நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், பிப்ரவரி 05, 2024

உயிரே.. உணவே 4

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 22
திங்கட்கிழமை


ஆரோக்கியமான இல்லறத்தில் காலையில் குளித்து விட்டுச் சமைக்கும் போது அக்னி தேவன் மகிழ்ச்சியடைவதாக ஆன்றோர்கள் வாக்கு..

குளித்து விட்டுச் சமைக்கும் போது அருகில் ஸ்ரீ அன்னபூரணி இருப்பதாகவும் குளித்து விட்டுச் சாப்பிடும் போது அருகில் ஸ்ரீ பரமேஸ்வரன் இருப்பதாகவும் ஐதீகம்..

குளிக்கும் வழக்கமும்
நெற்றிக்கு இட்டுக் கொள்ளும் வழக்கமும் இல்லாதோர் சமைப்பதையும் பரிமாறுவதையும் தவிர்த்தாலே எல்லாம் சரியாகி விடும்..
இன்றைய சூழலில் இது கடினம் என்றாலும் நம்மைக் காத்துக் கொள்வது நமது கடமை..

ஆப்பிரிக்க அரேபிய ஐரோப்பிய ஆங்கிலேய உணவு முறைகளை சிந்திப்பது நல்லது..

முன்பெல்லாம்
சைவ உணவுப் பழக்கம் உடையோர் கண்ட கண்ட உணவகங்களில் நுழைய மாட்டார்கள்..

ஆனால், இப்போது அப்படி இல்லை..

ஆனா ஊனா உணவகம் 
என்றும் 

கக்கர புக்கர உணவகம்
சைவம்/ அசைவம் 

என்றெல்லாம் 
வௌவால் தனமாக விளங்கும் உணவகங்களுக்குள் நுழையாதிருப்பது நல்லது..

சிவம் (சைவம்) எனில் மங்கலம்.. 

சைவ உனவுப் பழக்கம் உடையவர்களால் சமைக்கப்படுவது தான் சைவ உணவு..

மங்களகரமான பழக்க வழக்கங்களைக் கடைபிடித்தலே நம்மைக் கரையேற்றும்.. 

ஒப்பனை கட்டிக் கொண்டு பொய் சொல்லி உணவு விஷயத்தில் நம்மை யாரும் ஏமாற்றி வியாபாரம் செய்தால் இருக்கவே இருக்கின்றான் இறைவன்!..

அவன் பார்த்துக் கொள்வான்..

நாம் செய்கின்ற எல்லாவற்றிலும் அன்பும் ஈடுபாடும் இருக்க வேண்டும் என்றாலும் சமையலில் முழுமையாக இருக்க வேண்டியது அவசியம்..

உண்பவர் நலம் கருதிச் செய்வதே சமையல்..

இரசாயன உப்புகள், நிறம், சுவை, மணம் இவற்றிற்காக செயற்கையாக சேர்க்கப்படுபவை எல்லாமே தொடர் பயன்பாட்டில் உடல் நலத்துக்குக் கேடு விளைவிப்பவை..  

சமையலுக்கான எண்ணெய் என்ற ஒப்பனையுடன் வருகின்றவற்றில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்..
 பொதுவாக விதைகளை சூடாக்கி அல்லது விதைகளிலிருந்து எண்ணெயைப் பிரித்தெடுக்க இரசாயனங்களைச் சேர்ப்பதன் மூலம் 
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள்
தயாரிக்கப்படுகின்றன. மேலும் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்படும் மற்ற இரசாயனத்தை உறுதிப்படுத்தவும் அகற்றவும் இது இரசாயன அல்லது வெப்ப செயலாக்கத்திற்கு உட்படுகின்றது - என்று பொது வெளியில் ஒரு செய்தி.. 

இவை எந்த அளவுக்கு நமக்கு நல்லது என்று புரியவில்லை..

சமையலின் போது பொறுமையும் கவனமும் தான் பாதுகாப்பு..

ஒருபோதும் கவனச் சிதறல் ஏற்படக் கூடாது..

காய்களை ஆவியில் வேகவைத்து சமைப்பது நல்லது..

மிளகு, சீரகம், ஓமம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, புதினா போன்ற மருத்துவ குணம் உடையவற்றை பாரம்பரிய வழக்கத்தை அனுசரித்து நாளும் சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்..

சூழ்நிலையை அனுசரித்து 
தினமும் வேறு வேறு தானியங்கள் காய்கள் என்றிருந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கும்..

செக்கு எண்ணெய் என்றாலும் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட பொருட்களை அளவுக்கு அதிகமாக உண்ணக் கூடாது..

அந்தக் காலத்தில் விளக்கெண்ணெய் என்று இருந்தது.. அது ஆமணக்கு விதைகளில் இருந்து எடுக்கப்பட்டது..

இப்போது விளக்கு ஏற்றும் எண்ணெய் என்ற பெயருடன் சந்தைகளில்!.. 

இதில் தீபம் ஏற்றினால் தான் திய்யானம் ( தியானம்) கூடி வருமாம்.. 

அது எப்படி என்று புரியவில்லை..இதேபோல நல்லெண்ணெயிலும் உள்ளே வெளியே - என இரண்டு விதங்கள் விற்பனைக்கு..

பலப்பல விதங்களில் தேங்காய் எண்ணெய் வகைகள்..

மருத்துவ குணம் கொண்ட எண்ணெய்கள் எல்லாம் மடை மாற்றம் ஆகி விட்டன..

இனி வரும் நாட்களில் வடை சுடுவதற்கு என்று ஒன்றும் வாழைக்காய் கறிக்கு ஒன்றும்

கத்தரிக்காய்க்கு ஒன்றும் கருணைக் கிழங்கிற்கு ஒன்றும் - என, பலப்பல எண்ணெய்கள் - நம்மைக் குறி வைத்து விற்பனைக்கு வரலாம்..


வயிற்று வேக்காளத்திற்கு தேங்காய்ப் பால் சிறந்திருக்க
தேங்காயும் தேங்காய்ப் பாலும் ஆபத்தானவை என்று ஒரு பக்கம் கூச்சல்..

நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்..

மேலும் குறிப்புகள்
அவ்வப்போது
வெளிவர இருக்கின்றன..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்..

நாளும் வாழ்க
நன்றென வளர்க..
***

5 கருத்துகள்:

 1. அந்தக் காலம் போல இந்தக் காலம் இல்லை.  எல்லாமே நல்ல விதிகள்தான்.  கடைப்பிடிப்பதுதான் சாத்தியமில்லாத ஒன்று.  அன்னத்தை காசுக்கு விற்கவே கூடாது என்றும் சொல்வார்கள்.  தண்ணீருக்கும் அப்படி சொல்வார்கள்.  கலியுகத்தில் எல்லாம் நடைமுறை.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  நல்ல விபரமான கட்டுரைப்பதிவு அருமை. விளக்கப் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது.

  தேங்காயும், தேங்காய் எண்ணெய்யும் கெடுதல், கொழும்பு சக்தி ஏற்படும் என இப்போது சொல்கின்றனர். ஆனால் அந்தக்காலத்தில் உணவில் தேங்காய் தேங்காய்பால் இது போல், சேர்த்தால் வயிற்றுப் புண்ணுக்கு நல்ல மருந்து என நம் வீட்டுப் பெரியவர்கள் கூறினார்கள்.

  எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் (சும்மாவா சொன்னார்கள்.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமென்று. ) கெடுதலென உணர்ந்து செயல்பட வேண்டும். நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 3. நம் உடம்புக்கு எது ஒத்துக் கொள்கிற்தோ அதை சாப்பிடுவதே நல்லது.
  மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
  வளிமுதலா எண்ணிய மூன்று.

  அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
  பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

  வள்ளுவம் சொல்வதை கடைபிடித்தாலே நோய் இல்லாமல் வாழலாம்.

  உங்கள் பதிவுகள் அருமை. எந்த உணவானாலும் அதை இறைவனுக்கு அர்பணித்து பிரசாதமாக சாப்பிட வேண்டும்.
  கோபம், தாபம், கவலையுடன் சாப்பிடுதல் கூடாது என்பார்கள் பெரியவர்கள்.

  பதிலளிநீக்கு
 4. சிறப்பான குறிப்புகள். விதம் விதமான சமையல் எண்ணெய் வகைகள் பார்க்கும்போது அலுப்பாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 5. உணவு பற்றி நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..