நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், பிப்ரவரி 22, 2024

கார்போஹைடிரேட்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 10
வியாழக்கிழமை


கார்போஹைடிரேட்
நாம் நமது அன்றாட பணிகளைச் செம்மையாகச் செய்யத் தேவையான சக்தியை அளிக்கிறது..

கார்போஹைட்ரேட்டுகள்   உடலின் செயல்பாடுகளுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படுகின்றது..

உண்ணும் உணவில் - மூன்றில் ஒரு பங்கு மாவுச் சத்துள்ள கார்போஹைட்ரேட்டுகள் இருக்க வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன..

நார்ச்சத்து, வைட்டமின்கள்  தாதுக்கள் நிறைந்தது கார்போஹைட்ரேட்...


தானியங்கள் மற்றும்
அதிக நார்ச்சத்து கொண்ட காய்கறிகள் (ப்ரொக்கோலி, காலிஃப்ளவர், முளை கட்டிய பயிர்கள் மற்றும் பீன்ஸ்) கார்போஹைட்ரேட்டின் இருப்பிடங்கள்..


மாவுப் பொருளும் சர்க்கரையும் நமது உணவில் இருக்கும் முக்கியமான கார்போஹைட்ரேட்கள்..

கார்போஹைட்ரேட்  தினசரி உணவில் இருக்கவேண்டும்..

புரதத்துடன், கார்போஹைட்ரேட் உணவும் உடலுக்குத் தேவையான  ஒன்றாகும்..


தினை : 

கிழவராக வேடங்கொண்டு வந்த வேலனுக்கு வள்ளி நாயகி கொடுத்தது தேனும் தினை மாவுமே..

தமிழகத்தின் தொன்மையான பயிர்.. தினை.. மிகப் பழங்காலந்தொட்டு இங்கே விளைவதற்கு சான்றுகள் உள்ளன..

தினையில் கால்சியம். புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மக்னீசியம் நிறைந்துள்ளன..

இதயத்துக்கு பலம் சேர்க்கும் வைட்டமின் B1 தினையில் உள்ளது.. தினையை உட்கொள்வதால் இதய நோய் வராமல் தடுக்க முடியும் என்கின்றனர்..

அரிசி  கோதுமை இவற்றுக்கு  மாற்று.. சர்க்கரை குறைபாடு உள்ளவர்க்கு சிறப்பானது..


வரகு :

திருக்கோயில் திருப்பணிகளின் போது கோபுரக் கலசங்களில் நிறைக்கப்படும் பெருமையை உடையது.. இதுவும் தமிழ்கத்தின் பாரம்பரியப் பயிர்..

பட்டுக்கோட்டை ஸ்ரீ நாடியம்மன் பங்குனித் தேரில் எழுந்தருளும் போது வரகு கதிர்களால் ஆன மாலையை அணிந்து கொள்கின்றாள்.. உற்சவத்திற்கும் வரகரிசித் திருவிழா என்றே பெயர்.. 

தஞ்சை மாவட்டத்தின் மிகப்பெரிய விழாக்களில் இதுவும் ஒன்று..

அரிசி, கோதுமையை விட  வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச் சத்தும் சற்று குறைவாக இருப்பதால் ஆரோக்கியத்துக்கு நல்லது.. புரதம் கால்சியம் வைட்டமின் B ஆகியனவும் உள்ளன ..

சர்க்கரை அளவைக் குறைத்து எலும்புகளை உறுதியாக்குகின்றது..
கல்லீரலை மேம்படுத்தி கண்களுக்கு உறுதுணை ஆகின்றது ..


பால், (பழுப்பு) அரிசி, கோதுமை, சோளம், பீன்ஸ்,பீட்ரூட், உருளை, சர்க்கரை வல்லிக் கிழங்கு, கரும்பு, ஆப்பிள். வாழைப் பழங்கள், பருப்பு வகைகள், திராட்சை - ஆகியன நன்மை தரும்  கார்போஹைட்ரேட் உணவுகள் எனப்படுகின்றன..

100 கிராம் பீட்ரூட்டில் சுமார் 10 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. முக்கியமாக நார்ச்சத்து மற்றும் நல்ல சர்க்கரை..

150 கிராம் சோளத்தில் 30 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. 

சோளத்தின் கிளைசெமிக் குறியீடு குறைவு. 
இது இரத்தத்தில் சர்க்கரையை மெதுவாக வெளியிடுவதால்  இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதில்லை.. 

பீன்ஸ் வகைகளில் (200 கிராம்) அதிகபட்சமாக 40 - 46 கிராம் உள்ளது..

பாலிலும் கார்போஹைட்ரேட் உள்ளது. 250 மிலி பாலில் 13 கிராம் வரை உள்ளது..

சாதாரண தயிரில் புரோட்டின் தான் அதிக அளவில் உள்ளது.
 
ஆனால் இனிப்பு சேர்க்கப்பட்ட  தயிரில் (லெஸி) கார்போஹைட்ரேட் உள்ளது. 250 கிராம் தயிரில் 47 கிராம் வரை உள்ளது..


மாம்பழத்தில்  சர்க்கரையின் அளவு கொஞ்சம் கூடுதல்..    நீரிழிவு நோயாளிகள் கவனமாக இருக்க  வேண்டிய பழம். இருந்தாலும் மாம்பழத்தில் அதிக அளவில் கார்போஹைட்ரேட்..  நடுத்தர மாம்பழத்தில்  30 கிராம் வரையில் கார்போஹைட்ரேட்.. ஆயினும் கவனம்..


வாழைப்பழத்தில் வைட்டமின் B6, பொட்டாசியம் ஆகியவை இருக்கின்றன.. அஜீரணக் கோளாறைச் சரி செய்வதுடன் இதயத்திற்கும் நல்லது. சாதாரண வாழைப் பழத்தில் 27 கிராம் வரை கார்போஹைட்ரேட்.

உலர் திராட்சையில் மிக அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது. 20 கிராம் உலர் திராட்சை அப்படியே கார்போஹைட்ரேட் ஆகும்..

100 கிராம் ஆப்பிளில் உள்ள கார்போஹைட்ரேட்  16 கிராம். கூடுதலாக பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் A மற்றும் வைட்டமின் C நிறைந்துள்ளன. 

இதன் விளைவாக குடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியன மேம்படுகின்றன..

வெறும் சர்க்கரையைக் கொண்டுள்ள
பிரெட், தானியங்கள், உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்துள்ள கார்போஹைட்ரேட்டுகளை குறைத்து, அதிகளவிலான புரத உணவுகள் மற்றும் பச்சை காய்கறிகளை உட்கொள்வது நல்லது என்று சிக்கலான கருத்துகள் நிலவுகின்றன..

தினசரி 50 கிராம் வரை கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்ள பரிந்துரை..
கார்போஹைட்ரேட் எனப்படுவது எளிய சர்க்கரை.. 

பால் பொருட்களில் லாக்டோஸ் என்றும் பழங்களில் பிரக்டோஸ் என்றும் பெயர்..

லாக்டோஸ்  பிரக்டோஸ் இவற்றை உட்கொள்ளும் போது, அவற்றின் எளிய மூலக்கூறு அமைப்பின் காரணமாக, விரைவில் குளுக்கோஸாக உடைந்து இரத்தத்தில்  கலக்கின்றன..

சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் என்பவை மாவுச்சத்து ஆகும்.
நார்ச்சத்து நிறைந்த அரிசி, பருப்பு வகைகள், பாஸ்தா, பிரெட்,  போன்றவை.. 

இவற்றின் சிக்கலான மூலக்கூறு கட்டமைப்பு காரணமாக, இவை ஜீரணிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றன, இதனால் ரத்தத்தில் சர்க்கரை படிப்படியாக கலக்கின்றது. 

இது  உடலுக்கு நல்லது என்று குறிக்கப்படுகின்றது..

இதனால்
கார்போஹைட்ரேட் நிறைந்த உணவினை உட்கொள்வதால்    இரத்தத்தில் சர்க்கரை அளவைக்  கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகின்றது..

கார்போஹைட்ரேட் உணவுகளைக் குறைப்பதன் மூலம், விரைவாக உடல் எடையை குறைக்கலாம்...


எனினும் 
சிக்கலான இந்த விஷயத்தில்
தக்க மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது..
 
இணையத்தில்
சேகரிக்கப்பட்ட தகவல்கள் படங்கள்
நன்றி விக்கி

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.. 942

நம்முடைய நலம்
நம்முடைய கையில்
நாளும் வாழ்க
நன்றென வாழ்க..
ஓம்  சிவாய நம ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

4 கருத்துகள்:

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..