நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூன் 29, 2020

ஸ்ரீ வராஹி வாழ்க

நாடும் வீடும் நலம் பெறவேண்டும்
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
ஆனி மாதத்தின் அமாவாசையை அடுத்து
அனுசரிக்கப்படுவது ஆஷாட நவராத்திரி...

இந்த நவராத்திரி
ஸ்ரீ வராஹி அம்மனுக்கு
உரியதாகும்...

ஆஷாட நவராத்திரி இல்லங்களில்
கடைப்பிடிக்கப்படுவது அவரவர் விருப்பம் என்ற நிலையில்
சாக்த சம்பிரதாய மடங்களில்
அனுசரிக்கப்படுகின்றது..

சிவாலயங்களில்
சப்த கன்னியருள் விளங்கும்
ஸ்ரீ வராஹி அம்மனுக்கு
சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
நிகழ்கின்றன...


ஸ்ரீ வராஹி அம்மன்
காசி மாநகருக்கு அடுத்ததாக
தஞ்சை பெரிய கோயிலில் தான்
தனி சந்நிதியில்
கொலு வீற்றிருக்கின்றாள்
என்கின்றனர் ஆன்றோர்..

தற்சமயம்
தனிப்பட்ட அறக்கட்டளைகளைச்
சார்ந்த கோயில்களில்
ஸ்ரீ வைரவர், ஸ்ரீ வராஹி, 
ஸ்ரீ பிரத்தியங்கிரா - என
பிரதிஷ்டை செய்திருக்கிறனர்..
அவை இந்தக் கணக்கில்
சேர மாட்டாது...

இந்த அளவில்
தஞ்சையில் ஸ்ரீ வராஹி அம்மனுக்கு
ஆஷாட நவராத்திரி
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது..

அந்த வைபவத்தின்
திருக்கோலங்கள் 
இன்றைய பதிவில்..

படங்களை வழங்கிய
திரு. ஞானசேகரன் அவர்களுக்கு
நன்றி..வரம் தந்து வளம் தந்து
வளர்கின்ற நலம் தந்து
வாழ்விக்கும் அன்னையே
வாராஹி போற்றி.. போற்றி..

படை கொண்டு களம் கண்டு
பகை வென்று முடி கொண்டு
புகழ் கொண்ட சோழனின்
தோள் நின்ற தேவி போற்றி...

துணை என்று தமிழ் கொண்டு
தூ மலர் இதழ் கொண்டு
துதிக்கின்ற முகம் கண்டு
துயர் தீர்க்கும் அன்னை போற்றி..

நிலம் கண்டு நீர் கொண்டு
நிறைகின்ற நலம் கொண்டு
நிமிர்கின்ற மனம் கண்டு
மகிழ்கின்ற வாராஹி போற்றி...

வருகின்ற துயர் கண்டு
பயங்கொண்ட முகம் கண்டு
நான் உண்டு என வந்து
நலம்  காட்டும் அன்னை  போற்றி..

துயர் கொண்டு வழிகின்ற
விழி கண்டு முன் நின்று
பிணி மாற்றி அருள் கின்ற
வாராஹி அன்னை போற்றி..

அனல் கொண்ட வினை என்று
தளர் கின்ற நிலை கண்டு
புனல் கொண்ட முகில் என்று
வருகின்ற வாராஹி போற்றி..

சஞ்சலம் என்று வரும்
நெஞ்சகம் வாழ்ந்திட
அஞ்சல் என்றருள் கின்ற
தஞ்சையின் வாராஹி வாழ்க.. 


ஸ்ரீ வராஹி வாழ்க.. வாழ்க..
ஸ்ரீ வராஹி வாழ்க.. வாழ்க..
***
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

19 கருத்துகள்:

 1. அதிகாலை அம்மன் தரிசனம். வராஹி அம்மன் வரம் அருளட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு...
   வராஹி வருவாள்... வரம் அருள்வாள்...

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. ஸ்ரீ வராஹி அம்மனின் தரிசனம் நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. வராகி அம்மன் வந்து அனைவரையும் காக்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. இயல்பு நிலைக்குத் திரும்ப இறையருள் துணை நிற்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. வராஹி அம்மனின் படங்கள் அருமை. அவளின் கருணை நம்பால் வரவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெல்லை..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. வராஹி அம்மன் அழகான அலங்காரம். அழகு! தரிசனம் பெற்றோம். உலகம் முழுவதும் நன்மை பெற்றிட அருள வேண்டும்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி சகோ..

   நீக்கு
 7. வராஹி அன்னையின் அலங்காரம் படங்கள் எல்லாம் அழகு.
  கவிதை நீங்கள் எழுதிய கவிதையா?
  நன்றாக இருக்கிறது பாடலை படித்து வராஹியை வணங்கி கொண்டேன்.
  மக்கள் எல்லோரும் நலமாக இருக்க அருள்புரிய வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   பாடல் வரிகளை அன்னையின் அருளால் எழுதினேன்..

   அன்பின் கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 8. வராஹி அம்மன் தரிசனம் கண்டேன் ...
  அன்னை நம் அனைவருக்கும் நல்அருள் புரியட்டும் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

   அன்னை அனைவருக்கும் அருள் புரிவாளாக...

   நீக்கு
 9. அன்னை வாராஹி அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. பெயரில்லா09 ஜூலை, 2022 01:33

  அம்மா வாழ்க வாழ்க

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..