நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 20, 2023

தை வெள்ளி 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 6
முதல்
 வெள்ளிக்கிழமை


அம்பிகையின் 
திருப்பாதங்களில் 
நமது பிரார்த்தனை..

கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பம் இல்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகட வூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே!..


மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடை மேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே!.. 4

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த
அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே.. 24


நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.. 50
-: அபிராமி பட்டர் :-

ஓம் சக்தி 
ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

16 கருத்துகள்:

 1. அன்னை உமா மகேஸ்வரி அகிலத்தையெல்லாம் காக்கட்டும்.  வணங்குவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவளன்றி ஆர் துணை நமக்கு..

   அன்னையே சரணம்..
   சரணம்.. சரணம்..

   மகிழ்ச்சி..
   நன்றி ஸ்ரீராம்

   நீக்கு
 2. அகிலம் எல்லாம் காக்கும் அன்னை நம்மை காக்க வேண்டும். ஆதரம் சக்தி என்றே அவளை சரண் அடைந்தால் யாவும் அவள் தருவாள்.
  படங்களும், பாடல் பகிர்வும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்பிகையே
   சரணம்.. சரணம்..

   அன்பின் வருகைக்கு
   மகிழ்ச்சி.. நன்றி ..

   நலம் வாழ்க..

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. அன்னையின் அடி பற்றி போற்றுவோம். அன்னை அபிராமி அனைவரையும் நலமுடன் காப்பாள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // அன்னை அபிராமி அனைவரையும் நலமுடன் காப்பாள்.. //

   அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்திற்கு
   நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 4. வெள்ளிக்கிழமைப் பதிவு அருமை. இன்னிக்கு இங்கே பிள்ளையாரைக் கூப்பிட்டாச்சு. நல்லபடியா கொழுக்கட்டை வேலைகள் முடிந்தன. பயந்துண்டே இருந்தேன். இனி அடுத்துக் குலதெய்வம் கோயிலில் மாவிளக்கு. அம்பிகை அருள் புரியணும். வேண்டிக் கொண்டே இருக்கேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைத்தும் நல்ல விதமாக நிகழும்.. கவலை வேண்டாம்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றியக்கா..

   நலம் வாழ்க..

   நீக்கு
 5. பெயரில்லா20 ஜனவரி, 2023 15:40

  சக்தி அவள் உலகைக் காக்கட்டும்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // சக்தி அவள் உலகைக் காக்கட்டும்!..//

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி சகோ..

   நலம் வாழ்க.

   நீக்கு
 6. உலகாளும் சக்தி அம்பிகையை சரணடைவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி..

   நலம் வாழ்க.

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..