நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், பிப்ரவரி 21, 2024

புரோட்டீன்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 9
புதன் கிழமை

நாம் ஆரோக்கியமாக இருக்க நமது உடலுக்கு சமச்சீராக சத்துகள் தேவைப்படுகின்றன

இந்த மூன்று வகை சத்துகள்  புரோட்டீன் (புரதம்), கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகள் - 

இவைபற்றி இனிவரும் பதிவுகளில் காண்போம்..
இவை இணைய தளங்களில் தேடியெடுக்கப்பட்டவை.. 

புரோட்டீன்  கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகள்  உள்ளடங்கிய உணவுகளில் முதலாவதாக
புரோட்டீன்.. 

புரோட்டீன் என்பது உடலுக்கான கட்டுமானப் பொருள்..

உடலின் சரியான செயல்பாட்டிற்கு தேவையான என்சைம்கள், ஹார்மோன்கள்  போன்ற பலவற்றை  உள்ளடக்கியது.. திசுக்களின் வளர்ச்சிக்கு இதுவே அடிப்படை...

உடலுக்குப் போதுமான புரதம் கிடைக்க வில்லையெனில், தசைச் சோர்வு,  நோய் எதிர்ப்பு சக்தி குறைவு  எனும் பிரச்னைகள் ஏற்படலாம்..

சைவ உணவு உண்பவர்களுக்கு மிகச் சிறந்தவை என்றால் பால், பருப்பு மற்றும் பீன்ஸ்
வகைகள் தான்.. 


பருப்பு வகைகளில்  புரோட்டீன் சத்து நிறைந்து உள்ளது...

புரதச் சத்து நிறைந்த சைவ  உணவுகளின் 
 சிறு குறிப்புகள்..

பால் மற்றும் பாலின் உப பொருட்கள்..

விதைகள் பருப்பு வகைகள் (தானியங்கள்) 

காய்கறிகள் மற்றும்
பழங்கள்..

பால் :
புரதம் கொழுப்பு ஆகியவற்றுடன் வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் உள்ளிட்ட தாதுக்கள் நிறைந்துள்ளன..

தயிர் :
அதிக அளவு புரதம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் B6 மற்றும் வைட்டமின் B12 ஆகியவற்றைக் கொண்டது  தயிர்..  


பனீர் - பாலாடைக்கட்டி :
சைவ உணவுப் பிரியர்களுக்கு பனீர் ஒரு அற்புதம்.. 

பனீரில் புரதம் மட்டுமின்றி  பிற தாதுக்களும் நிறைந்து உள்ளன.

புரதத்துடன் வைட்டமின் B12 மற்றும் ஒன்பது அமினோ அமிலங்கள் இதில் உள்ளன.. உடல் கட்டமைப்புக்கு மிகவும் உதவுகின்றது..

கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்திருப்பதால் பற்கள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது..

இதிலுள்ள துத்தநாகம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது..

சைவ உணவு உண்பவர்களுக்கு ஏற்படுகின்ற வைட்டமின் B12 குறைபாடு இதனால் சீராகின்றது..

நன்மைகள் அதிகம் என்று - வாரம் முழுக்க தின்று தீர்க்காமல் சில நாட்களுக்குத் தான் என்றிருப்பது சிறப்பு..

நெய் :
வேதகாலத்தில் இருந்தே நெய்யைப் பயன்படுத்துவதில் பாரதம் சிறப்புற்றுத் திகழ்ந்திருக்கின்றது..

அந்நியர் நுழைந்தபின் நமக்கு நாமே பகையானோம்..

நெய் முழுக்க முழுக்க கொழுப்புச் சத்து தான் என்றாலும் மற்ற பருப்பு காய்களுடன் சேர்ந்து மிகுந்த நன்மைகளை அளிக்கின்றது..

ஒமேகா 3  எனும் ஊட்டச்சத்து நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்..

தற்காலத்தில் - 
கடின உழைப்பு இன்றி வாழ்வோர் நெய்யை அளவுடன் பயன்படுத்துவது நல்லது..

உடல் உழைப்பு இல்லாதவர் நெய்யைப் பயன்படுத்துவதில் அதிகக் கவனம் கொண்டிருக்க வேண்டும்..

விதைகள் :
துத்தநாகம், மக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற அதிக அளவு தாதுக்கள் உள்ளன..


முந்திரிப்பருப்பு :
அதிக புரதத்துடன் 
இதயப் பாதுகாப்பிற்கும் துணை செய்கின்றது..

முந்திரிப் பருப்பில் அதிகபட்சமாக 25% புரதம் கண்டறியப்பட்டுள்ளது..
வைட்டமின் E  நன்மை பயக்கும் காரணியாக உள்ளது

பாதாம்பருப்பு :
உயர் இரத்த அழுத்தம் மற்றும் கெட்டகொழுப்பு போன்ற இதய நோய்களின் அபாயத்தைக் குறைப்பது..

100 கிராம் பாதாம் பருப்பில் 24%  புரதம் உள்ளது.

இவ்வாறே 100 கிராம் பூசணி விதைகள் 20% புரதத்தை  அளிக்கின்றன..

வால்நட், சூரியகாந்தி ஆளி விதைகளும் நன்மை அளிப்பன..

பருப்பு வகைகள் : (தானியங்கள்) 
பருப்பு என்றதும் நினைவுக்கு வருவது சாம்பார் தான்.. 

நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை
 - என்கிற மாதிரி சிவ சக்தி ஐக்கியம்..

துவரம் பருப்பும் இதர காய்களும் சரிவிகிதமாகிய சாம்பாருக்கு ஈடு இணை இல்லை என்பதே உண்மை..

100 கிராம் துவரம் பருப்பில் புரதம் 22 கிராம் உள்ளது..
நார்ச்சத்து  60%
இரும்புச்சத்து  28%
பொட்டாசியம்  39%

இதே போல்
பல்வேறு நலன்களையும் உள்ளடக்கியது பச்சைப் பயறு..

100 கிராம் பச்சைப் பயறில் புரதம் 24 கிராம் உள்ளது..
நார்ச்சத்து  67%
இரும்புச்சத்து  37%
பொட்டாசியம்  35%

இவை இதய ஆரோக்கியத்திற்கு உகந்தவை..

சுண்டல் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது பிள்ளையார் வழிபாடு..
சரஸ்வதி பூஜையின் பிரதானமே சுண்டல் தான்..

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் 

- என்று நான்கினை (மட்டும்) முன் வைத்து - மூன்றினைக் கேட்டு வணங்கி நான்கினைப் பெற்றுக் கொள்கின்றார் ஔவையார்..


ஆனால் அருணகிரிநாத ஸ்வாமிகள் வரிசைப்படுத்துவது இதோ :

இக்கு (கரும்பு) அவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் எள் பொரி அவல் துவரை இளநீர் வண்டெச்சில் (தேன்) பயறு அப்ப வகைகள் பச்சரிசி பிட்டு வெள்ளரிப்பழம்  இடிப்பல்வகை (மாவு)  தனிமூலம் (கிழங்கு) மிக்க அடிசில் (சித்ரான்னங்கள்) கடலை - என்பவை..

இன்றைக்கு இவை அனைத்துமே உடலுக்கு நல்லவை என்று கொண்டாடப்படுகின்றன..


கொண்டைக்கடலை
சத்வ குணத்தின் அடிப்படை .. 
ஆகவே மூலாதார மூர்த்தியாகிய ஸ்ரீ விநாயகப் பெருமானை வழிபடும் போது  முதலிடத்தில் இருக்கின்றது  சுண்டல்..

பிள்ளையார் வந்து தின்கின்றாரா?..

நமக்காகத் தான் சுண்டலும் பயறும்.. இவற்றின் பயனும் நமக்கானவைதான்..

வழிபாட்டின் நிவேதனங்களால் ஆரோக்கியம் விளைகின்றது எனில் அதுதான்.. அதற்குத் தான்

இந்த உணர்வு தான் வேண்டும்..

100 கிராம் கொண்டைக் கடலையில்
புரதம் 38 கிராம் உள்ளது..
நார்ச்சத்து  68%
இரும்புச்சத்து  33%
பொட்டாசியம்  6%

கொண்டைக்கடலை உட்பட பெரும்பாலான பருப்பு வகைகள் புரதச்சத்து நிறைந்தவை. 
நார்ச்சத்து, இரும்பு, பாஸ்பரஸ், ஃபோலேட், பொட்டாசியம், மாங்கனீஸ் மற்றும் கார்போஹைட்ரேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

நல்ல புரதத்தையும் ஆற்றலையும் தருகின்ற மற்றொன்று   வேர்க்கடலை..

வேர்க்கடலை
 வெண்ணெய்.. (Peanut Butter) 100 கிராம் வேர்க்கடலை வெண்ணெயில் 20 கிராம் புரதம் உள்ளது ..

Peanut Butter என்று வெளியில் தயாரிக்கப்பட்டவற்றின் நம்பகத் தன்மையில் ஐயம் ஏற்பட்டால் இருக்கவே இருக்கின்றது வேர்க்கடலை சட்னி.. 

வாரத்தின் சில நாட்களில் வேர்க்கடலை சட்னி என்று வைத்துக் கொண்டால் போதுமே!..

காய்கள் மற்றும்
பழங்கள் :
புரதம் ஒரு நாளைக்கு 50 கிராம் தேவை எனும் நிலையில் காய்களும் பழங்களும் நமக்குத் துணை ஆகின்றன..


பச்சைப் பட்டாணி, பீன்ஸ் பாகல்,கீரைகள், காலி ஃப்ளவர், புரோக்கோலி 
போன்றவற்றில் புரதச் சத்து  நிறைந்துள்ளது..


வாழை, பலா,கொய்யா, அத்தி, ஆரஞ்சு , செர்ரி, அவகேடோ ஆகிய பழங்கள் புரதச் சத்து உடையவை..

புலால் உணவுகளில் இருக்கின்ற புரதத்தில் அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் B 12 - ஆகியன இருப்பினும் அவை இதயப் பிரச்னைகளுக்கு இடமளிக்கின்றன..

தாவரப் புரதங்களில் கொழுப்பு  குறைவாக உள்ளதால்,  அவை  இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன என்பதே உண்மை..

இணையத்தில்
சேகரிக்கப்பட்ட தகவல்கள்
 நன்றி விக்கி

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.. 945

நம்முடைய நலம்
நம்முடைய கையில்
நாளும் வாழ்க
நன்றென வாழ்க..

ஓம்  சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

 1. படிக்கும்போது தெரிந்து கொள்கிறோம்.  ஆனால் பின்னர் எதெது எதெதில் இருக்கிறது என்கிற சில விவரங்கள் மனதில் நிற்பதில்லை.  ஏதோ சாப்பிட்டு விடுகிறோம்!

  பதிலளிநீக்கு
 2. எங்கள் சாப்பாட்டில் அன்றாடம் உண்ண வேண்டிய நல்ல உணவுகள் பற்றி விரிவான பகிர்வு.

  அனைவரும் கடைப்பிடித்தால் நன்று.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. புரோட்டின் உடம்பிற்கு எவ்வளவு சக்திகளை தந்து உதவுமென அருமையாக பதிவில் சொல்லியிருக்கிறீர்கள். கட்டுரையை படித்து ரசித்தேன்.பதிவுக்கேற்ற படங்களையும் ரசித்தேன். இந்த அவசர யுகத்தில் எந்தெந்த உணவு வகைகளை எந்தெந்த அளவு எடுத்துக் கொண்டு சாப்பிட வேண்டுமெனவும் தெளிவாக்கிய பதிவுக்கு நன்றி. அதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வு அனைவருக்கும் கிடைத்த வேண்டுமெனவும் நாம் இறைவனை பிரார்த்தித்துக் கொள்வோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. உடல் நலத்துக்குத் தேவையான விஷயங்கள் - நல்லதொரு தொகுப்பு. நன்றி.

  பதிலளிநீக்கு
 5. நிறைய விவரங்கள் சத்துள்ள உணவாக இருந்தாலும் எல்லாவற்றையும் அவர் அவர் உடலுக்கு ஒத்துக் கொள்ள கூடிய உணவுகளை தேர்வு செய்து உண்டு ஆரோக்கியமாக வாழலாம்.

  படங்களும், செய்திகளும் அருமை.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..