாசகம்
திருஅம்மானை
 

செங்கண் நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான்
அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும் அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்.. 8/8/1
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*
மதுரையம்பதியின்
வெள்ளியம்பலத்தில்
கால் மாறி ஆடிய பெருமான்
திரு ஆதிரை உலா எழுந்தருளிய காட்சிகள்..

நெல்லையம்பதியில்**
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

16 கருத்துகள்:

 1. அருளட்டும் ஆண்டவர்.  தேறட்டும் உடல்நிலை. அமிழ்தமிழ்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நலம் வாழ்க..

   நீக்கு
 2. ஸ்ரீராம், இங்கு நிற்கிற யானை பார்த்து விட்டீர்களா?
  னிற்கும் யானையை பார்க்க ஆசை பட்டீர்கள் பார்த்து விட்டீர்களா?

  பதிலளிநீக்கு
 3. அருமையான தரிசனம். சிறு புலியூர், கடவூர், மதுரை, நெல்லை என அனைத்து கோவில் தரிசனமும் கிடைத்தது மகிழ்ச்சி.
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 4. கோயில் படங்கள் மிகவும் சிறப்பாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ஜி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 5. பதில்கள்
  1. ஓம் சிவாய நம..
   மகிழ்ச்சி..
   நன்றி தனபாலன்..

   நலம் வாழ்க..

   நீக்கு
 6. கோவில் தரிசனங்கள் கிடைத்தது. உலா காட்சி படங்களும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 7. எல்லாக் கோயில்களின் வீதி உலா படங்கள் அருமை. யானை ஆஹா! அழகு...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி சகோ..

   நலம் வாழ்க..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..