நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், பிப்ரவரி 07, 2024

மாவட்டங்கள்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 24
 புதன் கிழமை

 நன்றி
-: விக்கி -

வடவேங்கடம் - தென்குமரி ஆயிடைத் 
தமிழ் கூறும் நல் உலகம்.. 
-: தொல்காப்பியம் :-


இப்படிச் சொல்லப்பட்ட தமிழகத்துடன் வேங்கடம் இன்றில்லை..

தமிழ்நாடு இந்தியாவின், இருபத்தெட்டு மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக வழங்கப்படுவதாகும்
 
இந்திய மாநிலங்களில் பரப்பளவில் பத்தாவதாகவும், மக்கள்தொகையில் ஆறாவதாகவும் விளங்குகின்றது - தமிழ்நாடு..

இம் மண்ணின் அடையாளங்களாக


பரத நாட்டியம்  


மலைஆடு (நீலகிரி), மரகதப் புறா


வண்ணத்துப்பூச்சி, காந்தள் மலர்


பலாக்கனி, பனைமரம்,
சடுகுடு விளையாட்டு
ஆகியன வகைப்படுத்தப்பட்டுள்ளன..

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி - ஆகியன கடற்கரை மாவட்டங்களாகும்..

தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் 36 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் 
 (2023-24)  உள்ளன..

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 71 லட்சம் மக்கள் தொகையுடன், தமிழ்நாட்டிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் என்ற பெருமையை சென்னை மாவட்டம் பெற்றுள்ளது..

தவிரவும் வேளாண்மை இல்லாத மாவட்டம் என்றும் சொல்லப் படுகின்றது..

ஆக, பரப்பளவில் (1,672 km²) சிறியதாக - 
கன்னியாகுமரி மாவட்டம்..  

குமரி மாவட்டத்தில் இந்து மக்களின் எண்ணிக்கை குறைவு என்பது குறிப்பிடத் தக்கது..


தமிழகத்தின் முப்பத்தெட்டு
மாவட்டங்கள்
(உருவாக்கப்பட்ட தேதியுடன்)

முதல பத்து மாவட்டங்களும் வெள்ளையரால் உருவாக்கப்பட்டவை..

(இந்தியக் குடியரசில்  சேர்க்கப்பட்ட நாள் குறிக்கப்பட்டுள்ளது.)


1 சென்னை 1 நவம்பர் 1956
2 மதுரை 1 நவம்பர் 1956 
ராமநாதபுரம் 1 நவம்பர் 1956


கோயம்புத்தூர் நவம்பர் 1956
5 திருநெல்வேலிநவம்பர் 1956 
6 சேலம் 1 நவம்பர் 1956 திருச்சி 1 நவம்பர் 1956


தஞ்சாவூர் நவம்பர் 1956
9 கன்னியாகுமரி 1 நவம்பர் 1956
10 நீலகிரி 1 நவம்பர் 1956


11 தருமபுரி 2 அக்டோபர் 1965
12 புதுக்கோட்டை 14 ஜனவரி 1974
13 ஈரோடு 31 ஆகஸ்ட் 1979


14 சிவகங்கை 15 மார்ச்  1985
15 விருதுநகர் 15 மார்ச் 1985
16 திண்டுக்கல் 15 செப்டம்பர் 1985


17 தூத்துக்குடி 20 அக்டோபர் 1986
18 திருவண்ணாமலை 30 செப்டம்பர் 1989
19 வேலூர் 30 செப்டம்பர் 1989
20 திருவாரூர் 18 அக்டோபர் 1991


21 நாகப்பட்டினம் 18  அக்டோபர் 1991
22 கடலூர் 30 செப்டம்பர் 1993
23 விழுப்புரம் 30 செப்டம்பர் 1993


24 பெரம்பலூர் 30  செப்டம்பர் 1995
25 கரூர் 30 செப்டம்பர்  1995
26 தேனி 25 ஜூலை 1996
27 நாமக்கல் 1 ஜனவரி 1997


28 காஞ்சிபுரம் 1 ஜூலை 1997
29 திருவள்ளூர் 1 ஜூலை 1997
30 கிருஷ்ணகிரி 9 பிப்ரவரி 2004


31 அரியலூர் 23 நவம்பர் 2007
32 திருப்பூர் 22 பிப்ரவரி 2009


33 தென்காசி 22 நவம்பர் 2019
34 கள்ளக்குறிச்சி 26 நவம்பர் 2019
35 ராணிப்பேட்டை 28 நவம்பர் 2019


36 திருப்பத்தூர் 28 நவம்பர் 2019
37 செங்கல்பட்டு 29 நவம்பர் 2019
38 மயிலாடுதுறை 28 டிசம்பர் 2020

இன்னும் பல மாவட்டங்கள் உருவாக இருக்கின்றன..
 
நலம் வாழ்க 
வாழ்கவே

வாழ்க தமிழ்
வாழ்க தமிழகம்
***

6 கருத்துகள்:

  1. போகப் போக ஒவ்வொரு நகரும் ஒவ்வொரு மாவட்டங்களாக அறிவிக்கப்படலாம்!

    பதிலளிநீக்கு
  2. தமிழக மாவட்டங்கள் குறித்த தகவல்கள் சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. தகவல்கள் சிறப்பு ஜி பயனுள்ள பதிவு.

    பதிலளிநீக்கு
  4. மாவட்ட புள்ளி விவரங்கள் பகிர்வும் விவரங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தமிழக மாவட்டங்களைப் பற்றிய விபரங்கள் அருமை. மிகவும் பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. வடவேங்கடம் - தென்குமரி என தொல்காப்பியக் கூற்றுடன். பல மாவட்டங்கள் குறித்த தகவல்களும் அறிந்துகொண்டோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..