நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூன் 07, 2020

திருஞானசம்பந்தர்

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று வைகாசி மூலம்..
ஞானசம்பந்தப்பெருமானின்
குருபூஜை நாள்...


இன்றைய பதிவில்
ஸ்வாமிகள் அருளிச் செய்த திருப்பதிகம்

முதலாம் திருமுறை
திருப்பதிக எண் - 130

திருத்தலம் - திருஐயாறு


இறைவன் ஸ்ரீ ஐயாறப்பர், செம்பொற்சோதிநாதர்
அம்பிகை - ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தனி

தல விரிட்சம் - வில்வம்
தீர்த்தம் - காவிரி, சூரிய புஷ்கரணி

ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி 
புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட்டு ஐம்மேலுந்தி
அலமந்தபோதாக அஞ்சலென்று அருள்செய்வான் அமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்று அஞ்சி
சிலமந்தி அலமந்து மரமேறி முகில் பார்க்கும் திருஐயாறே.. 1

விடலேறு படநாகம் அரைக்கசைத்து வெற்பரையன் பாவையோடும்
அடலேறு ஒன்றதுவேறி அஞ்சொலீர் பலியென்னும் அடிகள்கோயில்
சுடலேறித் திரைமோதிக் காவிரியின் உடன்வந்து கங்குல்வைகித்
திடலேறிச் சுரிசங்கம் செழுமுத்துஅங்கு ஈன்றலைக்கும் திருஐயாறே.. 2

கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பேராளர் மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழில் நுழைந்து கூர்வாயால் இறகு உலர்த்திக் கூதல்நீங்கிச்
செங்கானல் வெண்குருகு பைங்கானல் இரைதேடும் திருஐயாறே.. 3

ஊன்பாயும் உடைதலை கொண்டூருரின் பலிக்குழல்வார் உமையாள்பங்கர்
தான்பாயும் விடையேறும் சங்கரனார் தழருவர் தங்குங்கோயில்
மான்பாய வயலருகே மரமேறி மந்திபாய் மடுக்கள் தோறும்
தேன்பாய மீன்பாயச் செழுங்கமல மொட்டலரும் திருஐயாறே.. 4


நீரோடு கூவிளமும் நிலாமதியும் வெள்ளெருக்கு நிறைந்த கொன்றைத்
தாரோடு தண்கரந்தை சடைக்கணிந்த தத்துவனார் தங்குங்கோயில்
காரோடி விசும்பளந்து கடிநாறும் பொழிலணைந்த கமழ்தார்வீதித்
தேரோடும் அரங்கேறிச் சேயிழையார் நடம்பயிலும் திருஐயாறே.. 5

வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறிகாட்டும் விகிர்தனாகிப்
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த புண்ணியனார் நண்ணுங்கோயில்
காந்தாரம் இசையமைத்துக் காரிகையார் பண்பாடக் கவினார்வீதித்
தேம்தாம் என்றுஅரங்கேறிச் சேயிழையார் நடமாடும் திருஐயாறே.. 6

நின்றுலா நெடுவிசும்பு நெருக்கிவரு புரமூன்று நீள்வாயம்பு
சென்றுலாம் படிதொட்ட சிலையாளி மலையாளி சேருங்கோயில்
குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச மலர் பாய்ந்து வாசமல்கு
தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு கண்வளரும் திருஐயாறே.. 7

அஞ்சாதே கயிலாய மலையெடுத்த அரக்கர்கோன் தலைபத்தும்
மஞ்சாடு தோள்நெரிய அடர்த்து அவனுக் கருள்புரிந்த மைந்தர்கோயில்
இஞ்சாயல் இளந்தெங்கின் பழம்வீழ இளமேதி இரிந்தங்கோடி
செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல வயல் படியும் திருஐயாறே.. 8

ஸ்ரீ ஐயாறப்பர் - அறம்வளர்த்த நாயகி 
மேலோடி விசும்பணவி வியனிலத்தை மிகஅகழ்ந்து மிக்குநாடும்
 மாலொடு நான்முகனும் அறியாத வகைநின்றான் மன்னுங்கோயில்
கோலாடக் கோல்வளையார் கூத்தாடக் குவிமுலையார் முகத்தினின்று
சேலாடச் சிலையாடச் சேயிழையார் நடமாடும் திருஐயாறே.. 9

குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு சாக்கியருங் குணமொன்றில்லா
மிண்டாடு மிண்டருரை கேளாதே யாளாமின் மேவித் தொண்டீர்
எண்தோளர் முக்கண்ணர் எம்ஈசர் இறைவன் இனிதமருங்கோயில்
செண்டாடு புனற்பொன்னிச் செழுமணிகள் வந்தலைக்கும் திருஐயாறே.. 10

அன்னமலி பொழில்புடை சூழ்ஐயாற்றெம் பெருமானை அந்தண்காழி
மன்னிய சீர் மறைநாவன் வளர்ஞான சம்பந்தன் மருவுபாடல்
இன்னிசையால் இவைபத்தும் இசையுங்கால் ஈசனடி ஏத்துவார்கள்
தன்னிசையோடு அமருலகிற் தவநெறி சென்றெய்துவர் தாழாதன்றே.. 11
-: திருச்சிற்றம்பலம் :-ஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

21 கருத்துகள்:

 1. தளம் வந்து மகிழ்ந்தேன்.  பதிவு கண்டு நெகிழ்ந்தேன்.  உடல்நிலை, கணினி அனைத்தும் சீரானதா?

  ஆண்டவர் அகிலமெல்லாம் காக்கட்டும். ஓம் சிவாய நாம ஓம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு...
   இங்கு நான் நலமே... தாங்களும் நலம் என எண்ணுகிறேன்...

   உடல் நலக்குறைவு ஏதும் இல்லை..
   பத்தாவது தளம் காலி செய்யப்பட்டது.. அங்கிருந்த அனைவரும் வேறு வேறு தளங்களுக்கு மாற்றப்ப்ப்ட்டனர்... அவர்களுள் நானும் ஒருவன்...

   இப்போது வந்திருக்கும் அறைக்கு நானொரு இடைஞ்சல்.. கூடவே கணினியும் அதன் சிறு மேஜையும்...

   வேறென்ன செய்ய!...
   கணினியைப் பயன்படுத்தாமல் இருக்கிறேன்.. விரைவில் சீராகும்...

   பிறகு விரிவாகச் சொல்கிறேன்..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
  2. ஓ இதுதான் காரணமா.. உங்கள் உடல் நலம் சுகம் என்பது மகிழ்ச்சி அண்ணா

   கீதா

   நீக்கு
 2. நாடு நலம் பெறட்டும் வாழ்க நலம்.

  பதிலளிநீக்கு
 3. தளம், படங்கள், திருப்பதிகம் எல்லாமே அழகு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 4. ஆளுடைப்பிள்ளையைக் கண்டேன். அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. பதிகம் பாடி தரிசனம் செய்து கொண்டேன்.
  விரைவில் எல்லாம் சரியாக வேண்டும்.

  வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. ஆளுடைப்பிள்ளை உங்கள் துன்பங்கள் அனைத்தையும் தீர்த்து வைக்கட்டும். விரைவில் எல்லாம் நல்லபடியாக முடியட்டும். அருமையான பதிகங்கள் பகிர்வுக்கும் இறைவன் தரிசனத்துக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்துரையும்
   மகிழ்ச்சி.. நன்றியக்கா...

   நீக்கு
 7. அண்ணா பதிவுகள் இல்லையே என்னாச்சு என்று இன்று கேட்க இருந்தேன். பதிவு வந்துவிட்டது உடல் நலம் தேவலாம் தனே..

  நலமே விளையட்டும்! உங்களுக்கும் இவ்வுலகிற்கும்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேறு அறைக்கு மாற்றப்பட்டிருக்கிறேன்..

   கணினி மேசையை வைப்பதற்கு இடம் ஏதுவாக இல்லை...

   அதுதான் சற்று தாமதம்...

   அன்பின் வருகையும் கருத்துரையும்
   வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 8. திருஐயாறு கோவில் அருகில் சென்றும் தரிசிக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது (மற்ற கோவில்கள் ஷெடியூலினால்). அந்தக் கோவில் தரிசனம் வாய்க்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெல்லை...

   காசிக்கு நிகரான ஆறு தலங்களுள் இதுவும் ஒன்று..

   திரு ஐயாற்றுக்கு அருகில் தான் வரகூர் வேங்கடவன் திருக்கோயிலும் கவித்தலமும் அப்பக்குடத்தான் திருக்கோயிலும் அமைந்துள்ளன...

   நிச்சயம் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்..
   வேண்டிக் கொள்கிறேன்..

   மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு