நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, பிப்ரவரி 03, 2024

வந்து காணீரே

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 20
சனிக் கிழமை


வாயுள் வையகம் கண்ட  மடநல்லார்
ஆயர் புத்திரன் அல்லன்  அருந்தெய்வம்
பாய சீர் உடைப்  பண்பு உடைப் பாலகன்
மாயன் என்று  மகிழ்ந்தனர் மாதரே.. 19

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில்  மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்.. 21

பணைத்தோள் இள ஆய்ச்சி  பால் பாய்ந்த கொங்கை
அணைத்து ஆர உண்டு  கிடந்த இப் பிள்ளை
இணைக்காலில் வெள்ளித் தளை நின்று இலங்கும்
கணைக்கால் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே.. 25


வந்த மதலைக் குழாத்தை வலிசெய்து
தந்தக் களிறு போல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே
ஒளியிழையீர் வந்து காணீரே.. 30

அதிருங் கடல்நிற வண்ணனை ஆய்ச்சி 
மதுரமுலை ஊட்டி வஞ்சித்து வைத்துப்
பதறப் படாமே பழந் தாம்பால் ஆர்த்த
உதரம் இருந்தவா காணீரே
ஒளிவளையீர் வந்து காணீரே.. 31


பெருமா உரலிற்  பிணிப்புண்டு இருந்து  அங்கு 
இரு மா மருதம் இறுத்த இப் பிள்ளை
குருமா மணிப்பூண்  குலாவித் திகழும்
திருமார்வு இருந்தவா காணீரே
சேயிழையீர் வந்து காணீரே.. 32
-: பெரியாழ்வார் :-
 
நன்றி
நாலாயிர திவ்ய ப்ரபந்தம்

ஓம் ஹரி ஓம்
ஓம் ஹரி ஓம்
***

8 கருத்துகள்:

  1. ஹரே ஸ்ரீ கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. பாசுரங்களை பாடி கண்ணனை வழிப்ட்டேன்.
    ஓம் ஹரி ஓம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. அழகிய குட்டிக் கண்ணன் படங்கள்.
    கண்ணா சரணம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..