நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மார்ச் 23, 2024

திருமலை தரிசனம் 1

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 10
சனிக்கிழமை


பெருகு மத வேழம் மாப் பிடிக்கு முன் நின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி அருகிருந்த
தேன் கலந்து நீட்டும்  திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை.. 2256
-: பூதத்தாழ்வார் :-

கடந்த மார்கழியின் மூன்றாவது வாரத்தில் திருமலை தரிசனம் வேண்டி திருக்காளத்தி தரிசனம் செய்த பின்  - மறுநாள் காலையில் அலிபிரி சென்றடைந்தோம்.. 

திருமலையின் அடிவாரத்தில் இருக்கின்ற இரண்டு கோயில்களும் என்ன காரணத்தாலோ நடையடைக்கப்பட்டிருந்தன.. தாமதிக்காமல் படியேறினோம்.. இந்தத் தடவை நடைவழி சற்று அதிக நேரம் தான்..

முழங்கால் பிரச்னையுடன்  எப்படி நான் மலையறினேன் என்பதில் வியப்பு.. 

பெருமாளின் கருணையன்றி வேறு எதுவாக இருக்க முடியும்!..

வழிநடையில் சில காட்சிகள் - இன்றைய பதிவில்..


அன்பின் நெல்லை அவர்களைப் போல விவரம் அறிந்தவனும் அல்ல..

திரு.வெங்கட் நாகராஜ் போல தொழில் நுட்பம் அறிந்தவனும் அல்ல.. 

குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தது போலத் தான் எனது நிலை..

ஆகவே - மனம் பொறுத்துக் கொள்ளவும்..படிகள் தோறும் மஞ்சள் குங்குமம் இட்டு பக்தர் 
ஏற்றுகின்ற கற்பூரங்கள்
மேலும் காட்சிகள்
அடுத்த சில நாட்களில்..

மானேய் கண் மடவார்  மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம்பொழில் சூழ்  திருவேங்கட மாமலை
என்னானாய் வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.. 1029 
 -: திருமங்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்
ஓம் நமோ வேங்கடேசாய..
***

11 கருத்துகள்:

 1. திருமலை மலையேற்றக் காட்சிகள் சுவாரஸ்யம்.  என்னதான் நாங்கள் பெரிதாக்கிப் பார்க்கலாம் என்றாலும், நீங்களே சற்று பெரிதாகக் கொடுக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் எடுக்கும் படங்களில் அளவு மாற்றம் ஏதும் செய்வதில்லையே..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. சிறப்பான படங்கள்தான் ஜி

  பதிலளிநீக்கு
 3. திருமலை படங்கள், மலை ஏற்றக் காட்சிகள் அருமை.

  வெங்கடேசாய நமக.

  பதிலளிநீக்கு
 4. திருமலை படங்கள், மலை ஏற்றக் காட்சிகள் அருமை.

  வெங்கடேசாய நமக.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி மாதேவி..

   நீக்கு
 5. திருமலைக்கு கால்வலியோடு படி வழியாக ஏறி வணங்கி வந்தது இறைவன் அருள்தான்.
  படங்கள் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெருமாள் அருள் தான் காரணம்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி..

   நீக்கு
 6. திருமலைக்குச் சென்று பல வருடங்கள் (கிட்டத்தட்ட 35 வருடங்கள்!) ஆகிவிட்டது. ஒரு முறையேனும் மலைக்கு நடந்து செல்ல வேண்டும் என்ற விருப்பம் உண்டு. அவன் அழைக்க வேண்டுமே!

  படங்கள் அனைத்தும் நன்று.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..