நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 27
சனிக்கிழமை
தஞ்சை மணிக்குன்ற திவ்யதேசத்தின் அபிமான திருக்கோயில் என்று கண்டறியப் பெற்ற சிறுபிரம்பூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயிலின் மஹா சம்ப்ரோக்ஷணம் நேற்று முன் தினம் வியாழன்று (தை 25) காலை ஒன்பது மணியளவில் மங்கல இசை முழங்க வெகு சிறப்புடன் நடைபெற்றது..
பெருமாள் கோயில் சம்ப்ரோக்ஷணத்தின் போது மக்கள் அருள் பெற்று ஆடுவதை இரண்டாம் முறையாக இக்கோயிலில் கண்டேன்..
யாகசாலையில் பூர்ணாஹூகுதி நிறைவேறி கடம் புறப்பட்டதுமே பட்டாச்சாரியார் ஒருவர் அருள் நிலையில் நின்றார்..
இவ்வூர் தற்போது ராமாபுரம் எனப்படுகின்றது..
தஞ்சை திவ்ய தேசத்தில் இருந்து ஐந்து கிமீ..
வெண்ணாற்றங்கரையைக் கடந்ததும் கும்பகோணம் நெடுஞ்சாலையில் வயலூர் கிராமத்திற்கு கிழக்காக அரை கிமீ..
கும்பாபிஷேகம் காணவந்த மக்களுக்கு காலையில் இட்லி பொங்கல் கேசரி காஃபி..
கும்பாபிஷேகம் நடந்ததும் பொங்கல் புளியோதரை என ஐந்து சித்ரான்னங்கள். மதியத்திற்கென விருந்து தயாராகிக் கொண்டிருக்கின்றது என்று அறிவிப்புகள்..
வழக்கம் போல தஞ்சை மண்ணின் உபசரிப்பில் உள்ளம் நெகிழ்ந்தது..





































