நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மார்ச் 01, 2024

திருப்புகழ்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 18
வெள்ளிக்கிழமை

தானத் தானத் ... தனதான 
தானத் தானத் ... தனதான


நாடித் தேடித் ... தொழுவார்பால்
நானத் தாகத் ... திரிவேனோ..

மாடக் கூடற் ... பதிஞான
வாழ்வைச் சேரத் ... தருவாயே..

பாடற் காதற் ... புரிவோனே
பாலைத் தேனொத் ... தருள்வோனே

ஆடற் றோகைக் ... கினியோனே
ஆனைக் காவிற் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


உன்னைத் தேடிவந்து
தொழுகின்ற அடியார்களிடம்

விருப்பம் கொண்டு அவர்களுடன் 
நான் திரிய மாட்டேனோ?..

நான்மாடற்கூடல் எனும் 
துவாதசாந்த நிலையில் கூடுகின்ற 
ஞான வாழ்வை அடையும்படி 
அருள் புரிவாயாக.

இசைத்தமிழ் பாடலைக் கேட்டு 
அருள் புரிபவனே..

பாலையும் தேனையும் போல்
இனிமை அருள்பவனே..

ஆடும் மயிலுக்கு இனியவனே..

திரு ஆனைக்காவினில்  
விளங்குகின்ற பெருமாளே..
**
 

முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

7 கருத்துகள்:

 1. முருகா சரணம். முத்துக் குமரா சரணம்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. திருப்புகழ் பாடலும் அதன் விளக்கமும் அருமையாக உள்ளது. அழகான படங்களின் வாயிலாக முருகப்பெருமானின் தரிசனம் பெற்றேன்.

  /நான்மாடற்கூடல் எனும்
  துவாதசாந்த நிலையில் கூடுகின்ற
  ஞான வாழ்வை அடையும்படி
  அருள் புரிவாயாக./

  முருகா.. அந்தப் பேறினை நீ எனக்கு தந்தருள வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன். . முருகா சரணம். முருகா சரணம்.

  பகிர்வுக்கு என் மனமார்ந்த நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /// முருகா.. அந்தப் பேறினை நீ எனக்கு தந்தருள வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.///

   முருகா சரணம்
   முருகா சரணம்..

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. திருப்புகழ் பாடலும் விளக்கமும் அருமை.
  திருப்புகழை பாடி முருகனை வணங்கி கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 4. திருப்புகழ் பாடலும் விளக்கமும் நன்று.

  பதிலளிநீக்கு
 5. முருகா சரணம். பாடல் பாடி அவனருளை வேண்டினோம்.

  பதிலளிநீக்கு
 6. ஓம் நமசிவாய
  வாழ்க வையகம்

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..