நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், பிப்ரவரி 29, 2024

வாழ்க நலம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 17
வியாழக்கிழமை


பத்து ஆண்டுகளுக்கு மேல் குவைத் நாட்டில் உணவகப் பொறுப்பாளராக இருந்திருக்கின்றேன்..

அந்த வகையில்
ஆலிவ்  எண்ணெய் பழக்கப்பட்ட ஒன்று.. மிகவும் பிடித்தமான ஒன்று..

அந்த அளவில் தான் ஆலிவ் எண்ணெய் பற்றிய பதிவும்..

அங்கே பணி செய்த எனக்கு அங்குள்ள உணவுப் பொருள் பாதுகாப்பு விதிமுறைகள்  தெரியும்...


சமையலுக்கான பொருட்களையும் சமைத்த உணவுகளையும் எப்படிப் பாதுகாப்பது என்பது பற்றி நன்றாகத் தெரியும்..

ஆப்பிளில் இருந்து ஆட்டுக்கறி வரை எதுவானாலும் பலவித பரிசோதனைகளைக் கடந்தே சமையல் கூடத்திற்கு வந்து சேர வேண்டும்...

அவற்றைப் பற்றி வேறொரு சமயத்தில் பேசுவோம்..

அரபு நாட்டின் அளவுக்கு தரத்தை நிர்ணயிப்பதில் இங்கே - பற்பல நடைமுறை சிக்கல்கள் என்பது எல்லாருக்கும் தெரியும்..

பொய்யும் புளுகுமான இன்றைய பொது  நடைமுறையில் நல்ல உணவுகளைப் பற்றி சிறு குறிப்புகள் - விழிப்புணர்வு. - என்ற அளவில் தான் எனது பதிவுகள்.. 

மற்றெந்த தயாரிப்புகளையும் பதிவின் வாயிலாக முன்னிலைப் படுத்துவது இல்லை.. 

நானறிந்தவற்றுடன்  பொதுவான விவரங்களையும் சேகரித்துத் தொகுத்து பதிவில் வழங்கிக் கொண்டிருக்கின்றேன்..

உடல் நிலையில் சிற்சில பிரச்னைகள் என்றாலும் பொழுது நல்லபடியாக இருக்கின்றது.. காரணம் தங்களது அன்பும் ஆதரவும்..

காலம் முழுவும் அலுவலகப் பணி செய்து விட்டு இப்போது ஓய்ந்திருக்க  இயலாது.. எனக்குத் தெரிந்தது எல்லாம் எழுதுவது ஒன்று தான்.. 

அதனாலேயே தமிழைப் பற்றிக் கொண்டிருக்கின்றேன்..

தருமபுர ஆதீனத்தின் தேவாரத் திருமுறைகளில்  தேடுவதில் பொழுது செல்கின்றது.. 

இவ்வாறு தான்
விக்கியின் தகவல் தொகுப்புகளிலும்...

விரல்களில் சற்று வலி -  தளர்வு என்பதால் தட்டச்சு செய்வதில் பிரச்னை.. இப்போது வருகின்ற பதிவுகள் எல்லாம் தட்டுத் தடுமாறி செய்யப்படுபவை தான்..

கணினியை விட்டு வெளியேறி ஐந்து வருடங்கள் ஆகின்றன.. எனது வேலைகள் எல்லாமே கைத்தலபேசியில் தான்..

பதிவுகளுக்கு வருகின்ற நண்பர்களது கருத்திற்கு பதிலளிக்க இயலாத குற்ற உணர்ச்சியும் என்னுள் இருக்கின்றது..

அந்தப் பிழைக்காக மன்னிக்கும்படி வேண்டிக் கொள்கின்றேன்..

இயற்கை உணவு என்ற வரிசையில் பொதுவான குறிப்புகளைத் தான் தருகின்றேன்..

இந்த நிறுவனத்தின் செக்கு எண்ணெய் தான் சிறந்தது என்கிற மாதிரி  - நான் எதுவும் செல்வதில்லை.. எழுதுவதில்லை..

வீட்டின் அருகில் பசும் பால கிடைக்கின்றது.. அடைக்கப்பட்ட  பால் வாங்குவதில்லை... 

கீழவாசல் கடைத்தெருவில் ஊத்துக்குளி வெண்ணெய் தினசரி வருகை.. வாங்கி உருக்கிக் கொண்டால் கலப்படமற்ற - நெய்!.. 

பல ஆண்டுகள் பழக்கப்பட்ட எண்ணெய் மண்டி.. அங்கே தான் நல்லெண்ணெயும் பிறவும்.. 

தற்போது  ஏற்பட்டுள்ள ஒவ்வாமையால் நான் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்வதில்லை..

மஞ்சள் தூள், மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி எல்லாமே எங்களது தயாரிப்பு தான்..  
விளம்பரத்தில் ஆடல் பாடல்களைப் பார்த்து விட்டு - அந்த மயக்கத்துடன் கடைகளில் மசாலாப் பொடி எதுவுமே வாங்குவதில்லை... 

நியாய விலைக் கடையில் கோதுமை கிடைக்காமல் போகும் போது வெளியில் வாங்கி அரைத்துக் கொள்கின்றோம்..

மைதாவின் சேர்க்கையில் லொட்டு லொசுக்கு என்று எதுவும் செய்வது கிடையாது..

புலால் உணவில் இருந்து விலகி ஆறேழு ஆண்டுகள் ஆகின்றன... 

வெளியில் செல்கின்ற போது தேநீர் என்றால் சிவநெறி அல்லாத டீக்கடைக்குள் நுழைவதே இல்லை..

பெரு நகரங்களில் இதெல்லாம் மிகவும் சிரமம்..

நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று..
- கவியரசரின் பொன்னான வரிகள்..

நமக்காக நம் கையால் செய்வது நன்று - என்று சொல்லப்பட்டாலும் -
வாய்ப்பும் வசதியும் கூடி வந்தால் தான் எல்லாமே!..

சமீபத்திய பதிவுகளில்  குற்றம் குறைகள் இருந்தால் பொறுத்துக் கொள்ளவும்..

தஞ்சாவூர் பொடியன்

இன்று போல்
என்றும் தங்களது அன்பினையும் ஆதரவினையும் நல்கிட வேண்டும் - என, கேட்டுக் கொள்கின்றேன்..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்..
நாளும் வாழ்க
நன்றென வாழ்க..

சிவாய திருச்சிற்றம்பலம்..
***

20 கருத்துகள்:

  1. பல்வேறு சிரமங்கள் இடையிலும் பதிவுகள் தந்து கொண்டிருக்கிறீர்கள்.  பாராட்டுகள்.  உங்கள் விரல் வலி சரியாக பிரார்த்திக்கிறேன்.  கணினி இல்லாமல், அலைபேசி வழியாகவே இது மாதிரி பதிவுகள் வெளியிடுவது உங்களுக்கும், கமலா அக்காவுக்கும் பழகி விட்டது போல..  எங்களுக்கெல்லாம் அது ரொம்ப சிரமம்.  கணினி இல்லாவிட்டால் கையொடிந்த மாதிரிதான் எனக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// உங்கள் விரல் வலி சரியாக பிரார்த்திக்கிறேன். ///

      தங்களது அன்பின் வருகையும் கருத்தும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. கையால் தட்டச்சு செய்ய முடியவில்லை என்றால் அலைபேசியில் வாயால் பேசி பதிவு செய்யலாம். அதை இப்போது உள்ள குழந்தைகளிடம் கேட்டால் சொல்லி தருவார்கள். அப்படி பதிவு செய்யலாம். ராமலக்ஷ்மி கை அடிபட்டு இருந்த போது அப்படித்தான் பதிவு செய்தார். கீதாவும் சில நேரங்களில் அப்படி செய்வேன் என்றார்.

    உடல் நலத்தைப் பார்த்து கொள்ளுங்கள்.

    முடிந்தவரை கடமைகளை நம் கையால் செய்வது நல்லதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// அலைபேசியில் பேசி பதிவு செய்யலாம். அதை இப்போது உள்ள குழந்தைகளிடம் கேட்டால் சொல்லி தருவார்கள். ///

      அதை நானே செய்து விடுவேன்.. ஆனால் சமயங்களில் ஒத்து வருவதில்லை..

      தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  3. சிரமங்களுக்கு இடையே நல்ல பல விஷயங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி. உடல் நலனிலும் அக்கறை காட்டுங்கள்.

    அலைபேசி வழி பதிவுகள் இடுவது எனக்கும் கடினம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// நல்ல பல விஷயங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி..///

      தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட் ..

      நீக்கு
  4. பலசிரமங்களுக்கு இடையே தினமும் நல்ல பல பகிர்வுகள் தருவதற்கு நன்றிகள்.

    நலமாக வேண்டுகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்தும் வேண்டுதலும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி ..

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய பதிவு அருமை. இதுவரை பல உணவுகளைப் பற்றிய நல்ல விஷயங்களாக சொல்லி வருகிறீர்கள். தங்கள் கருத்து அனைத்தும் சரியே..! நாங்களும் தினமும் விரும்பி சுவாரஸ்யத்துடன் படிக்கிறோம். உங்கள் எழுத்துக்களில், சிறந்த எண்ணங்களில் ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது. கதைகள், கவிதைகள் ஆகட்டும், ஆன்மிக, அறிவுரை பதிவுகள் ஆகட்டும். அதைத் திறம்பட சொல்லும் உங்கள் எழுத்தின் வன்மை எங்களை கட்டிப் போடுகிறது. இதற்காக நாங்கள்தான் உங்களுக்கு தினமும் பன்முறைகள் நன்றி சொல்ல வேண்டும் . உங்களின் இயற்கையான இந்த திறமைகளுக்கு ஆயிரம் கோடி வந்தனங்கள். 🙏.

    /பதிவுகளுக்கு வருகின்ற நண்பர்களது கருத்திற்கு பதிலளிக்க இயலாத குற்ற உணர்ச்சியும் என்னுள் இருக்கின்றது..

    அந்தப் பிழைக்காக மன்னிக்கும்படி வேண்டிக் கொள்கின்றேன்../

    உண்மை.. எனக்கும் சில சமயங்களில் இப்படி உடனுக்குடன் பதில் தர இயலாத சந்தர்ப்பங்கள் அமைந்து விடுகிறது. அதற்காக நானும் அனைவரிடமும் மன்னிப்புக்கள் கேட்ட வண்ணம் உள்ளேன்.

    தங்கள் உடல்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள் இன்றைய பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// தங்கள் உடல் நிலையை கவனித்துக் கொள்ளுங்கள்///

      தங்களது அன்பின் வருகையும் நெகிழ்ச்சியான கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  6. நீங்கள் சிரமங்களுக்கிடையில்தான் பதிவுகள் தருகிறீர்கள். எல்லாப்பதிவுகளுமே நெறி சார்ந்தவை. செய்வது அறச் செயல்தான் துரை செல்வராஜு சார்.... எல்லாப் பிரச்சனைகளும் தீரும். தொடர்ந்து உங்கள் குவைத் அனுபவத்தையும் அவ்வப்போது எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //. குவைத் அனுபவத்தையும் அவ்வப்போது எழுதுங்கள்.. ///

      உணவு பாதுகாப்பினைப் பற்றி
      எழுதுகின்றேன்..

      தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி நெல்லை ..

      நீக்கு
  7. நான்கூட எதனால் பதில் தருவதில்லை என்று யோசித்திருக்கிறேன். உங்கள் கைபேசியைப் பார்த்திருப்பதால், அதில் தட்டச்சு செய்வதே எவ்வளவு கஷ்டம் என்பது எனக்குத் தெரியும். ஹி ஹி

    பதிலளிநீக்கு
  8. நெல்லை அவர்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
    நன்றி ..

    பதிலளிநீக்கு
  9. துரை அண்ணா உங்களுக்குக் கைவிரல்களின் சிரமம் தெரியும் அதனால் பதில்கள் தரமுடியலைனா என்ன? ஒன்றும் குறையில்லை. இத்தனை சிரமங்களுக்கிடையில் நீங்கள் எழுதுவதே பெரிய விஷயம். என்னால் கைப்பேசியில் எல்லாம் அடிப்பது மிகவும் சிரமம்.

    பதிவுகளில் நீங்கள் தெரிந்து கொண்ட அறிந்த கருத்துகளைத் தருகிறீர்கள். அதில் என்ன தவறு?

    நீங்கள் சொல்லும் ஆலிவ் எண்ணை பற்றிச் சொன்னது சரியே ஆனால் இங்கு விற்கும் விலையைப் பார்க்கறப்ப வாங்க சிரமம். எனவே அதைப் பற்றிச் சொல்லத் தெரியவில்லை. இரண்டாவது நம்மூரில் உணவுகளுக்கு, உணவுப் பொருள் விற்பனைகளுக்குத் தரத்திற்கு விதிமுறைகள் எதுவும் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. நானுமே பார்க்கிறேனே இங்கு நடைப்பயிற்சியின் போது.

    நீங்கள் வேலை செய்த நாடு விதிமுறைகளைச் சரியாகக் கடைபிடிக்கும் நாடு.

    அந்த அனுபவங்களையும் எழுதுங்க துரை அண்ணா.

    அண்ணா கைப்பேசியில் தட்டச்சுவதற்குப் பதில் குரல் பதிவு இருக்கிறது. கருத்துகளைச் சொல்லும் போது அது தட்டச்சுமே! கைப்பேசி தமிழை நன்றாகவே தட்டச்சுகிறது ஆங்கிலத்தை விட.! பேச்சு மொழி கூடத் தட்டச்சுகிறது. நான் சில கருத்துகளை அப்படித்தான் போடுகிறேன்.

    அது முயற்சி செய்து பாருங்க. எனக்கு அவ்வளவாக அது சரி வரவில்லை என்பதால் செய்வதில்லை. எனக்கு இடையில் பேச்சு வழக்கு மொழிகள் வந்துவிடுவதால்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///தட்டச்சுவதற்குப் பதில் குரல் பதிவு இருக்கிறது...///

      அது சரியாக வருவதில்லை.. இணையம் இழுபடும் போது பிரச்னை ஆகின்றது..

      நீக்கு
    2. /// அந்த அனுபவங்களையும் எழுதுங்க துரை அண்ணா.. ///

      உணவு பாதுகாப்பு முறைகளை புத்தாண்டில் இருந்து எழுதுகின்றேன்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    3. /// ஒன்றும் குறையில்லை. இத்தனை சிரமங்களுக்கிடையில் நீங்கள் எழுதுவதே பெரிய விஷயம்.. ///

      மறுபடியும் கணினியில் உட்கார்ந்தால் எல்லாம் சரியாகி விடும்.. வீட்டில் அனுமதிப்பதில்லை..

      கொண்டு வந்திருந்த பழைய கணினியும் சற்று பழுது ஆனதால் அப்புறப்படுத்தியாயிற்று..

      பார்க்கலாம்...

      திருப்பதி
      திருமலை படங்கள் அடுத்த வாரத்தில் இருந்து வரும்..

      தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  10. நீங்கள் கைப்பேசியில் பதிவுகள் எழுதுவது மிகவும் ஆச்சரியம். என்னால் முடிவதில்லை. ஆங்கிலமானாலும் சரி, தமிழானாலும் சரி. அதை தாளில் எழுதி புகைப்படம் எடுத்து கீதாவிற்கு அனுப்பிவிடுகிறேன். பதிவு, பாடக் குறிப்புகள், மற்ற பதிவுகளுக்கான கருத்துகள் என்று எல்லாமும். அவர் அதை எல்லாம் தட்டச்சு செய்து போட்டு விடுகிறார். அப்படித்தான் என் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

    நீங்கள் கைவிரல் நலனையும் பார்த்துக்கொள்ளுங்கள். சிரமம் வேண்டாம். விரைவில் சரியாகிடும் இறைவன் துணை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ஒன்றே இப்போது மனதுக்கு சாந்தி.. தட்டச்சு செய்வதை விட்டுவிடக் கூடாது என்று கொஞ்சம் சிரமத்துடன் செய்து கொண்டிருக்கின்றேன்..

      தங்களது அன்பினுக்கு மகிழ்ச்சி..
      மிக்க நன்றி.

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..