நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, பிப்ரவரி 16, 2024

திருப்புகழ்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 4
வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
-: பொது :-


தத்ததன தானத் ... தனதான

இத்தரணி மீதிற் ... பிறவாதே
எத்தரொடு கூடிக் ... கலவாதே

முத்தமிழை யோதித் ... தளராதே
முத்தியடி யேனுக் ... கருள்வாயே..

தத்துவமெய்ஞ் ஞானக் ... குருநாதா
சத்தசொரு பாபுத் ... தமுதோனே

நித்தியக்ரு தாநற் ... பெருவாழ்வே
நிர்த்தஜெக ஜோதிப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


இப் பூமியில் மீண்டும் பிறக்காமலும்
ஏமாற்றுகின்ற பலருடன் கூடிக் கலவாமலும்

முத்தமிழையும் படித்து 
(அதன் சுவை அறியாதார் முன்) 
மனம் சோர்வடையாமலும்
அடியேனுக்கு முக்தி தந்தருள 
வேண்டுகிறேன்..


உண்மையான ஞானத்தை 
உபதேசம் செய்தருள்கின்ற 
குருநாதனே..
ஒலி வடிவாகத் திகழ்பவனே..
புத்தம் புது அமுதம் போன்றவனே..

நாளும் எனக்கு நல்லருள் செய்பவனே..
எனது வாழ்வில் கிடைத்த  பெருஞ்செல்வமே..

ஆடல் வல்லோனாக 
அகில உலகிற்கும் பேரொளியாக
விளங்குகின்ற பெருமாளே..
**

முருகா முருகா
முருகா முருகா..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. முருகா... முத்துக்குமரா... கந்தா.. கதிர்வேலா.. சக்தி உமை பாலனே.. சரணம் ஐயா.

    பதிலளிநீக்கு
  2. திருப்புகழ், கவிதை பொருள் பொதிந்தது

    பதிலளிநீக்கு
  3. கருத்தாழமிக்க திருப்புகழ் பாடல் படித்து மகிழ்ந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  4. பாடல்பாடி வணங்கினோம்.

    'நிர்த்த ஜெகஜோதி...' .. முருகா சரணம்.

    பதிலளிநீக்கு
  5. திருப்புகழ் பாடலும் விளக்கமும் அருமை.பாடலை பாடி இறைவனை துதித்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..