நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, நவம்பர் 04, 2022

சதயத் திருவிழா 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 18
வெள்ளிக்கிழமை


நேற்று (3/11) தஞ்சை ஸ்ரீ ப்ரஹதீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற சதயத் திருவிழாவின் காட்சிகள் சில..

தாங்கள் அனைவரும் சதய விழா நிகழ்வுகள் அனைத்தையும் உடனுக்குடன் பார்த்திருக்கக் கூடும்.. இருப்பினும் எனது மகிழ்ச்சிக்காக...

படங்களைப் பதிவிட்டவர்க்கு நெஞ்சார்ந்த நன்றி..

நேற்று காலை மங்கல இசையுடன் விழா துவங்கியது..


தருமபுர ஆதீனம் இருபத்தேழாவது குருமகா சந்நிதானம் ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருக்கோயில் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கினார்..

சகோட யாழ்
ராஜராஜன் காலத்தில் 
ஓதுவார்களால் இசைக்கப்பட்ட சகோட யாழ் எனும் இசைக் கருவிக்கும் பன்னிரு திருமுறைகளுக்கும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீப ஆராதனை  நடத்தப்பட்டது..

தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது திருமுறைகளை ஏற்றிக் கொண்டு தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருந்து வந்திருந்த நாற்பத்தெட்டு ஓதுவார்கள் தேவாரத் திருப்பாடல்களைப்  பாடியபடி, ராஜராஜன் சிலையை சென்றடைந்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்..


திருக்கோயிலில்
ராஜராஜ சோழன், உலகமா தேவியரது திருமேனிகளின் முன்பாக புனித நீர் கலசங்கள் வைத்து சிவச்சாரியர்கள் சிறப்பு யாகம் நடத்தினர்..

தொடர்ந்து, ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும்
நாற்பத்தெட்டு மங்கலப் பொருட்களால் பேரபிஷேகம் நிகழ்த்தப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது..

தருமபுரம் வேத பாடசாலை மாணவர்களும்  தேவாரப் பாடசாலை மாணவர்களும் வேத, திருமுறை பாராயணம் செய்தனர்.
(மேலேயுள்ள படங்கள் காணொளியில் இருந்து எடுக்கப்பட்டவை)

மாலையில் சர்வ அலங்காரத்துடன் ஸ்வாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் திருவீதி எழுந்தருளினர்..

ராஜராஜ சோழனும் உலகமாதேவியும் உடன் எழுந்தருள - நாகஸ்வர இன்னிசை, சிவ கண கயிலாய வாத்திய பேரொலியுடன் சதயத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது..
**
சிவபாத சேகரன் வாழ்க.. வாழ்க..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

16 கருத்துகள்:

 1. சிறப்பான காட்சிகள். வாழ்க ராஜராஜன் புகழ்; வளர்க ராஜராஜன் பெருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //வாழ்க ராஜராஜன் புகழ்..//

   அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. காணொளிகள் வந்தன. இங்கும் கண்டு மகிழ்ந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி. சகோட யாழ் வாசிப்பவர்கள் இப்போவும் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //சகோட யாழ் வாசிப்பவர்கள் இப்போவும் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது.//

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 3. நல்ல பகிர்வு. மீண்டும் தஞ்சை செல்லத் தூண்டுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. 10வது படம் எடுத்த இடம் எங்கு பார்த்தேன் என்பது நினைவிலில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோயிலின் எதிரிலுள்ள சாலை அது..

   அன்பின் நெல்லை..
   தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. சிறப்பான தரிசனம் வாழ்க வையகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ஜி..

   வாழ்க வளமுடன்..

   நீக்கு
 6. சதய திருவிழா படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. நேரில் பார்த்து தரிசனம் செய்த உணர்வு.
  பகிர்வுக்கு நன்றி.
  சிவபாத சேகரன் வாழ்க ! வாழ்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // நேரில் பார்த்து தரிசனம் செய்த உணர்வு..//

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. சதயத்திருவிழா பற்றியும் சகோட யாழ் பற்றியுமான தகவல்கள் சிறப்பாக இருந்தன. சதயத்திருவிழாவுக்கு நீங்கள் சென்றிருந்தீர்களா?

  பதிலளிநீக்கு
 8. // சதயத் திருவிழாவுக்கு நீங்கள் சென்றிருந்தீர்களா?.. //

  என்னால் செல்வதற்கு இயலவில்லை..

  படங்கள் fb ல் வந்தவை..

  அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..