நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், நவம்பர் 08, 2022

ஐயாறு போற்றி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 22
செவ்வாய்க்கிழமை
 

தெற்கு வாசல் குங்கிலிய குண்டம்
கடந்த வியாழனன்று (3/11) எனது தந்தையின் நினைவு நாள்.. 



புஷ்ய மண்டபம் (பூச படித்துறை)
புனல் பரந்த காவிரி
தெற்கு கோபுர வாசலில்
சுந்தரருக்காக ஓலமிட்ட விநாயகர் மற்றும் சிவாம்சம் பெற்றுத் திகழும் துவார பாலகர்
ஸ்ரீ ஆட்கொண்டார்
தரிசனம்.. 

அந்த காலைப் பொழுதில் அப்பர் ஸ்வாமிகள் தரிசனம் கண்ட தென் கயிலாயத்தில் திருமுழுக்கு ஆகிக் கொண்டிருந்தது.. 

சற்றே வட மேற்கான சந்நிதி..  
சிவலிங்கத்திற்குப் பின்னால் - காட்சி கொடுத்த நாயகர் 
கல்யாண திருக் கோலத்தில் அம்மையும் அப்பனும்.. கண் நிறைந்த தரிசனம்..  அப்படியே திருச்சுற்றில் நடந்தால் வட கயிலாயம்..

ராஜராஜ சோழனின் பட்டத்தரசி லோகமாதேவியார் எழுப்பிய கற்றளி.. அங்கே திருமுறைப் பண்ணிசை நடந்து கொண்டிருந்தது..






அன்றைக்கு ஐப்பசி சதயம்.. அங்கேயும் தரிசனம் செய்து விட்டு மூலஸ்தான தரிசனம்.. 

சீரார் திரு ஐயாறன் சேவடிகளைப் போற்றி வணங்கி வலம் செய்தோம்.. 

தனிக்கோயிலாக விளங்கும் காமகோட்டத்தில் ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி.. அன்னையின் அருள் முகம் கண்டு வணங்கி தண்டனிட்டோம்..

பஞ்சநதம் எனப்படும் திருக்கோயிலின் திருச்சுற்றுகளில் எடுக்கப்பட்ட படங்கள் இன்றைய பதிவில்..

திரு ஐயாறு

இறைவன் ஸ்ரீசெம்பொற் சோதி
அம்பிகை
ஸ்ரீ அற்ம் வளர்த்த நாயகி


தென்கயிலாயம்














உலகமாதேவியார்

ஸ்ரீ ராஜராஜசோழர்


பூதங்கள் பலவும் வைத்தார் பொங்குவெண் ணீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார் கின்னரந் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார் ஐயன் ஐயாற னாரே.. 4/38/9
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

  1. கோவில் படங்கள் அழகு. உங்கள் தந்தையின் நினைவைப் போற்றுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. // உங்கள் தந்தையின் நினைவைப் போற்றுவோம்.//

      அன்பின் ஸ்ரீராம்..

      தங்கள்
      வருகைக்கும் கருததிற்கும் நன்றி.. நன்றி..

      நீக்கு
  2. திரு ஐயாறு படங்கள் எல்லாம் மிக அருமை.
    நாவுக்கரசர் பதிகம் பாடி ஐயாறு அப்பனை வணங்கி கொண்டேன்.
    உங்கள் தந்தைக்கு வணக்கம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள்
      வருகைக்கும் கருததிற்கும் நன்றி.. நன்றி..

      நீக்கு
  3. அன்னாபிஷேஹப் படங்களை எதிர்பார்த்து வந்தேன். திரு ஐயாறு தரிசனம் கிட்டியது. மிக்க நன்றி. கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரரின் அன்னாபிஷேஹக் காட்சி வீடியோ நேற்று வாட்சப்பில் வந்தது. கங்கை கொண்ட சோழபுரத்தில் தான் பிரக்தீஸ்வரர். தஞ்சையில் அவர் பெருவுடையார். பிரகதீஸ்வரர் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு நாளை விளக்கம் தருகின்றேன்..

      தங்கள்
      வருகைக்கும் கருததிற்கும் நன்றி.. நன்றியக்கா..

      நீக்கு
  4. திருவையாறு ஆண்டவர் கடைக்கு வந்துசேர்ந்தபோது 12 மணியை நெருங்கியிருந்தது. ஐயாரப்பர் கோவில் நடை சாத்தியிருக்கும் என்றதால் செல்லவில்லை.

    கோயில் திருச்சுற்று, சிதைந்த ஓவியங்களைப் பார்க்கும்போது கும்பகோணம் இராமஸ்வாமி கோவில் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவையாற்று அசோகா மீது அப்படியென்ன மோகம்?..

      நான் அந்தக் கடையை நிமிர்ந்து பார்ப்பதே இல்லை..

      தங்கள்
      வருகைக்கும் கருததிற்கும் நன்றி..

      நீக்கு
  5. பதில்கள்
    1. ஓம் சிவாய நம..

      அன்பின் வருகைக்கு நன்றி தனபாலன்..

      நீக்கு
  6. தங்களது தந்தையின் நினைவு தினத்தில் எமது அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள்
      வருகைக்கும் கருததிற்கும் நன்றி.. நன்றி ஜி..

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் ஒவ்வொன்றும் ரசனையாக உள்ளது. கோவில் தரிசனமும், கோபுர தரிசனமும் மனஅமைதியை தந்தது. திருவையாறு இறைவனையும் இறைவியையும் வணங்கிக் கொண்டேன். தங்கள் தந்தையின் நினைவு தினத்தில் இறைவனின் நல்லாசிகள் கிடைத்ததும் மகிழ்ச்சிதான். படங்கள் அனைத்தும் அந்தக்கோவிலை நேரில் சென்று தரிசித்த திருப்தியை அளித்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // தங்கள் தந்தையின் நினைவு தினத்தில் இறைவனின் நல்லாசிகள் கிடைத்ததும் மகிழ்ச்சிதான்.//

      உண்மை.. நானும் இப்படித்தான் உணர்ந்தேன்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..