நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூன் 25, 2020

வருவாய் முருகா..

வருவாய்.. வருவாய்..
***

பாற்குடம் காவடி சேர்ந்தாட அங்கு 
பரமனும் சக்தியும் உடனாட
ஐங்கரன் அவனும் மகிழ்ந்தாட அங்கு
மூஷிகம் அதுவும் விளையாட
வள்ளி நாயகி தன்னோடு எழில்
தேவ யானையும் சேர்ந்தாட
மயிலொடு சேவலும் கூத்தாட அந்த சரவணப் பொய்கையின் மீனாட
தேவ இந்திரன் உடனாட எழில்
தேவ கன்னியரும் கலந்தாட
சித்தரும் பக்தரும் சேர்ந்தாட சிவ
கணங்களும்  கனிந்து கூத்தாட
குன்றும் மலைகளும் குளிர்ந்தாட
கொடு நாகமும் சிவசிவ என்றாட
கடலும் அலையும் கலந்தாட கன்னித்
தமிழும் இசையாய் நடமாட
நாரணன் நாரணி மகிழ்ந்தாட நல்ல
வீணையின் தேவி இசைபாட
நான்முகன் வேதத்துதி பாட வெள்ளிப் பளிங்கென நந்தியும் எழுந்தாட
ஹரஹர சிவசிவ மால்மருகா என
மண்ணும் விண்ணும் புகழ்பாட
சிவசிவ ஹரஹர வேல்முருகா என
திக்குகளும் திருக் கூத்தாட
வெற்றி விளைத்திடும் வீரவாகு அங்கு
வேல்வேல் என்றே கவிபாட
வயிரவர் வயிரவி மகிழ்ந்தாட வரும்
பூதங்களும் சுற்றிச் சுழன்றாட
வருவாய் வடிவுடை 
வேலுடனே வருவாய்..
வருவாய் எழிலுடை 
வேலுடனே வருவாய்!....
ஃஃஃ

புதிதாக வந்திருக்கும் அறையில்
கணினியை எடுத்து வைக்க
இயலாத சூழ்நிலை..

கணினியுடன் இணையத்தை இணைக்கும் Router எனும் சாதனமும்
பழுதாகி விட்டது...

பல நாட்களுக்குப் பிறகு
தஞ்சையம்பதியில்
வெளியாகும் பதிவு இது...

ஒரு மாதத்துக்கு முன்பு
எழுதிய பாடல் இது..
கைத்தொலைபேசி வழியாக
தளத்தில் இணைத்துள்ளேன்..

முருகன் வர வேண்டும்..
அவனருளால்
நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்...

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ

16 கருத்துகள்:

 1. பாடல் சிறப்பு. முருகன் நம்மைக் காக்கட்டும். மொபைலிலேயே இந்த வேலைகளை மேற்கொள்ள நிறையவே பொறுமை வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. மொபைல் வழி பதிவு - கொஞ்சம் கஷ்டம் தான்.

  சிறப்பான பாடல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. அனைத்திற்கும் முருகன் அருள் கிட்டட்டும் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. ஆ ஆ ஆ துரை அண்ணா மொபைல் வழி பதிவா!!! கொஞ்சம் கஷ்டம்தான். நான் கணினி இல்லைனா வலை வருவதே கஷ்டம் தான்.

  முருகன் பாடல் மிகவும் சிறப்பு. எல்லாம் நல்லதே ந்டக்கட்டும் அண்ணா.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும்
   கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. ஓம் நம சிவாய
  ஓம் நம சிவாய
  ஓம் நம சிவாய

  கைத்தொலைபேசி பதிவு எழுத நம்ம கில்லர்ஜி முருகனை தொடர்பு கொண்டாலே போதும் ஐயா...

  யாவரும் நலமாகும்... அனைத்தும் நலமாகும்...

  முருகா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. உங்கள் முருகன் பாடல் அருமை.
  கைத்தொலைபேசி மூலம் பதிவுக்கு வாழ்த்துக்கள்.
  கமலா ஹரிஹரன் அதில்தான் எழுதுகிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
   கமலா ஹரிஹரன் கைத்தொலைபேசி மூலமாகத்தான் எழுதுகிறார் என்பதை முன்பே அறிந்திருக்கிறேன்...

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. விரைவில் உங்கள் பிரச்னை தீர முருகன் அருள் புரியட்டும். பாடல் அருமை. பாடும்போதே ஆடல் தானாக மனக்கண்களில் தோன்றுகிறது. முருகன் அருள் முன் நிற்கட்டும். அனைவரையும் காக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
   முருகன் அருள் முன் நிற்கட்டும்...

   நன்றியக்கா..

   நீக்கு