நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, பிப்ரவரி 04, 2024

உயிரே உணவே 3

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 21
ஞாயிற்றுக்கிழமைபகுதி 3
தெளிவுடன் ஆயத்தம்


கீரை மற்றும் காய்களை நன்கு சுத்தம் செய்த பிறகே நறுக்க வேண்டும்.. 


துரு பிடிக்காத கத்தி சுத்தமான பலகை அல்லது அரிவாள் மனைகளைத் தான்  பயன்படுத்த வேண்டும்..

இன்றைய சூழலில் வெதுவெதுப்பான நீரில் - கல் உப்பைக் கரைத்து அதில் காய்களைக் கழுவி எடுப்பது நல்லது..

சமையலுக்கான பாத்திரங்களும் சமையலறையும் எப்போதும் தூய்மையாக இருப்பது அவசியம்..

சமைப்பதற்கு முன்பே செய்ய இருக்கும் சமையலைப் பற்றிய தெளிவு இருக்க வேண்டும்..

உணவுப் பொருட்களின் தன்மையை அனுசரித்து மூடி வைத்தோ திறந்தோ வேக வைப்பது நல்லது..

அதிக நேரம் வேக வைப்பதால் நுண்ணூட்டங்கள் அழிந்து விடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்..

சமைக்கும் போது கவனம் முழுதும் சமையலில் மட்டுமே இருக்க வேண்டும்..

பருப்பு வகைகளை நீரில் சற்று நேரம் ஊற வைத்த பின் சமைப்பது நல்லது..


ஓரளவுக்குப் புதிய  பசுமையான காய்களே  உகந்தவை..

வாடி வதங்கிய/ கெட்டுப் போன காய்கள் சமையலுக்கு ஏற்றவை அல்ல..

எப்போதும் மிதமான உஷ்ணத்தில் சமைப்பது சிறப்பு..

உணவுப் பொருட்கள் அடி பிடிப்பதோ கருகுவதோ கூடாது..

கருகித் தீய்ந்த உணவுகளை உண்ணாமல் ஒதுக்குவது நல்லது..


சமைத்தவுடன் உணவை சூடு குறையாதபடிக்கு வேறு பாத்திரங்களில் மாற்றிக் கொள்வதும் நல்லதே..


கால சூழ்நிலைகளை அனுசரித்து சமைத்த உணவுகளின் தன்மை கெடாதபடிக்கு பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும்..

கெட்டுப் போன உணவுகள் உண்பதற்கு ஏற்றவை அல்ல என்பதையும் மறத்தலாகாது..

தினமும் மஞ்சள் தூள் போட்டு பால் குடிப்பது நலம்.. 
டீ காஃபி கார்பனேட்டட் பானங்களைத் தவிர்க்கவும் அல்லது அளவுடன் அருந்தவும்..  

தினமும் காலையில ஒரு தம்ளர் சுடுதண்ணீரில் நெய் அரை ஸ்பூன் சேர்த்து குடிப்பது  நலம் என்றொரு கருத்து பரவி வருகின்றது.. 

இது சரி என்றும் தவறு என்றும் இருவேறு கருத்துகள்.. ஆக, இது அவரவர் விருப்பம்.. 

எனினும் மதிய உணவில் சிறிதளவு சுத்தமான பசு நெய் (கடை நெய் அல்ல) சேர்த்துக் கொள்வது நல்லது..


நெய்யில்லா உண்டி பாழ் - என்கின்றார் ஔவையார்..

கருணைக் கிழங்கு மட்டுமே உடலுக்கு நல்லது..
தவிர - வேறு கிழங்கு வகைகள் தேவை எனில் மட்டுமே  அளவுடன் உண்ணவும்..

முடிந்த அளவு சமையலுக்கு  செக்கில் ஆட்டிய எண்ணெய் மட்டுமே நேரில் பார்த்து வாங்கி உபயோகப்படுத்தவும்.   இந்துப்பு, கல் உப்பு  பயன் படுத்தவும்..  

நாற்பது வயதிற்கு உட்பட்டோர் மட்டுமே புளிப்புச் சுவை உண்ணவும்.. 

சிறுதானியங்கள் எவ்வளவு முக்கியமோ  அந்த அளவுக்கு
அரிசியும் முக்கியம்..

எளிதில் செரிமானம் ஆகும் உணவை  சாப்பிடுவதே நல்லது.. 

இரவு ஒன்பதரைக்குள் உறங்க முயற்சிக்கவும்.. நல்ல  தூக்கம் வரும்படிக்கு எளிய உணவுகளையே இரவில் உட்கொள்ளவும்.. 

பரோட்டா, எண்ணெய் பிரியாணி மாதிரியான லொட்டு லொசுக்கு கடினங்களைத் தவிர்ப்பது நலம்..

நள்ளிரவுக்கு முன்பாக தூங்கும் பழக்கம்  எனில் சரியாக தூக்கம் வராது.. இதனால் உடம்பில் உஷ்ணம்   அதிகரிக்கும்..  தேவையில்லாத மலச்சிக்கல்  ஏற்படும்.. 

அவ்வப்போது வெதுவெதுப்பான நீர் அருந்தவும்.. 
(தள புள என்று கொதித்து  ஆறிய நீர் பயனற்றது)

வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.. 

மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நேர்மையான வாழ்க்கையில் பெரிய வியாதி என்று எதுவும் இல்லை..  

இறை பக்தியினால்
 நம்மை நாமே சரி செய்து கொள்ள  முடியும்..
 
மேலும் குறிப்புகள்
அவ்வப்போது
வெளிவர இருக்கின்றன..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்..

நாளும் வாழ்க
நன்றென வளர்க..
***

17 கருத்துகள்:

 1. சிறப்பான குறிப்புகள். தொடர்ந்து பகிர்ந்து வரும் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி வெங்கட்..

   நீக்கு
 2. அதிகாலை எழுந்து வந்த உடன் ஒரு சொம்பு வெந்நீர் அருந்தும் பழக்கம் உண்டு.  இரவு ஒன்பதரைக்கு முன் படுத்து விடும் பழக்கமும் உண்டு.  அதிகம் வேகாமல் அளவாக வேகவைத்த காய்கறிகள் பிடிக்கும்.  மற்றபடி நிறைய விஷயங்களை பின்பற்ற முடிவதில்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல விஷயங்கள்..

   அன்பின் வருகையும் விவரமான கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 3. நான் காய்கறிகளை அரிந்தவுடன் அலம்புவதில்லை.  முன்னரே நீரில் சுத்தம் செய்வதுதான்.  ஆனால் எவ்வளவு சொல்லியும் வீட்டில் சில காய்கறிகளை கீரைகளை அரிந்தவுடன் அலம்பும் வழக்கம் உள்ளது!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காய்கறிகளை கீரைகளை அலம்பி விட்டு நறுக்குவதே நல்லது..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. எளிதான செரிமானம், தடையற்ற தூக்கத்துக்காக இரவு ஏழு மணிக்கே இரவு உணவு முடிக்கும் வழக்கம்.  ஆனால்  தூக்கம் வேறு காரணங்களால் பலமுறை தடைப்படும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒன்பது மணியளவில் தூங்குவதும் நல்லது தான்..

   மகிழ்ச்சி..
   நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 5. மிகவும் முக்கியமான குறிப்புகள் இவை. ஒரு சில கடைபிடிப்பது கடினம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லை அவர்களின்
   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ..

   நீக்கு
 6. நல்ல குறிப்புகள்.
  நெய் அன்ன சுத்தி என்பார்கள் சிறிது அளவு தினம் சேர்த்து கொள்ள வேண்டும். காய்கறிகள் குளிர் சாதன பெட்டியில் வைத்து அதன் சத்து எல்லாம் போன பின்தான் சமைக்கிறோம். முன்பு தோட்டத்தில் விளைவித்து பறித்து சமையல் செய்வார்கள், பின் வாசலில் வரும் தோட்டத்து காய் வாங்கி சமைத்தோம்.

  காய்களை உப்பும் , மஞ்சள் தூள் போட்டு கழுவி சமைப்பது தொடர்கிற்து கொரோனா காலத்திலிருந்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //காய்களை உப்பும் , மஞ்சள் தூளும் போட்டு கழுவி சமைப்பது தொடர்கிறது..//

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ..

   நீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. சுத்தமும் சுகாதாரமும் நம் இரு கண்களாக கருத வேண்டுமென பதிவின் சாராம்சங்கள் கூறுகின்றன. தெளிந்த நீரோடை போன்ற பதிவு. படித்து ரசித்தேன். அனைவரும் இதைப் பின்பற்றினால் நலம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ///சுத்தமும் சுகாதாரமும் நம் இரு கண்களாக கருத வேண்டும்..///

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ..

   நீக்கு
 8. பயனுள்ள நல்ல தகவல்கள் ஜி

  பதிலளிநீக்கு
 9. உணவு பற்றி நல்ல பல விடயங்கள்.

  தொடர்கிறோம்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..