நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 16, 2023

உழவுக்கும்..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
திங்கட்கிழமை
மங்கலகரமான
தை மாதத்தின் இரண்டாம் நாள்.
  
அன்பின் இனிய
மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள்..


உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.

உழவும் அதனைச் சார்ந்தவை மட்டுமே தொழில் எனப்பட்ட காலம் இனி வரப்போவதில்லை..


உழவுக்கும் உழவர்க்கும் உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே மாட்டுப் பொங்கல் நாள். 

கோ பூஜையின் மறு வடிவமே
மாட்டுப் பொங்கல்..தொழுவத்தை சுத்தம் செய்து  மாடு கன்றுகளைக் குளிப்பாட்டி  அவற்றின் 
மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு முதலானவற்றையும் புதியதாக அணிவித்து - கொம்புகளில் வண்ணம் தீட்டி சலங்கை கட்டி நெற்றியில் மஞ்சள் குங்குமம் பூசி - தூப தீபங்களுடன் பொங்கல் ஊட்டி வழிபடுவது மரபு.. நமது கலாச்சாரம்..
பட்டி எங்கும் பெருகட்டும்
பால் பசுவும் வாழட்டும்..
நிலம் எல்லாம் செழிக்கட்டும்
நெல்லு கட்டு நிறையட்டும்..

பவளமணி குவியட்டும்..
பால் சோறு பொங்கட்டும்
மங்கலமாய்த் திசை எட்டும்
மங்கை மனம் வாழட்டும்..

தங்க வளை பேசட்டும்
தர்மங்கள் சூழட்டும்
தன்னுயிராய் மன்னுயிரைத் 
தாங்குபவர் வாழட்டும்..

 படுபிணியும் பஞ்சங்களும் 
பாதையோடு போகட்டும்..
பாதகமும் பாழ்குணமும்
பாதையின்றித் தொலையட்டும்!..

தமிழ் அமுதம் பொங்கட்டும்
தமிழகமும் வாழட்டும்!..
**

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

18 கருத்துகள்:

 1. சிறப்பான பதிவு.  நன்னாளின் சிறப்பை நன்கு எடுத்துரைத்தீர்கள்.  உங்கள் கவிதையும் சூப்பர்.  பசுபுசுவென காய்கறிகளை, விளைநிலங்களைக் கண்டால் மனதில் ஏற்படும் உற்சாகம்... சந்தோஷம், நிறைவு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   கவிதையைப் பாராட்டியதற்கு மகிழ்ச்சி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 2. நல்ல பதிவு. பசும் காய்கறிகள், உழவு நிலங்கள் உழவர்களை நினைக்கத் தூண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 3. இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு
 4. பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

   நலம் வாழ்க..

   நீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமையாக உள்ளது. தங்களுக்கும், மற்றும் நம் நட்புகள் அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் வாழ்த்துகள்.

  பச்சைபசேலென காய்கறிகளின் படங்களும், ஆவினங்களை சிறப்புபடுத்த கூறிய விளக்கங்களுமாக பதிவை இன்றைய தினத்திற்கு சிறப்பாக அமைத்து தந்து விட்டீர்கள் பாராட்டுக்கள்.
  தங்களது கவிதையையும் ரசித்துப்படித்தேன். பொருள் நிறைந்த கவிதை மிகவும் நன்றாக உள்ளது. அனைத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // பொருள் நிறைந்த கவிதை மிகவும் நன்றாக உள்ளது..//

   அன்பின் வருகையும் வாழ்த்தும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

   நலம் வாழ்க..

   நீக்கு
 6. பெயரில்லா16 ஜனவரி, 2023 10:25

  பட்டிப் பொங்கல் நன்னாளில் சிறப்பான கவிதை.

  நாளிற்கு ஏற்ப படங்களும் காண நன்றாக இருந்தது.

  நீங்கள் கூறியதுபோல வரும் காலங்களில் படங்களில்தான் பார்த்து மகிழவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலத்தின் மாற்றம் இப்படித்தான் ஆகும் போல் இருக்கின்றது..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

   நலம் வாழ்க..

   நீக்கு
 7. துரை அண்ணா உங்கள் கவிதையும் பசுமையான காய்கறிகளின் படங்களும் அருமை. இப்படியான காய்களையும் பூத்துக் குலுங்கும் தோட்டங்கள், பயிர்கள் செழுமையாக இருக்கும் விளை நிலங்களியக் கண்டாலே மனம் குதூகலிக்கும். பதிவிற்கு அழகு சேர்த்துச் சிறப்பித்தது உங்கள் கவிதை!

  2021 ல் எங்கள் ஊருக்குச் சென்ற போது சுற்றிலும் பசுமை, வயல்கல் மலைகள் என்று பார்த்து மனதிற்குப் புத்துணர்ச்சியை ஏற்றிக் கொண்டு வந்தேன். இனி அப்படியான வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை. இன்னும் வயல்கள் முந்திரி தோட்டங்கள் ரப்பர் தோட்டங்கள் அப்படியே இருக்கின்றன எங்கள் கிராமத்துக்குள் மட்டும் வயல்கள் அழிந்து வீடுகளாகி வருகின்றன. கடம்போடுவாழ்வு ஊரில் மாடுகள், ஆடுகள் வயல்கள் குளங்கள் எல்லாம் கண்டதும் மனம் களித்தது,

  இங்கு பங்களூரில் காய்கள் பசுமையாகக் கிடைக்கின்றன.

  அருமையான பதிவு துரை அண்ணா

  கீதா

  பதிலளிநீக்கு
 8. அருமையான கவிதை. படங்கள் பகிர்வு மிக அருமை.
  மகன் கரும்பு தோட்டத்தில் போய் ஆலை கரும்பு வாங்கி வந்தான்.
  இந்த வருடம் காளைமாடு செய்து இருந்தான் பொங்கல் வாழ்த்துக்கு.
  ஏருபூட்டி அதற்கு பூஜை செய்வது, மாட்டு வண்டியில் காய்களை ஏற்றி கொன்டு வந்து சந்தையில் விற்பது எல்லாம் அந்தக்கால சினிமாவில் காட்டுவார்கள். பாட்டு இருக்கும்.
  மாயவரத்தில் மாட்டு வண்டியில் பொங்கலோ! பொங்கல் சொல்லி செல்லும் குழந்தைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // மாயவரத்தில் மாட்டு வண்டியில் பொங்கலோ! பொங்கல் சொல்லி செல்லும் குழந்தைகள்... /.

   சின்ன வயதில் நானும் அவ்வாறு சென்றிருக்கின்றேன்.. அந்த சந்தோஷம் எல்லாம் இனி ஒருபோதும் கிடைக்காது..

   தங்கள் அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 9. உழவும் அதை சார்ந்த தொழிலும் சிறக்க வேண்டும்.மீண்டும் அந்த பொற்காலம் வர வேண்டும்.தேங்காய் சிரட்டை கரண்டி இன்னும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். மண்பானையில் பொங்கல் செய்யும் போது அந்த கரண்டி பயன்படுத்துவார்கள். மதுரையில் ஒரு குடும்பம் செய்து கொண்டு இருக்கிறது, எங்கள் வீட்டுக்கு அருகில்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // தேங்காய் சிரட்டை கரண்டி இன்னும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. //

   தஞ்சை மார்கெட்டில் அகப்பை, பிரிமணைகள் விற்கப்படுகின்றன..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 10. சிரட்டை அகப்பை என்றுதான் திருநெல்வேலி பக்கம் சொல்வோம்.
  இப்போதும் எங்கள் வீட்டு பெரியவர்கள் அகப்பையை எடு, சட்டாப்பை என்றுதான் தோசைகரண்டியை சொல்வார்கள்.
  பிரிமணை வேண்டுமே பானையை இறக்கி வைக்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரிமணை இங்கே விற்கின்றார்களே..

   பானை இறக்கி வைக்க அதுதான் சரி..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..