நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 26, 2023

எந்தையும் தாயும்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 12
 வியாழக்கிழமை
26 ஜனவரி 2023

தாய்த் 
திரு நாட்டின் குடியரசு நாள்..

அனைவருக்கும்
குடியரசு தின
நல்வாழ்த்துகள்..


எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ!..


இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்தருள்
ஈந்ததும் இந்நாடே - எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே - அவர்
கன்னியராகி நிலவினிலாடிக்
களித்ததும் இந்நாடே - தங்கள்
பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல்
போந்ததும் இந்நாடே - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ!..


மங்கையராய் அவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே - அவர்
தங்க மதலைகள் ஈன்ற முதூட்டித்
தழுவிய திந்நாடே - மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்
அங்கவர் மாய அவருடல் பூந் துகள்
ஆர்ந்ததும் இந்நாடே - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ!..
-: மகாகவி :-

வாழ்க பாரதம்
வளர்க தமிழகம்..
***

20 கருத்துகள்:

 1. வாழ்க பாரதம். வாழ்க மணித்திருநாடு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நலம் வாழ்க..
   நாடு வாழ்க..

   வந்தேமாதரம்..
   வந்தேமாதரம்..

   நீக்கு
 2. குடியரசு தின வாழ்த்துகள்!
  வாழ்க பாரதம் வாழ்க வாழ்கவே!
  பாரத சமுதாயம் வாழ்கவே - வாழ்க வாழ்க !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க..
   நாடு வாழ்க..

   வந்தேமாதரம்..
   வந்தேமாதரம்..

   நீக்கு
 3. பாரத நாடு பழம்பெரும் நாடு. நாமதன் புதல்வர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி நெல்லை..

   நலம் வாழ்க..
   நாடு வாழ்க..

   வந்தேமாதரம்..
   வந்தேமாதரம்..

   நீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  குடியரசு தின வாழ்த்துகள். வாழ்க பாரதம். மகாகவி பாரதியாருக்கு நமது வணக்கங்களை என்றென்றும் சொல்வோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க..
   நாடு வாழ்க..

   வந்தேமாதரம்..
   வந்தேமாதரம்..

   நீக்கு
 5. குடியரசு தின வாழ்த்துகள் துரை அண்ணா.

  பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு மணித்திருநாடு வாழ்க வாழ்கவே!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

   நலம் வாழ்க..
   நாடு வாழ்க..

   வந்தேமாதரம்..
   வந்தேமாதரம்..

   நீக்கு
 6. இனிய குடியரசு தின வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

   நலம் வாழ்க..
   நாடு வாழ்க..

   வந்தேமாதரம்..
   வந்தேமாதரம்..

   நீக்கு
 7. வாழ்க பாரதம் ...ஜெய் ஹிந்த்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க..
   நாடு வாழ்க..

   வந்தேமாதரம்..
   வந்தேமாதரம்..

   நீக்கு
 8. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள். வாழ்க பாரத அன்னை .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க..
   நாடு வாழ்க..

   வந்தேமாதரம்..
   வந்தேமாதரம்..

   நீக்கு
 9. அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நலம் வாழ்க..
   நாடு வாழ்க..

   வந்தேமாதரம்..
   வந்தேமாதரம்..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..