நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், பிப்ரவரி 19, 2024

அன்னலக்ஷ்மி

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 7
திங்கட்கிழமை


அன்ன லக்ஷ்மி..
அன்னம் லக்ஷ்மி..

உணவு தான் அன்னம்..
அன்னமே அமுதம்.. 


உணவே அமுதம் என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் அரிசிச்சோறாகிய  அன்னம் தான் அமுதம்..

பரோட்டா பிரியாணி கேக் பிஸ்கட் வகையறாக்கள் அன்னம் என்னும் அமுதத்தின் அருகில் கூட நெருங்கக் கூட முடியாது..

இப்படியாகிய அன்னத்தை ஆகாத ஒன்றாக ஆக்கியதே நவீனம்..


அரிசிச் சோற்றை அன்ன லக்ஷ்மி என்பர்.. அமிர்த லக்ஷ்மி என்பர்..

நாமும் வகையறியாமல் வாழ்கின்ற வாழ்வில் அன்னலக்ஷ்மியை பகையாகக் கொண்டு விட்டோம்..

அரிசிச் சோறு தான் அமுதம்..
இதற்குள் பற்பல படி நிலைகள் உள்ளன.

குளித்து விட்டு சமைப்பதே முதல் படி..

இல்லற வாழ்வுடையோர்க்கு குளிக்காமல் அடுப்பு ஏற்றுதற்கு அனுமதி இல்லை..

இன்றைய வாழ்வில் இதையெல்லாம் சொன்னால் அடிதடி வம்பு வழக்காகி விடும்..

சமைப்பதற்கே குளிக்க வேண்டும் எனில் சாப்பிடுவதற்கும் அப்படித் தான்..

உடல் நலமுள்ள ஒவ்வொருவரும் தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும் என்பது பொது விதி..

குளித்த பின்னர் தான் உணவு பரிமாற வேண்டும்.. உணவு உண்ண வேண்டும்..

அதனால் தான் கூழானாலும் குளித்துக் குடி என்றார் ஔவை மூதாட்டி..

கூழிற்கே இந்த நிலை எனில் ஏனைய உணவு வகைகளுக்கு எப்படி?.. யோசித்துக் கொள்ளவும்..

தினசரி விடியலில் குளிக்கும் வழக்கமும்
நெற்றிக்கு இட்டுக் கொள்ளும் வழக்கமும் இல்லாதோர் சமைப்பதையும் பரிமாறுவதையும் தவிர்த்தாலே எல்லாம் சரியாகி விடும்..

இன்று  உணவு வர்த்தகத்தில் பொதுவான சுத்தம் சுகாதாரம்  நியாயம் நேர்மை என்பன  இல்லை என்பது
வெளிப்படை..


அன்னத்தை லக்ஷ்மியாக மதிக்காத மனைகளில் நுழைவதுவும் அன்னத்தைப் லக்ஷ்மியாக மதிக்காத மனிதர்கள் கையால் உண்பதுவும் பெருங்கேடு..


அரபு நாடுகளில் உணவகப் பணியாளர்களுக்கு பல நிலைகளில் மருத்துவப் பர்சோதனையும் அதன்பின் தகுதிச் சான்றும் நடை முறையில் உள்ளன..

உணவகத்திற்கும் கடுமையான தகுதிச் சோதனைகள் நடை முறையில் இருக்கின்றன..

நமது ஊரில் சாக்கடை ஓரத்தில் சாப்பாட்டுக் கடை போடுவது போல அங்கெல்லாம் நடத்தவே இயலாது.. 

கடும் அபராதம் விதித்தல், தரமற்ற உணவுகளை அழித்தல், உணவகத்தை இழுத்து மூடி முத்திரையிடுதல், பொறுப்பானவர்களை சிறையில் இடுதல், நாடு கடத்துதல் - என்றெல்லாம் தண்டனைகள் இருக்கின்றன..

இங்கும் அப்படியான சட்டதிட்டங்கள் இருக்கின்றன..
இருந்தாலும் நடைமுறைப் படுத்துவதில் ஏராளமான இடையூறுகள்.. பிரச்னைகள்..

இவற்றை எல்லாம் நினைவில் கொண்டு நாம் இங்கே - உணவுப் பழக்கத்தில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நமக்கு நல்ல உடல் நலன் சாத்தியம்..

ஔவையார் அறிவுறுத்திய பலவற்றையும் நவீன கல்வி முறையில் மறந்து விட்டது நமது குற்றம்.. 

அவற்றில் ஒன்று தான் - " தோழனோடும் ஏழைமை பேசேல்.. "

ஆகவே
நமது கஷ்டங்களை இறை சிந்தனையுடன் கடந்து விடுதல் நல்லது..

மன அழுத்தத்தை எக்காரணம் கொண்டும் நமக்குள் வரவழைத்துக் கொள்ள வேண்டாம்..

அதுவே பல நோய்களுக்கு அடிப்படை..   

படங்கள்
நன்றி இணையம்

நம்முடைய நலம்
நம்முடைய கையில்
நாளும் வாழ்க
நன்றென வாழ்க..
**
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

 1. நல்ல குறிப்புகள் ஆயினும், பாதி குறிப்புகள் இந்தத் தொடரின் ஆரம்பத்தில் வ்நதவையே. எத்தனை முறை சொன்னாலும் கடைப்பிடிக்கப் போகிறாயா என்று கேட்டால் நான் அம்பேல்!

  பதிலளிநீக்கு
 2. மிக நல்ல பதிவு. படங்களும் மிக அழகு, பசியைத் தூண்டும்.

  பதிலளிநீக்கு
 3. 'அன்னம்' நல்ல பகிர்வு.

  அன்ன லக்ஷ்மி தாயை வணங்கி உணவு அருந்தி உடல் நலமுடன் வாழுவோம்.

  பதிலளிநீக்கு
 4. அன்ன லக்ஷ்மி - இன்றைய குறிப்புகள் அனைத்தும் நன்று.

  பதிலளிநீக்கு
 5. மகரிஷி அவர்கள் பாடலும் அவர் சொல்லிய வார்த்தைகளும்
  நினைவுக்கு வருகிறது
  //உண்ணும் உணவு உனக்கு கிடைத்தவகை
  எண்ணி யுண்ணிடல் என்றும் உன் கடன்.//

  நன்றி யுணர்வுடன் நாம் இவ் உணவை உண்ண தொடங்க வேண்டும் உடல் நலத்துக்காக.
  எல்லாம் வல்ல இறைவனை போற்றி நல்லதோர் உணவை கொடுதற்கு நன்றி சொல்லி உண்ண வேண்டும்.
  யார் விட்டில் உணவு உண்டாலும் அவர்களை வாழ்த்தி உணவை வாழ்த்தி உண்ண வேண்டும்.

  வயதுக்கு ஏற்ற உணவு உண்ண வேண்டும்.
  அன்ன லக்ஷ்மியை போற்றி உண்போம்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..