நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 18, 2023

தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று தை 5
புதன்கிழமை


தஞ்சை அருள்மிகு  பெருவுடையார் திருக்கோயிலில் நிகழும் தை மாதத்தின் முதல் நாள் மாலை மகா அபிஷேகம் நடைபெற்று,

இரண்டாம் நாள் காலை (திங்கட்கிழமை)  மாட்டுப் பொங்கலன்று காய் கனி அலங்காரமும் மகா சங்கராந்தி வழிபாடும்  நூற்றெட்டு கோபூஜையும் மிகச் சிறப்பாக நடைபெற்றன..

காலையில் நந்தியம் பெருமானுக்கு இரண்டு டன் எடையிலான காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 

கத்தரிக்காய், வாழைக்காய்,
பூசணிக்காய், வெண்டைக்காய், முட்டைக் கோஸ், சௌசௌ, உருளைக் கிழங்கு, பாகற்காய், கேரட், மிளகாய், நெல்லிக்காய் போன்ற  காய்களாலும், வாழை, மாதுளை, ஆரஞ்சு, ஆப்பிள்,  கொய்யா, அன்னாசி முதலான  பழங்களாலும், பால்கோவா, அதிரசம், முறுக்கு முதலான  தின்பண்டங்களாலும் பல வகையான மலர்களாலும் நந்தியம்பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து நந்தியம் பெருமானுக்கு பதினாறு வகையான தீபாராதனைகளுடன் சிறப்பு வழிபாடுகள் நிகழ்ந்தன.

வைபவத்தின் சில காட்சிகள் இன்றைய பதிவில்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

 1. படங்கள் அழகு. விஸ்வரூப நந்தியின் அழகே அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..

   வாழ்க நலம்..

   நீக்கு
 2. பதில்கள்
  1. ஓம் சிவாய நம..

   மகிழ்ச்சி..
   நன்றி தனபாலன்..

   வாழ்க நலம்..

   நீக்கு
 3. நந்தியம் பெருமான் தரிசனம் பெற்றோம் . சூப்பர் அலங்காரம்.

  தஞ்சை கோபுர தரிசனம் கிடைத்தது. படங்கள் அனைத்தும் நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   வாழ்க நலம்..

   நீக்கு
 4. தொலைக்காட்சி மூலமும் பார்க்கக் கிடைத்தது. இங்கேயும் கண்டு கொண்டேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
   கருத்துரைக்கு நன்றியக்கா..

   வாழ்க நலம்..

   நீக்கு
 5. மிக அருமையான தரிசனம், நன்றி.
  திருவண்ணாமலை கோயில் நந்திக்கும் இப்படி அலங்காரம் செய்து இருக்கிறார்கள். தஞ்சை கோயிலில் கூட்டம் மிக அதிகமாக இருக்கே!

  தொலைகாட்சியிலும் பார்த்தேன்.
  படங்கள் மிக அழகாய் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாதாரணமாக பிரதோஷ நாட்களில் அங்கே பெரிய கோயில் வாசலில் போக்குவரத்து நெரிசலாகி விடுகின்றது..

   இது 108 கோபூஜை என்பதால் நெரிசல் அதிகம்..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
   கருத்துரைக்கு நன்றி..

   வாழ்க நலம்..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..