நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, பிப்ரவரி 10, 2024

தரிசனம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 27
சனிக்கிழமை


தஞ்சை மணிக்குன்ற திவ்யதேசத்தின் அபிமான திருக்கோயில் என்று கண்டறியப் பெற்ற சிறுபிரம்பூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயிலின் மஹா சம்ப்ரோக்ஷணம் நேற்று முன் தினம் வியாழன்று (தை 25) காலை ஒன்பது மணியளவில் மங்கல இசை முழங்க வெகு சிறப்புடன் நடைபெற்றது..

பெருமாள் கோயில் சம்ப்ரோக்ஷணத்தின் போது மக்கள் அருள் பெற்று ஆடுவதை இரண்டாம் முறையாக இக்கோயிலில் கண்டேன்..

யாகசாலையில் பூர்ணாஹூகுதி நிறைவேறி கடம் புறப்பட்டதுமே பட்டாச்சாரியார் ஒருவர் அருள் நிலையில் நின்றார்..

இவ்வூர் தற்போது ராமாபுரம் எனப்படுகின்றது.. 

தஞ்சை திவ்ய தேசத்தில் இருந்து ஐந்து கிமீ.. 
வெண்ணாற்றங்கரையைக் கடந்ததும் கும்பகோணம் நெடுஞ்சாலையில் வயலூர் கிராமத்திற்கு கிழக்காக அரை கிமீ..

கும்பாபிஷேகம் காணவந்த மக்களுக்கு காலையில் இட்லி பொங்கல் கேசரி காஃபி..

கும்பாபிஷேகம் நடந்ததும் பொங்கல் புளியோதரை என ஐந்து சித்ரான்னங்கள். மதியத்திற்கென விருந்து தயாராகிக் கொண்டிருக்கின்றது என்று அறிவிப்புகள்..

வழக்கம் போல தஞ்சை மண்ணின் உபசரிப்பில் உள்ளம் நெகிழ்ந்தது..


குலம் தரும் செல்வம் தந்திடும் 
அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு 
அருளும்  அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் 
பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்  நாராயணா என்னும் நாமம்.. 956
-: திருமங்கையாழ்வார் :-
ஓம் ஹரி ஓம்
***

5 கருத்துகள்:

 1. படங்கள் அழகு.  அருள் வருவது என்பதை எந்த அளவு எப்படி நம்புவது என்று தெரியவில்லை.  அவரவர் மன பலவீனம் அலலது உணர்ச்சி வசப்பட்ட நிலை

  பதிலளிநீக்கு
 2. செண்டை மேளம் வீடியோ போட்டிருக்கலாம்!  'ஒத்த ரூவா தாரே ஒரு ஒண்ணப்பத்தட்டையும் தாரேன் பாடல் ரிதமில் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 3. நிறைந்த படங்களுடன் கும்பாபிஷேகக் காட்சிகள் . தரிசித்துக் கொண்டோம்.

  இரண்டு நாட்களாக உங்கள் பகிர்வுகள் படித்தேன். என்ன காரணமோ ?கூகிளார் ஊட்டம் போட விடவில்லை.

  பதிலளிநீக்கு
 4. கும்பாபிஷேக படங்கள், உஆனை எல்லாம் அருமை. பாசுரங்களை படித்து வணங்கி கொண்டேன்.கும்பாபிஷேகம் நேரில் பார்த்த உணர்வு .

  பதிலளிநீக்கு
 5. படங்கள் அனைத்தும் அருமை. கும்பாபிஷேக நிகழ்வுகளை நாங்களும் காண முடிந்ததில் மகிழ்ச்சி. தொடரட்டும் பக்தி உலா.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..